
Dr. M. RAJESH, PT, B.P.T, M.P.T(cardio-pulmonary)
SRIKUMARAN PHYSIOTHERAPY CLINIC & FITNESS CENTER
முன்னுரை:
பெல்ஸ் பால்சி என்பது ஒருவகையான முகவாதம் ஆகும். இது பாதிக்கப்பட்டவர்களுக்கு முகத்தில் உள்ள தசைகள் இயங்க முடியாமல், அல்லது முகத்திலுள்ள தசைகளை இயக்க முடியாமல் போகலாம். இந்த அறிகுறிகள் முகத்தின் வலது அல்லது இடது புறத்தில் வரும். பொதுவாக அறிகுறிகள் தசை சுருங்குதல், தசை வலுவின்மை, தசை அசைவின்மை, போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். இதனால் ஏற்படும் அறிகுறிகள் நாக்கில் உணர்வு மாற்றம், காது பகுதியை சுற்றி வலி இருப்பது, சப்தம் அதிகமாக உணர்வது. மேலும் இதுபோன்ற உணர்வுகள் அல்லது அறிகுறிகள், குறைந்தது 24 முதல் 48 மணி நேரத்தில் தென்படலாம்.
(pic)
பெல்ஸ் பால்சி பாதிக்கப்பட்ட ஒரு நபர் வாய் அசைக்கும் பொழுது வாய் ஒருபுறம் அதிகமாக இழுப்பது(mouth deviation), புருவங்களை தூக்கும் பொழுது புருவங்களை தூக்குவதில் சிரமம் இருக்கும். பொதுவாக பெல்ஸ் பால்சி அறிகுறிகள் ஏற்படுவதற்குரிய காரணங்கள் சரியாக அறியப்படவில்லை. ஆனால் சர்க்கரை நோய், மேல்புற மூச்சு குழாய் நோய்த்தொற்று(Upper respiratory tract infection) போன்றவை ஆபத்து காரணிகளாக உள்ளன. இதனால் நரம்பு மண்டலத்தில் கிரேனியல் நரம்பு ஏழாவது நரம்பு (7th cranial nerve) பகுதி பாதிக்கப்படும். இந்த ஏழாவது நரம்பு முகத்திலுள்ள தசைகளுக்கு, மூளையில் இருந்து சமிக்கைகளை கொண்டு செல்லும் வேலையை செய்கிறது. இதனால் வைரஸ் நோய் தொற்று ஏற்பட்டிருந்தால் நரம்பு பகுதி வீக்கத்துடன்(inflammation) காணப்படும். இதனால் எலும்புகளின் கால் வழியாக செல்லும்பொழுது நரம்பு அழுத்தப்படுகிறது(compression). இதனால் முகத்தில் உள்ள தசைகளில் வலிமை குறைவதற்கு வாய்ப்புகள் உள்ளன. மேலும் புற்றுநோய் பக்கவாதம் மியாஸ்தினியா கிராவிஸ்(Myasthenia gravis), லைம் நோய்(Lyme's disease) போன்றவைகள் மிக அரிதாக முக வாதத்தை உருவாக்குகின்றன.
இதுபோன்ற பாதிப்புகள் வெகுவிரைவிலேயே சரி செய்யப்படுவதாக கூறப்படுகின்றன. கார்ட்டிகோ ஸ்டீராய்டு(corticosteroids) எனப்படும் மருந்துகள் மற்றும் வைரல் நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள்(viras antibiotics) நல்ல முன்னேற்றத்தை தருவதாக கூறப்படுகின்றன. முக்கியமாக கண் பாதிப்பு, கண் உலர்ந்து போதல், போன்றவை அதிகமாகாமல் காக்கப்படவேண்டும். மற்ற அறிகுறிகள் 14 நாட்களில், ஆறு மாதங்கள் காலத்தில் சரியாவதற்கு வாய்ப்புகள் உள்ளன. பொதுவாக பெல்ஸ் பால்சி என்பது 70% வருவதாக சொல்லப்படுகிறது. மேலும் இது பத்தாயிரம் பேரில் ஒருவருக்கு பாதிக்கப்படுவதாக கணக்கிடப்படுகிறது. இது பொதுவாக 15 முதல் 60 வயதுள்ள ஆண்கள், பெண்கள் அனைவரையும் பாதிக்கிறது.
காரணங்கள்:
முக நரம்பு அல்லது கிரேனியல் ஏழாவது நரம்பு, மூளை தண்டு அல்லது புறணி பகுதியிலிருந்து வெளியேறி காதுக்கு அருகில் ஆரம்பித்து முகத்திலுள்ள தசைகளுக்கு தனது சமிக்கைகளை அனுப்புவதும் பெறுவதும் போன்ற வேலைகளை செய்கிறது.
பொதுவாக வைரஸ் நோய் தொற்று, பெல்ஸ் பால்ஸி நோய் உருவாக்குகிறது. மற்றும் நரம்பு அடிபடுதல் சில சூழ்நிலை காரணிகள்(குளிர்ந்த காற்று, பனி பருவகால கோளாறு), சில மன அழுத்தப் பிரச்சினைகள், போன்றவை இருக்கலாமென்று கூறப்படுகிறது.
நோய் பரவும் விதம் அல்லது உருவாகும் விதம்:
பெல்ஸ் பால்சி என்பது கிரேனில் ஏழாவது நரம்பு பாதிக்கப்படுவதால் உருவாகும் பிரச்சனை. இதனால் முகத்தில் உள்ள தசைகள் முக பாவனைகள்(facial expression), இயக்கங்கள், உணர்ச்சிகள், போன்றவை பாதிக்கப்படுகின்றன. பொதுவாக இந்த முக நரம்பு சில நோய் தாக்கங்களினால் வீக்கம் ஏற்படும், மற்றும் இதனால் சுற்றியுள்ள எலும்பு பகுதி, இதன்மீது அழுத்தத்தை உருவாக்கும். அதனால் இந்த நரம்பு பகுதில் சமிக்கைகள் செல்வது குறைக்கப்படுகிறது, அல்லது முழுவதுமாக தடைபடுகிறது. பொதுவாக இதற்குரிய காரணங்களாக புற்றுநோய் கட்டி, மூளை உறை நோய்தொற்று, பக்கவாதம், சர்க்கரை நோய், தலைக்காயம், மற்றும் முக நரம்பில் ஏற்படும் சில நோய்கள் போன்றவை முக நரம்பை பாதிக்கின்றன. மேலும் சிலருக்கு முகவாதம் ஒரு அல்லது இரண்டு புறமும் இருக்கலாம். மேலும் சில வைரஸ் நோய்த்தொற்றுகள், நோய் செல்களை சிறிது சிறிதாக சிதைவடைய செய்கின்றன. இதனால் நரம்புகளைச் சுற்றி நீர் கோர்த்தல், வீக்கம், நரம்பு அழுத்தம் உருகுவது போன்றவை ஏற்படுகின்றன.
அறிகுறிகள்:
பெல்ஸ் பால்சி அறிகுறிகள் ஒரு பக்கத்தில் முக தசைகள் பாதிக்கப்படும் இவை 24 மணி நேரத்தில் இருந்து 72 மணி நேரத்திற்குள் அறிகுறிகள் தென்படுகின்றன. முகத்தில் அல்லது முகத் தசைகளை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நரம்புகள் சில குறிப்பிட்ட முக்கியமான வேலைகளைச் செய்கின்றன. அவை கண் இமைகள் மூடுவது, கண்கள் சிமிட்டுவது, வாய் சிரிப்பது, புருவத்தை தூக்குவது, கண்களில் கண்ணீரை உருவாக்குவது, வாயில் எச்சிலை உருவாக்குவது, போன்ற வேலைகளைச் செய்கின்றன. முக்கியமாக நாக்கில் மூன்றில் இரண்டு பங்கு இப்பகுதியில் சுவை உணர்ச்சியை கட்டுப்படுத்துகிறது. இதனால் மேலே சொல்லப்பட்ட அனைத்து முக்கியமான வேலைகளும் மற்றும் தசைகளும் தனது வேலைகள் தற்காலிகமாக பாதிக்கப்படுகின்றன. சில பெல்ஸ் பால்சி நோய் மிக அதிகமாக பாதிக்கப்பட்டிருந்தால் தலைவலி, கழுத்து வலி, ஞாபக மறதி உடல் சமநிலை குறைபாடு, உடலில் ஒரு பக்க பாதிக்கப்படுதல், தசை வீக்கம், தசை நடுக்கம், போன்றவைகளும் பாதிக்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது.
(pic)
நோய் கண்டறிதல்:
பெல்ஸ் பால்சி நோயை கண்டறிவது மிகவும் சுலபமாக செய்யப்படுகிறது. இதற்கு ரத்த சோதனைகளும், நிழற்படங்களும், தேவைப்படுவது அரிதாக உள்ளது. இருந்தாலும் 45 சதவீத நோயாளிகள் நரம்பியல் நிபுணர்கள் இடம் சென்று பெல்ஸ் பால்சி நோய்க்கு மருத்துவம் பார்க்கின்றனர். பெல்ஸ் பால்சி நோய்க்கு காரணங்களை பொறுத்து பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. சில அரிதான காரணங்களான புற்றுநோய் கட்டி, தலைக்காயம் நோய்த்தொற்று, போன்ற காரணங்களுக்கு ரத்த பரிசோதனை, நிழற்படங்கள், (எடுத்துக்காட்டாக - சிடி, எம்ஆர்ஐ ஸ்கேன்கள்) போன்றவை பயன்படுத்தப்படுகின்றன.
நோய் கண்டறிதல் வேறுபாடு அறிதல்:
பொதுவாக பெல்ஸ் பால்ஸி என்பது ஒருவகையான முகவாதம்(facial palsy). இது முகத்தில் வலது அல்லது இடது புறமும் வரும். ஆனால் சில நேரங்களில் இந்த முக வாதம் முகத்தின் மேற்பகுதி அல்லது கீழ்ப்பகுதி அல்லது மேல் கால் பகுதி, கீழ் கால் பகுதி, அல்லது போன்ற முகத் தசைகள் பாதிக்கப்படலாம். இதுபோன்ற அறிகுறிகளை பெல்ஸ் பால்சி மற்றும் முகவாதம் போன்ற நோய்களை பிரித்தறிய வேண்டும்
சிகிச்சைகள்:
பெல்ஸ் பால்சி நோய் தாக்கப்பட்ட பின் ஏற்படும் அறிகுறிகளை நோயாளிகள் உணர்ந்த பின்பு நரம்பியல் நோய் நிபுணர்களை சந்தித்து சிகிச்சை எடுத்துக் கொள்கின்றனர். பொதுவாக நரம்பியல் நோய் நிபுணர்கள் ஸ்டீராய்டு போன்ற மருந்துகள் அல்லது நோய் எதிர்ப்பு சக்தி கொடுக்கக்கூடிய ஆன்டி-வைரல் மருந்துகள் போன்றவற்றை பரிந்துரைக்கின்றனர். இதனால் பெல்ஸ் பால்சி நோய்க்கான காரணங்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அடுத்ததாக பாதிக்கப்பட்ட முக தசைகளை மீண்டும் இயக்கங்களை கொண்டுவருவதற்கு இயன்முறை சிகிச்சை மிக முக்கிய பங்கு வகிக்கிறது.
இயன்முறை சிகிச்சை(Physiotherapy treatment):
நரம்பியல் நோய் நிபுணர்களை சந்தித்த பின்பு இயன்முறை மருத்துவ சிகிச்சை மற்றும் பயிற்சிகள்(exercise) மிக முக்கியமாக கொடுக்கப்பட வேண்டும். இந்த முறை மருத்துவ சிகிச்சை நோய் பாதிக்கப்பட்ட நாளிலிருந்து கொடுக்கப்பட வேண்டும். இதனால் தசைகளின் வலிமை(power) மற்றும் அசைவு(movement) போன்றவை பாதிக்கப்படாமல் தடுக்கப்படுகின்றன. இயன்முறை மருத்துவ சிகிச்சையில் மிக முக்கியமாக மின் தூண்டல் சிகிச்சை(electrical stimulation) அளிக்கப்படுகிறது. இந்த மின் தூண்டல் சிகிச்சை, நரம்புகளில் தடைபட்ட சமிக்கைகளை மீண்டும் தொடர்ந்து செயல்பட உதவி புரிகிறது, மற்றும் பாதிக்கப்பட்ட தசைகளுக்கு தனது அசைவுகளை மீண்டும் செய்கிறது. இதனால் பாதிக்கப்பட்ட முகத் தசைகள் மீண்டும் செயல்பட ஆரம்பிக்கின்றன. மேலும் ஒரு சில நோயாளிகளுக்கு பாதிக்கப்பட்ட முகத்தில் முகப் பகுதியில் வலி இருந்தால் வெப்பம்(thermotherapy) கொண்ட சில சிகிச்சைகளை பயன்படுத்தலாம்.
நோய் முன்னேற்றங்கள் மற்றும் பாதிப்புகள்:
பொதுவாக பாதிக்கப்பட்ட அனைத்து நோயாளிகளுக்கும் மூன்று வாரங்களில் செயலிழந்த முக தசைகள் மீண்டும் செயல்பட துவங்குகின்றன. 55 - 85 % ஆரம்ப கால அறிகுறிகள் மூன்று வாரங்களில் மறைந்து, நல்ல முன்னேற்றம் அடைகின்றன. 5 - 15 % நோயாளிகளுக்கு 3 - 6 மாத காலங்களில் முன்னேற்றம் அடைகிறது.
ஒருசிலருக்கு ஓராண்டு காலம் வரை முன்னேற்றம் ஏற்படலாம். இன்னும் ஒருசிலருக்கு முகவாதம் நிரந்தரமாக இருப்பதற்கும் வாய்ப்புகள் உள்ளன. இதுபோன்ற பிரச்சினைகள் நோயின் தாக்கம் மற்றும் அவற்றுக்குரிய காரணங்களை பொருத்தது.
அரிதாக சில நோயாளிகளுக்கு பெரிய அளவில் பின் விளைவுகள் ஏற்படுகின்றன. இதனால் அவர்களுக்கு நிரந்தர சுவை உணர்ச்சிகள் பாதிக்கப்படலாம். மற்றும் முகத்தில் உள்ள தசைகள் நிரந்தரமாக தசை இறுக்கம் ஏற்படுவதும், வலி ஏற்படும். அடிக்கடி கண்களில் நோய் தொற்று ஏற்படும். இதனால் நிரந்தர பிரச்சினைகள் ஏற்பட்டால் கண்களுக்கு திரை போன்று அமைப்பது, அல்லது கண் கண்ணாடி பயன்படுத்துவது போன்றவை பரிந்துரைக்கப்படுகிறது. மேலும் சில நோயாளிகளுக்கு கண்சிமிட்டுவது பாதிக்கப்பட்டிருந்தால் கண் பட்டைகள் நிரந்தரமாக, அல்லது ஒரு சில ஆண்டுகள் வரை மூடப்படுகிறது.
மற்றும் சில அதித பின்விளைவுகள் நரம்புகள் மீண்டும் வளராமல் நிரந்தரமாக சிதைந்துவிடும்(permanent nerve degenration) நிலைமையில் முகத்தில் உள்ள தசைகள் நிரந்தரமாக பாதிக்கப்படுகின்றன. இதனால் நரம்பு செல்கள் மீண்டும் வளர்வது தடைபடும். முகத்தில் உள்ள தசைகளுக்கு சமிக்கைகள் அனுப்புவது நிரந்தரமாக தடை செய்யப்படுகின்றது இதனால் மேலே கூறிய படி முகத்தில் தசை இறுக்கங்கள், வாய் இழுத்துக் கொள்ளுதல்(mouth deviation), கண்கள் நிரந்தரமாக மூட முடியாமல் போவது போன்றவை ஏற்படலாம்.
இதுபோன்ற பின்விளைவுகள் ஏற்படுவதை தவிர்க்க ஆரம்ப காலத்தில் அல்லது நோய் அறிகுறிகள் ஏற்பட்ட உடனேயே இயன்முறை மருத்துவ சிகிச்சை(physiotherapy treatment) மற்றும் பயிற்சிகளை(exercises) மேற்கொள்ள வேண்டும். மிக முக்கியமாக மின்தூண்டல் சிகிச்சை(electrical stimulation) முகத்திலுள்ள தசைகளை வலுவடையச் செய்து, நிரந்தர தசை இறுக்கங்கள் மற்றும் வலுவின்மை போன்றவற்றை குறைக்கின்றன. அடுத்ததாக இயன்முறை மருத்துவ பயிற்சிகளை தொடர்ந்து செய்வதால் தசைகள் மீண்டும் வலுவடைந்து தனது வேலைகளை தொடர்ந்து செய்வதற்கு பயனுள்ளதாக இருக்கின்றன.
நன்றி
ஸ்ரீ குமரன் பிசியோதெரபி கிளினிக் & உடற்பயிற்சி மையம்
- Get link
- X
- Other Apps
Labels
Tamil
Labels:
Tamil
- Get link
- X
- Other Apps
Comments