Skip to main content

லம்பார் ஸ்பாண்டிலோஸிஸ்(lumbar spondylosis)



 முன்னுரை

ம்பார் ஸ்பாண்டிலோஸிஸ்(lumbar spondylosis) எனப்படும் மருத்துவ பிரச்சினைகள் என்பது முதுகுப் பகுதியில் ஏற்படும் நீண்ட நாள் முதுகு வலி. இவ்வாறு ஏற்படும் முதுகு வலி முதுகு முள்ளெலும்பு பகுதியில்(vertebral coloum) உள்ள தட்டு அழுத்தப் படுவதினால்(disk compression) அல்லது முள்ளெலும்பு பகுதியின பிரதான பகுதி சற்று இடம் நகர்வதால(displacement) முதுகு வலி ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகின்றன.

சில சமயங்களில் முதுகு தண்டு மற்றும் எலும்பு பகுதிகள் தொடர்சிதைவு(degeneration) ஆகும் போதும், முதுகெலும்பு தட்டு பகுதி, முதுகெலும்பு மூட்டு(facet joints) பகுதி தொடர்ந்து பிரச்சனைக்கு உள்ளாக்கப்படும் பொழுதும் முதுகு வலி ஏற்படுகிறது.

ஸ்பாணடிலோஸிஸ் என்பதை முதுகு எலும்பு தேய்மானம்(osteoarthritis) ன்று கூறலாம். இவ்வாறு முதுகு எலும்பு தேய்மானம், ம்பார்(lumbar vertebrae) எனப்படும் கீழ் முதுகு எலும்பு பகுதிகள், மேல் முதுகு எலும்பு பகுதிகள்(thoracic vertebrae), மற்றும் கழுத்து முதுகெலும்பு(cervical vertebrae) பகுதிகள் போன்றவற்றை பாதிக்கலாம். பொதுவாக ஸ்பாண்டிலோசிஸ் எனப்படுவது வயது முதிர்வின்(aging) காரணமாக மற்றும் எலும்புகளில் ஏற்படும் தொடர் சிதைவின் காரணமாக பல பேருக்கு ஏற்படுகின்றது.

ம்பார் ஸ்பாணடிலோஸிஸ் ஏற்படும்பொழுது முதுகு எலும்புகளை சுற்றி அமைந்துள்ள ஜவ்வு பகுதிகள்(vertebral ligaments) மற்றும் அதன் பகுதியில் அமைந்துள்ள குருத்தெலும்பு பகுதிகளும்(cartilage) பாதிக்கப்படுகின்றன. இவ்வாறு பாதிக்கப்படும் பொழுது முதுகெலும்புகளுக்கு இடையில் உள்ள இடைவெளி குறைந்து(decreased joint space), முதுகு எலும்பு தட்டு பகுதிகள் பிதுங்க(disc prolapse) காரணமாக அமைகின்றது. மேலும் இந்த ஜவ்வு பகுதிகள் தடிமனாக(thickening) மாறுவது மற்றும் முதுகு எலும்பு தட்டு பகுதியை சுற்றியுள்ள பகுதிகள் பாதிக்கப்படுகிறது.

முதுகெலும்பு பகுதியில் உள்ள சவ்வு பகுதிகள், தடிமன் ஆகும் பொழுது அல்லது தொடர்ந்து பாதிக்கப்படும் பொழுது கால்சியம் உப்புகள் தொடர்ந்து படிகின்றன(calcium deposition). இதனால் முதுகு தண்டுவடப் பகுதியில், நடுப்பகுதி சற்று சுருங்கி( spinal stenosis), நரம்பு கற்றைகள்(nerve bundles) பாதிக்கப்படுகின்றன. இவ்வாறு நரம்பு கற்றைகள் பாதிப்பு மற்றும் ஒவ்வொரு முதுகெலும்பு பகுதியிலும் இருந்து வெளியேறும் முதுகு தண்டுவட நரம்புகளும் அழுத்தப்படுகின்றன(spinal root compression).
ம்பார் ஸ்பாண்டிலோஸிஸ் மிகவும் அதிகமாக கீழ் முதுகு பகுதியை பாதிக்கின்றது. அதுவும் 40 வயது கடந்தவர்களை பாதிக்கின்றது. இதனால் இவர்களுக்கு வலியும்(pain), காலை நேர மூட்டு இறுக்கம்(morning stiffness) அல்லது கீழ்முதுகு பகுதி இறுக்கம் மிகசாதாரணமாகவே தென்படுகின்றது. ஏனென்றால் ம்பார் எனப்படும் கீழ்முதுகு தண்டுப்பகுதி உடலின் மேற்புற எடையை(upper body weight) தாங்குவதால், இவற்றில் மட்டுமே மிக அதிக அளவு முதுகெலும்பு பாதிப்புகள் ஏற்படுகின்றன. மற்றும் சில தவறான உடல் அசைவுகள்(improper movements), தவறான உடல் நிலைகள்(faulty posture) போன்றவைகளும் கீழ் முதுகு பகுதி(lumbar region) பாதிக்கப்படுவதற்கு காரணங்களாக சொல்லப்படுகின்றன.
சில நேரங்களில் வலி ஏற்படுவது பாதிக்கப்பட்டவர்கள் செய்யும் சிறு சிறு தவறுகளால்(minor mistakes) ஏற்படுகிறது. அவை நீண்ட நேரம் சம்மணங்கால் போட்டு அமர்வது(prolonged cross leg sitting), அல்லது நீண்ட நேரம் நின்று வேலை செய்வது(prolonged standing), கீழ் முதுகு பகுதியில் அழுத்தத்தைக் கொடுக்கின்றன. இவ்வாறு தொடர்ந்து அடிக்கடி குனிந்து நிமிர்ந்து(quick flexion and extension) வேலை செய்யும் பொழுதும், மேற்கூறிய காரணங்களினாலும் கீழ் முதுகு பகுதியில் அழுத்தம் ஏற்பட்டு, வலி அதிகரிப்பதற்கு காரணமாக அமைகின்றன.
ம்பார் ஸ்பாண்டிலோசிஸ் ஏற்படும்பொழுது முதுகெலும்பு ஜவ்வு பிதுங்குவது(disc proloapse), முதுகெலும்பு மூட்டு பகுதி தேய்மானம்(vertebral osteoarthritis) அல்லது முதுகெலும்பு வளர்ச்சி(abnormal bone growth - osteopytes) போன்றவைகளும் ஏற்படுகின்றன. இவ்வாறு ஏற்படும் சில பிரச்சனைகள் வலி போன்ற அறிகுறிகள் ஏதும் தெரியாமலே பாதிக்கப்படுகின்றது.
பொதுவாக முதுகெலும்பு தட்டு பகுதி பாதிக்கப்படும் பொழுது(disc involment), நரம்பு அழுத்தம்(nerve compression) அல்லது முதுகு தண்டுவடம் சுருக்கம்(narrowing of spnal canal) போன்றவை ஏற்படுகின்றன. இவை அனைத்தும் முதுகு வலி, சயாடிகா(sciatica) மற்றும் முதுகுப் பகுதியில் அசைவின்றி போவது(loss of spinal movements) அல்லது அசைவுகள் குறைவது. இதுபோன்ற ஆரம்பநிலை பாதிப்புகள்(acute stage problems) மருந்துகள்(medications), தளர்வு பயிற்சிகள்(relaxation exercise), இயன்முறை மருத்துவம்(physical therapy) மற்றும் ஓய்வு(rest) போன்றவைகள் கொடுக்கும் பொழுது சரி செய்யப்படுகின்றன. ஆனால் இதுபோன்ற பாதிப்புகள் அடிக்கடி ஏற்படும் பொழுது பிரச்சினைகள் சற்று அதிகமாகவே(severe involment) ஏற்படுகின்றன. அவ்வாறு ஏற்படும் பொழுது அறுவை சிகிச்சை(surgery) அளவுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.

 

நோய் பற்றிய விளக்கம்

பொதுவாக வயது முதிர்வின்(aging) காரணமாக உடலின் அனைத்து பகுதிகளிலும் உள்ள எலும்புகள் ,தொடர் சிதைவிற்கு உள்ளாக்கப்படும். அப்பொழுது முதுகு தண்டுவடப் பகுதியில் உள்ள முதுகெலும்பு தட்டுகள் வலிமை குறைந்து(decreased strength) தொடர்ந்து அடிபடுகின்றன(repeted injury). அவ்வாறு தொடர்ந்து அடிபடும் பொழுது மீண்டும் தன்னைத் தானே சரி செய்து(restoration) கொண்
டு, முதுகு எலும்பு தட்டுக்கள் தொடர்ந்து பாதிப்புக்குள்ளாகின்றன. இவ்வாறு தொடர்ந்து பாதிப்புக்குள்ளாகபடும்பொழுது ஏற்படும் தொடர் சிதைவு எலும்புகளில் மற்றும் முதுகெலும்பு பகுதியில் உள்ள கனிம சத்துக்கள்(minerals) குறைதற்கு காரணமாக அமைகின்றன.

மிக முக்கியமாக வயது முதிர்வின் காரணமாக உடலில் ஏற்படும் நீர் சத்து குறைபாடு(dehydration), எலும்பு பகுதிகளிலும் மற்றும் குருத்தெலும்பு பகுதிகளிலும் பாதிப்புக்குள்ளாகின்றன. அவ்வாறு நீர்ச்சத்து குறையும்பொழுது எலும்பு பகுதிகள் மிகவும் கடினமாகவும், அசைவின்றி மற்றும் சுருங்கிய வடிவத்திலும், மாறுகின்றன. இவை எலும்புகள் மட்டுமின்றி அவற்றைச் சுற்றியுள்ள திசுக்கள், எலும்புகள், சவ்வுகள், குருத்தெலும்புகள் போன்ற அனைத்தையும் பாதிப்புக்குள்ளாகி, அசைவுகள் இன்றி இறுக்கத்தை(stiffness) போன்ற பாதிப்புகளை உண்டாக்குகின்றன. இதனால் முதுகெலும்பு பகுதியில் நடுப்பகுதியில் உள்ள முதுகெலும்பு தட்டு, தனது முக்கிய செயலான உடல் அதிர்வை(shock absorb) தாங்குதிலிருந்து செயலற்றுப் போகின்றன.
இவை அனைத்தும் அடிக்கடி நடக்கும் பொழுது முதுகு எலும்பு தட்டு பிதுங்கி வெளியில் வருவதற்கு காரணமாக அமைகின்றன. இதனாலேயே முதுகு எலும்பு பகுதி அல்லது முதுகு முள்ளெலும்பு பகுதி இயற்கையான நிலையில் இருந்து சற்று மாறுபட்ட நிலைக்கு(abnormal posture) கொண்டு செல்லப்படுகின்றன.

 

ஒவ்வொரு முதுகெலும்பு பகுதிகள் அனைத்தும் 4 மூட்டுப் பகுதியை கொண்டுள்ளன இவை அனைத்தும் ஒருங்கிணைந்து மூடு பகுதியில் அல்லது முள்ளெலும்பு தொடர் பகுதியில் அசைவுகள் அனைத்தையும் ஏற்படுத்துகின்றன அவைகள் முன்பக்கமாக, பின்பக்கமாக வளைவது மற்றும் வலது, இடது புறங்களில் சுற்றுவது. இதுபோன்ற பல்வேறு கோணங்களில் எலும்புகள் அசையும் பொழுது மேலே கூறிய நான்கு மூட்டுப் பகுதிகள் ஒருங்கிணைந்து வேலை செய்ய வண்டும். ஆனால் இந்த  ஸ்பாண்டிலோஸிஸ் பாதிப்புகள் ஏற்படும் பொழுது இந்த அசைவுகள்(movement disability) சற்று பாதிக்கப்படுகின்றன.
இவ்வாறு முதுகெலும்பு பகுதிகளில் உள்ள மூட்டுகள் தொடர்ந்து  பாதிக்கப்படுவதால், எலும்புகள் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள அனைத்து அமைப்புகளும் சரியான சத்துக்கள் கிடைக்காமல், பாதிக்கப்பட்ட பகுதிகள் தடிமனாக, மிகவும் கடினமாக மாற்றப்பட்டு வலி, அசைவின்மை போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றன.
தொடர் சிதைவுகள் நடக்க ஆரம்பிக்கும் பொழுது எலும்புகள் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள அமைப்புகள் அனைத்தும், வலிமை இழந்து, உடல் மேற்பகுதியை தாங்குவதற்கு வலிமையின்றி, வேலை செய்ய ஆரம்பித்த சிறு நேரங்களிலேயே வலி, இறுக்கம்(stifness) போன்றவற்றை ஏற்படுத்துகின்றன.
மேலும் இந்த தொடர் சிதைவு ஏற்படும்பொழுது சில நேரங்களில் தவறான அல்லது அதிக எலும்பு வளர்ச்சி ஏற்படுகிறது. இவைகள் மூட்டு எலும்பு தேய்மானம் ஏற்படும் போது, ஏற்படக்கடிய சில பிரச்சினைகள் சில நேரங்களில் ஏற்படும் அதிக எலும்பு வளர்ச்சி, முதுகு தண்டுவடத்தில் உள்ள நரம்பு மற்றும் நரம்பு கற்றைகளை பாதிப்புக்குள்ளாகிறது.
மேலே கூறிய அனைத்து பிரச்சினை பிரச்சினைகளிலும் முதுகு எலும்பு பாதிப்புகள் மிக அதிக அளவில் ஏற்படும் பொழுது நரம்பு அழுத்தங்கள் ஏற்படுகின்றன, மற்றும் குறைவான ரத்த ஓட்டமும் ஏற்படுகின்றன. இவ்வாறு பிரச்சினைகள் மிக அதிக அளவில் ஏற்படும்பொழுது, தசை வலிமை இன்மை, உணர்ச்சிகள் பாதிப்பு, மற்றும் முதுகு தண்டுவடப் பகுதி இறுக்கம், போன்றவை ஏற்படுகின்றன.
காரணங்கள் மற்றும் ஆபத்து காரணிகள்:
வயது 
பொதுவாக வயது ஆகும்  பொழுது உடம்பு மற்றும் எலும்பு மூட்டு பகுதிகளில் ஏற்படும் பல பிரச்சனைகளை கொண்டது. பொதுவாக 40 வயது கொண்டவர்களை எலும்பு தேய்மானம்,  குணப்படுத்தும்(recovery rate) அல்லது குணமாகும் திறன்(strength of recovery) மற்றும் அவற்றின் குணம் ஆகும் காலம்(recovery duration) போன்றவை மிக குறைவாகவே இருக்கும். அதனாலேயே ம்பார்  ஸ்பாண்டிலோஸஸ் 40 வயது கடந்தவர்களையே அதிகமாக பாதிக்கப்படுகிறது.
உடல் பருமன்
அதிக உடல் எடை கொண்டவர்கள் முதுகு தண்டுவடப் பகுதியில் மிக அதிகமான அழுத்தம் கொடுக்கப்படுவதால், கீழ் முதுகு பகுதி மிக விரைவாக தேய்மானத்திற்கு ளக்கப்படுகிறது. இதனால் மற்றவர்களை விட உடல் பருமன் கொண்டவர்கள் மிக வேகமாக பாதிக்கப்படுகின்றனர்.
நீண்ட நேரம் இருக்கையில் அமர்ந்து இருப்பவர்கள், நீண்ட நேரம் நாற்காலி அல்லது இருக்கையில் அமர்ந்து, நீண்ட நேரம் வேலை செய்பவர்களுக்கு, முதுகு தண்டு பகுதியை சுற்றி அமைந்துள்ள தசைகள் வெகு விரைவாக  வலிமை குறைக்கப்பட்டு, முதுகு எலும்பு தேய்மானம் மற்றும் பாதிப்புகளுக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.
அடிபடுதல்(Injury)
விபத்து அல்லது கீழே விழும் பொழுது முதுகெலும்பு பகுதியில் ஏற்படும் சிறுசிறு பாதிப்புகள் சரியாக குணமாகுதற்குள்ளாக, அடிபடும் பொழுது(repeted injury) ம்பார் ஸ்பான்டிலோசிஸ் ஏற்படுகிறது.
பரம்பரை மற்றும் குடும்ப வரலாறு
இவற்றினால் ஏற்படக்கூடிய கீழ் முதுகு தண்டு வலி மிகவும் குறைவு
மிக அதிக வலிமையான வேலை செய்பவர்கள்(hard workers)
தொடர்ந்து மிக அதிக எடை தூக்க கூடிய அல்லது சிரமமான சில வேலை செய்பவர்கள், மூடை தூக்கும் தொழிலாளிகள் போன்றவர்களுக்கு, ஓய்வின்றி வேலை செய்யும் பொழுது, முதுகு எலும்பு பகுதிகள் நீர்ச்சத்து குறைந்து, முதுகெலும்பு பகுதியை சுற்றியுள்ள தசைப்பகுதிகள் இறுக்கம் ஏற்பட்டு(paraspinal muscle spasm), ஸ்பாண்டிலோசிஸ் ஏற்படுகின்றன.
அதிக பாரம் தூக்குவது போன்றவர்கள்(heavy weight lifters) 
அதிக எடை அல்லது பளு தூக்குவர்கள போன்றவர்கள் வேலைகள் செய்யும் பொழுது சில தவறான நிலையில்(improper position) எடையை தூக்கும் போதும் ஸ்பாண்டிலோசிஸ் பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
உடல் வெளிப்புறத்தில் ஏற்படக்கூடிய பிரச்சினைகள்(external causes) 
கீழ் முதுகெலும்பு பகுதியை சுற்றியுள்ள தசைகள் தொடர்ந்து அடிபடும்போது(repeted spinal muscle injury) வலிமை இழந்து, ஸ்பாண்டிலோசிஸ் பிரச்சனைகள் ஏற்படலாம்.
புகைப்பிடித்தல்
தொடர்ந்து நீண்டகால புகைப்பிடித்தல் பழக்கம் உள்ளவர்களுக்கு, நுரையீரல் மற்றும் மார்புக்கூடு பகுதிகள் பாதிக்கப்படுகின்றன. இதன் எதிரொலியாக முதுகெலும்பு முள் எலும்பு தொடர் பகுதியில் முதுகு கூன் போடுதல்(thoracic hyposis) போன்றவை ஏற்படும் பொழுது எதிர்வினையாக கீழ் முதுகு எலும்பு பகுதியில் வளைவுகளில்(compensatory lordosis) மாற்றம் ஏற்படுகின்றன. அவ்வாறு வளைவுகளில் மாற்றம் ஏற்படும் பொழுதும் ஸ்பாண்டிலோஸிஸ் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன.
மேலும் பல
அறிகுறிகள்(symptoms)
பொதுவாக ம்பார் ஸ்பாண்டிலோஸிஸ் பல வகையாக வகைப்படுத்தப்படுகின்றன. அவை முதுகெலும்பு தட்டு பிதுங்குதல்(dbulging), சயாடிக்கா, மற்றும் முதுகு தண்டுவட நரம்பு கற்றை சுருங்குதல்(spinal stenosis), முதுகு எலும்பு நகர்தல்(spondylolisthesis), மற்றும் தொடர் சிதைவின் காரணமாக முதுகெலும்பு வளைவு(scoliosis).
முதல் அறிகுறியாக(primary symptom) வலி ஏற்படுகிறது. இவ்வாறு ஏற்படும் வலி கீழ் முதுகுப்பகுதி(lumbar region), புட்டம்(buttok), தொடை பின்பகுதி(back of the thigh) மற்றும் கால் பின்புற தசை(calf muscle) வரை உணரப்படலாம். சில நேரங்களில் வலி விட்டு விட்டு உணரப்படலாம்.
முதுகு தண்டுவட எலும்பு மற்றும் நரம்பு கற்றை சுருங்கும் பொழுது வலி மற்றும் தொடர் வலி(continuous pain), தசை வலுவின்மை, உணர்ச்சியற்று போதல் சிறுநீர் மற்றும் மலம் கழித்தலில் பிரச்சனைகள் போன்றவைகள் ஏற்படலாம்.

மேலே கூறப்பட்ட அறிகுறிகள் அனைத்தும் மற்றும் உணர்ச்சிகள் பாதிப்பு, நடைகளில் பாதிப்பு போன்றவைகளும் ஏற்படலாம்.
முதுகு தட்டு அழுத்தம் ஏற்படும்பொழுது வலி, வலுவின்மை, உணர்ச்சி மாறுபாடு போன்றவைகளும் ஏற்படலாம்.
நோய் பரிசோதனை மற்றும் கண்டறிதல்....
x-ray அல்லது சிடி(CT), எம்ஆர்ஐ(MRI) எனப்படும் ஸ்கேன்கள் பரிந்துரைக்கப்படும் பொழுது பாதிக்கப்பட்ட முதுகெலும்பு பகுதியை நேரடியாக பார்க்க முடியும் மேலும் பாதிப்பை பற்றிய முழு தகவல்களையும் நாம் அறிந்து கொள்ள முடியும்.
சிடி மற்றும் எம்ஆர்ஐ ஸ்கேன்கள் எடுக்கப்படும் பொழுது முதுகுத்தண்டு பாதிப்பு சவ்வுகளின் பாதிப்பு எலும்பு தேய்மானம் மற்றும் நரம்புகளின் பாதிப்புகளை கண்டறிய இயலும்.
முதுகு தண்டில் பாதிப்புகளை அறிவதற்கு முதுகுத்தண்டு திரவத்தை(cerero spinal fluid) எடுத்து பரிசோதனை செய்யும் பொழுது ஸ்பாண்டிலோசிஸ் தவிர மற்ற வேறு ஏதாவது பாதிப்புகள் இருப்பதை கண்டறிய இயலும்.
மருத்துவம் மற்றும் மேலாண்மை...
ஸ்பாண்டிலோசிஸ் பாதிக்கப்பட்டவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பாதிக்கப்பட்டிருக்கலாம். மேலும் ஆரம்ப நிலையாக இருந்தால் அன்றாட வேலைகள் மற்றும் பயிற்சிகள் உடல் நிலைகளை மாற்றி அமைப்பது மூலமாக, இயன்முறை பயிற்சிகளை செய்வதன் மூலமாக, மருந்துகள் எடுத்துக்கள்வதும் மூலமாக, மிக அதிகம் பாதிப்பை ஏற்படுத்துவதை தடுக்க இயலும்.
நாம் தினந்தோறும் செய்யும் அன்றாட வேலைகள் மற்றும் அலுவலகங்கள், இருப்பிடங்கள் போன்றவற்றை மாற்றி அமைக்கும் பொழுது பாதிப்புகள் வராமல் தடுக்க இயலும்.
இயன்முறை மருத்துவர்கள் பயிற்றுவிக்கப்படும் பயிற்சிகள் தசை வலிமையை ஏற்படுத்தக்கூடிய பயிற்சிகள்(strengthening), உடல் பருமன் குறைய செய்யக்கூடிய பயிற்சிகள், போன்றவற்றை தொடர்ந்து செய்யும் பொழுது, வாய்ப்புகள் குறைவது மட்டுமின்றி திரும்ப பாதிப்புகள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள முடியும். இதனால் உடல் வலிமையை அதிகரிப்பது மட்டுமல்லாமல் உடலிலுள்ள தசைகள் அனைத்தும் வலுப்பெற்று மூட்டுகள் அனைத்தும் இயற்கையான முழுமையான அசைவுகளை பெற்று நம் அன்றாட வேலைகளை இயல்பாக செய்ய இயலும்.


ஸ்பாண்டிலோசிஸ் பாதிப்பு சற்று அதிகமாக இருக்கும் சமயத்தில் இடுப்பு அணைப்பு பெல்ட்(lumbo sacral belt) அல்லது கவசம் போன்ற உபகரணங்களை பயன்படுத்தப்படும் பொழுது, வலி அதிகமாக அதிலிருந்து காப்பாற்ற படுகின்றனர்.
மேலும் பாதிப்பு அதிகமாக அல்லது மிக அதிகமாக இருக்கும் சமயங்களில் மருந்துகள், வலி குறைக்க பயன்படுத்தும் மருந்துகள், வலி நிவாரணிகள், தசை தளர்வு மருந்துகள் மற்றும் ஓய்வு தேவைப்படுகிறது. மற்றும் இவற்றோடு இயன்முறை மருத்துவம் களான அல்ட்ரா சவுண்ட் சிகிச்சை(ultrasound therapy), வெப்ப சிகிச்சை(heat therrapy) மற்றும் மெழுகு சிகிச்சை(wax therapy) போன்றவை கொடுக்கும் பொழுது வலி நிவாரணம் மிக விரைவாக கிடைக்கிறது.
வலி மிக மிக அதிகமாகவும் மற்றும் தசை வலுவழந்து,
 சிறுநீர், மலம் கழித்தலில் பாதிப்பு ஏற்படும்  பொழுது மேலே கூறிய சிகிச்சைகள்  பலனளிக்காமல் போகும்பொழுது, அறுவைசிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது. அவ்வாறு அறுவை சிகிச்சை செய்து முடித்து சில காலங்களில் சரியான இயன்முறை மருத்துவம் மற்றும் பயிற்சிகளை தொடர்ந்து செய்யும் பொழுது இயன்முறை மருத்துவர்கள் கூறும் அறிவுரைகளை சரியாக கடைப்படிக்கும் பொழுது பாதிக்கப்பட்டவர்கள் சில காலங்களிலேயே பாதிப்புகளிலிரந்து விடுபட்டு தமது அன்றாட தினசரி வேலைகளை செய்யும் அளவுக்கு முன்னேற்றம் அடைய முடியும். மேலும் அறிவுரைகள் மற்றும் நோய் பற்றிய தகவல்கள் சரியாக கொடுக்கப்பட்டு தனது அன்றாட வேலைகளை செய்யும் அளவுக்கு இவர்களை முன்னேற்றமடய செய்யப்படுகிறார்கள்.
இயன்முறை மருத்துவம் மற்றும் மறுவாழ்வு சிகிச்சைகள்.....
நோக்கம்
வலியை குறைப்பது மற்றும் வலியிலிருந்து விடுபடுவது.
இயற்கையான முழுமையான முதுகெலும்பு மூட்டுப்பகுதியில் அசைவு. 
முதுகெலும்பு பகுதியை சுற்றியுள்ள தசைகளை வலிமை அடைய செய்வது.
முதுகெலும்பு மற்றும் அனைத்து மூடு அசைவுகளை சரியான நிலையில் பயன்படுத்துவது மற்றும் அதைப்பற்றிய தகவல்களை அளிப்பது.
ஸ்பாண்டிலோசிஸ்க்கான மூல காரணங்களை ஆராய்ந்து சரி செய்வது போன்றவை.
ஆரம்ப நிலை மேலாண்மை...
வலியை உணரும் பொழுது உடலுக்கு ஓய்வு மற்றும் தேவையான பாதுகாப்பான மூட்டு அசைவுகளை கொடுக்க வேண்டும். மிக முக்கியமாக இவர்களுக்கு கொடுக்கப்படும் ஓய்வு தசை இறுக்கத்திலிருந்து விடுபட்டு சிறிது நாட்களில் வலியில் இருந்து விடுபடுகிறார்கள்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்கப்படும் ஓய்வு உடலின் அனைத்து பகுதிகளுக்கும் தேவையான அளவு தலையணை, மண் மூட்டைகள் போன்றவை கொடுக்கப்பட்டு தசை இறுக்கங்கள் குறைக்கப்படுகின்றன.
முதுகு பாதிப்பு அவற்றைப் பற்றிய கல்வி மற்றும் தகவல்கள் பாதிக்கப்பட்டவர்கள்டைய உடல் மொழி(body longuage) மற்றும் ஒவ்வொரு நிலையும் மற்றும் வலியை குறைக்கக்கூடிய நிலையினை பயிற்றுவிக்க வேண்டும்.
மேலும்  இயன்முறை மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் வெப்பக் கதிர்வீச்சு சிகிச்சை(Heat radiation therapy), அல்ட்ராசவுண்ட் மற்றும் மின்னணு சிகிச்சைகள் போன்றவை வலியைக் குறைப்பதற்கு தசை இறுக்கங்களை குறைப்பதற்கு படுத்தப்படுகின்றன.
மற்றும் தசை தளர்வு சிகிச்சைகள் ஓய்வுநலை மற்றும் தண்ணீர் சிகிச்சை போன்றவற்றை பயிற்றுவிக்கப்படுகின்றன.
இயன்முறை மருத்துவத்தின் பயன்படுத்தப்படும் டிராக்சன்(Lumbar traction) எனப்படும் முதுகு தண்டு பகுதியை நீட்சி படுத்தும் ஒருவகையான மருத்துவமும் கொடுக்கப்படுகிறது. 
இவை அனைத்தும் கொடுக்கப்பட்டு வலி குறைக்கப்படுகிறது.
 முதுகெலும்பு மூட்டுப் பகுதிகள் வலி வராமல் அல்லது வலியை தாங்க கூடிய நிலையில் மிக சிறிய அளவிலேயே மூட்டு அசைவுகள் கொடுக்கப்படுகின்றன.
இடைக்கால மற்றும் நீண்டகால சிகிச்சைகள்....

மேலே கூறிய சிகிச்சைகள் அனைத்தும் கொடுக்கப்பட்டு 
வலி குறைக்கப்பட்ட பின்பு முதுகு எலும்பு மூட்டு பகுதியில் கொஞ்சம் கொஞ்சமாக அசைவுகள் கொடுக்கப்பட வேண்டும். அவ்வாறு அசைவுகளோடு சிறு சிறு பயிற்சிகள் மற்றும் ஒவ்வொரு உடலின் நிலை மற்றும் அதே நிலையில் பயிற்சிகள் போன்றவை பயிற்றுவிக்கப்படுகின்றன.
பயிற்சிகளை தொடர்ந்து செய்யும்பொழுது உடலின் பாதிக்கப்பட்ட பகுதிகள் முக்கியமாக முதுகு தண்டு பகுதி பழைய நிலைக்கு திரும்ப ஆரம்பிக்கின்றன. மூட்டு அசைவு பயிற்சிகள் வலியற்ற நிலையில் கொடுக்கப்பட்டு ஒரு நிலையில் தசை நீட்சி(stretching) பயிற்சிகளும் கொடுக்கப்படுகின்றன.
அடுத்ததாக தசை வலிமையை அதிகப்படுத்தும் பயிற்சிகளும் கொடுக்கப்படுகின்றன.
மேலே கூறிய அனைத்து பயிற்சிகளும் சரிவர கொடுத்து முடித்த பின்பு முதுகு தண்டுவட பகுதி மற்றும் உடலின் மூட்டுப் பகுதிகள் அனைத்தும் சரியான நிலையில் அசைவுகளை ஏற்படுத்துவது போன்றவை கற்றுத்தரப்படுகின்றன. உடலின் மூட்டுப் பகுதியின் அசைவுகள் சரியாக இருக்கும் பொழுது சரியான நிலைகளும் நடைபெற பயிற்சிகளும் கொடுக்கப்படுகின்றன.




THANK YOU...... 

Comments

Unknown said…
Nice article in tamil and simple to understand.
Anonymous said…
Tamila nalla irukku. Irunthalum some words purila.



Nandry

Popular posts from this blog

குதிகால் வலி (அ) குதிகால் வாதம்(அ) ஹீல் ஸ்பர்-Heel spur

  வரையறை / விளக்கம்: குதிகால் வாதம் என்பது குதிக்காலெலும்பு முனை (calcaneal tubercle) மீது ஏற்படும் ஒரு போலியான எலும்பு வளர்ச்சி (calcification). அது உருவாகும் போது குதிகால் பின்புறத்தில் அல்லது கீழ்புறத்தில் வலி ஏற்படுகிறது. பொதுவாக இவை குதிகால் வாதம், குதிகால் வலி, ஹீல் ஸ்பர் என அழைக்கப்படுகிறது.     மருத்துவரீதியான உடற்கூறியல்: பாதத்தின் உள்புறத்தில் ஏராளமான தசைகள், கால் தசைகள் உள்ளன. குறிப்பாக, இவற்றில் ஏற்படும் அசாதாரணமான அதிர்ச்சியால் பழுது(injury) ஏற்படுகிறது. இந்த பழுது, வீக்கத்திற்கு(inflammation) வழிவகுக்கிறது. மீண்டும் மீண்டும் ஏற்படும் அதிகப்படியான அதிர்ச்சி பாதத்தின் உள்புற தசைகளில் ஒரு போலியான எலும்பு வளர்ச்சி (calcification) ஏற்படுகிறது.       பண்புகள் / மருத்துவ விளக்கக்காட்சி : குதிகால் வலி ஒரு பொதுவான பாத பிரச்சனை, ஆனால் ஹீல் ஸ்பர் குதிகால் வலிக்கு ஒரு முக்கிய காரணமாக கருதப்படுவதில்லை. பாதத்தின் உள்புறத்தில் கால் தசைகளில் நீண்ட கால அழுத்தம் ஏற்படுவதால் ஒரு போலியான எலும்பு வளர்ச்சி ஏற்படுவதோடு, மிகுந்த வலி உருவாகலாம். பெரும்பாலான குதிகால் வலி நோயாளிகள் நடுத்தர வயதினராக

முதுகு வலி மற்றும் முதுகு தண்டுவட வலி உள்ளவர்களுக்கு கடைபிடிக்க வேண்டிய சில வழிமுறைகள்....

    முதுகு வலி மற்றும் முதுகு தண்டுவட வலி உள்ளவர்களுக்கு கடைபிடிக்க வேண்டிய சில வழிமுறைகள் ....     பொதுவாக முதுகு வலி என்பது இன்றைய காலகட்டத்தில் பல பேருக்கு மிக அதிகமாகவே காணப்படுகிறது. இவ்வாறு வலி இருக்கும் பொழுது என்ன மாதிரியான வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்பதை கீழே விரிவாக பார்க்கலாம்...   பொதுவாக முதுகு வலி ஆரம்பிக்கும் பொழுது அவற்றை உதாசீனப்படுத்தாமல் அருகில் உள்ள மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது மிகவும் முக்கியம். மேலும் முதுகு வலி ஏற்படும் பொழுது அவற்றுக்கு தேவையான மருத்துவம்(medical management), இயன்முறை மருத்துவம்(physiotherapy treatment), பயிற்சிகள்(exercises) அல்லது அறுவை சிகிச்சை(surgery) மற்றும் புனர்வாழ்வு சிகிச்சைகள்(Rehabilitation) போன்றவை தேவைப்படலாம். மேலே கண்ட மருத்துவத்தில் ஏதாவது ஒன்றை எடுத்துக் கொள்ளும் பட்சத்தில் மேலும் முதுகு வலி வராமல் பாதுகாத்துக் கொள்ளவும், நமது அன்றாட வேலைகளை தொடர்ந்து செய்யவும், மருத்துவ உபகரணங்களை பயன்படுத்திக் கொள்ளவும் சில வழிமுற

எவ்வாறு கோடைகாலங்களில் உடலில் ஏற்படும் நீர்ச்சத்து இழப்புகளை தவிர்ப்பது....

  கோடைகாலங்களில் உடலில் ஏற்படும் நீர்ச்சத்து குறைபாடுகளை குறைப்பது அல்லது காப்பது எவ்வாறு.... முன்னுரை: பொதுவாக கோடை காலங்களில் உடலில் உஷ்ணம் அதிகமாகும் பொழுது உடலில் உள்ள நீர் சத்துக்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்குகிறது. அதனால் அந்த நீர்ச்சத்து இழப்பு மற்றும் அதனால் ஏற்படும் பிரச்சனை தவிர்ப்பதற்கு, உடலில் நீர்ச்சத்து இழப்பு ஏற்படாமல் காப்பது மிகவும் அவசியம்.  அதற்கான சில குறிப்புகள் கீழே தரப்பட்டுள்ளன..... தேவையான அளவு நீர் அருந்துவது... அதாவது உடலுக்கு தண்ணீர்  மிகவும் இன்றியமையாதது. இது உடலுக்கு அவ்வப்போது தாகம் எடுக்கும் பொழுது நீர் அருந்துவது உடலில் நீர்ச்சத்து இழப்பை தடுக்கிறது. மேலும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவருக்கும் உடலில் நீர் சத்து இழப்பு சீராக இருப்பது கிடையாது. ஏனென்றால் ஒவ்வொருவருக்கும் உடல் உழைப்பை பொறுத்து, உடலில் ஏற்படும் வியர்வை மற்றும் உடல் வெப்பம் போன்றவை மாறுபடுகின்றது. அதனால் உடலுக்கு தேவையான அளவு நீர் அருவது அருந்துவது மிகவும் இன்றியமைதாக  உள்ளது. உடற்பயிற்சி செய்வதற்கு முன்னும் பின்னும் நீர் அருந்துவது... உடற்பயிற்சி செய்யும் பொழுது உடலில் ஏற்படும் நீர்ச்சத்து