Skip to main content

Posts

Showing posts from December, 2021

லம்பார் ஸ்பாண்டிலோஸிஸ்(lumbar spondylosis)

  முன்னுரை ல ம்பார் ஸ்பாண்டிலோஸிஸ்(lumbar spondylosis) எனப்படும் மருத்துவ பிரச்சினைகள் என்பது முதுகுப் பகுதியில் ஏற்படும் நீண்ட நாள் முதுகு வலி. இவ்வாறு ஏற்படும் முதுகு வலி முதுகு முள்ளெலும்பு பகுதியில்(vertebral coloum) உள்ள தட்டு அழுத்தப் படுவதினால்(disk compression) அல்லது முள்ளெலும்பு பகுதியின பிரதான பகுதி சற்று இடம் நகர்வதால(displacement) முதுகு வலி ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகின்றன. சில சமயங்களில் முதுகு தண்டு மற்றும் எலும்பு பகுதிகள் தொடர்சிதைவு(degeneration) ஆகும் போதும், முதுகெலும்பு தட்டு பகுதி, முதுகெலும்பு மூட்டு(facet joints) பகுதி தொடர்ந்து பிரச்சனைக்கு உள்ளாக்கப்படும் பொழுதும் முதுகு வலி ஏற்படுகிறது. ஸ்பாணடிலோஸிஸ் என்பதை முதுகு எலும்பு தேய்மானம்(osteoarthritis)  எ ன்று கூறலாம். இவ்வாறு முதுகு எலும்பு தேய்மானம்,  ல ம்பார்(lumbar vertebrae)  எனப்படும் கீழ் முதுகு எலும்பு பகுதிகள், மேல் முதுகு எலும்பு பகுதிகள்(thoracic vertebrae), மற்றும் கழுத்து முதுகெலும்பு(cervical vertebrae) பகுதிகள் போன்றவற்றை பாதிக்கலாம். பொதுவாக ஸ்பாண்டிலோசிஸ் எனப்படுவது வயது முதிர்வின்