முன்னுரை:
செரிப்ரல் பால்ஸி(cerebral palsy) எனப்படும் மூளை வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான பயிற்சியை பற்றி அதன் தேவைகளைப் பற்றி இந்தப் பகுதியில் பார்க்கலாம். ஒரு குழந்தையின் மூளை அதனுடைய பிறப்பு மற்றும் பிறப்பின்போது பாதிக்கப்படலாம். அந்த பாதிப்பைப் பொறுத்து நோயின் அறிகுறிகள் குழந்தைகளுக்கு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக இருக்கலாம்.
இந்த அறிகுறிகள் குழந்தைகள், தள்ளாடுவது(poor coordination), சதைகள் இறுக்கமாக(spasm) இருப்பது, தசைகள் இலகுவாக(flacid) இருப்பது, மற்றும் கைகள் கால்கள் நடுக்கங்கள் இருப்பது போன்றவை இருக்கலாம். மேலும் சில குழந்தைகளில் உணர்ச்சிகள்(sensation), பார்வை(vision), கேட்கும் திறன்(hearing ability),உணவு விழுங்கும்(swallowing) திறன், பேச்சு திறன்(speech), போன்ற பாதிப்புகள் இருக்கலாம். இந்த செரிபரல் பால்சி உள்ள குழந்தைகள் சில நேரங்களில் உட்கார முடியாமல், தவழ(crawling) முடியாமல், நடக்க முடியாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. முக்கியமாக குழந்தைகள் குறிப்பிட்ட காலத்தில் குறிப்பிட்ட வளர்ச்சியை அடைய முடியாமல்(delayed milestones) போவதற்கு வாய்ப்பு உள்ளது. மேலும் சில அறிகுறிகள் வலிப்பு( seizures), பிரச்சனையை சரிசெய்யும் திறமைகள்( problem solving ) போன்றவை பாதிக்கப்படலாம். இன்னும் சில அறிகுறிகள் சில வயதுகள் கழித்தோ பிரச்சினைகள் வரலாம்.
இந்த செரிபரல் பால்சி மற்றும் அதற்கான காரணங்கள் இன்னும் சரிவர கண்டுபிடிக்க இயலவில்லை. இருப்பினும் இதனுடைய பாதிப்பு குழந்தைகளின் மூளையில் இருக்கும் என்று கூறப்படுகிறது. இது போன்ற குழந்தைகள் இயக்கங்கள் பாதிக்கப்பட்டும்(movement disorder), உடல் சமநிலை (Body balance) பாதிக்கப்பட்டு இருப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. இதற்கான காரணங்கள் என்னவென்றால் அந்த குழந்தையின் தாய் கர்ப்பமாக(during pregnency) இருக்கும் பொழுது அல்லது குழந்தை பிறக்கும்பொழுது(during delivery) ஏற்படக்கூடிய சில அறிய முடியாத(unknown) காரணங்கள்.
குழந்தை கருவில் இருக்கும் பொழுது கருவிற்கு ஏற்படக்கூடிய சில பாதிப்புகள் என்னவென்றால் குறை மாதத்தில் பிறக்கும் குழந்தை (preterm baby)குழந்தைக்கு நோய் தொற்று ஏற்படுதல்( infection ), அல்லது தாய்க்கு நோய்தொற்று ஏற்படுதல். குழந்தை பிறக்கும்பொழுது ஏற்படும் பிரச்சினைகள் மற்றும் குழந்தைக்கு மூளைப் பகுதியில் ஏற்படும் சிறு காயங்கள்(cerebral injury) பிரச்சினைகளை அதிகப்படுத்த செய்கின்றன. இந்த குழந்தைகளுக்கு வரும் பிரச்சினைகளை பொறுத்து அல்லது அறிகுறிகளை பொறுத்து இந்த செரிபரல் பால்சி வகைப்படுத்தப்படுகின்றன. குழந்தைகள் ஒரு வேலையை சரிவர செய்ய முடியாமல் போவது மற்றும் குழந்தை ஒரு பொருளை எடுக்கும் பொழுது தன்னுடைய கை கால்கள் நடுக்கத்துடன் இருப்பது(incoordination) போன்ற அறிகுறிகள் தென்படலாம். இந்த மாதிரியான பிரச்சினைகள் கண்டறிய ரத்தப்பரிசோதனை (blood test), மற்றும் நிழல்படங்கள் ( imaging), பயன்படுத்தப்படுகின்றன.
செரிபரல் பால்சி எனப்படும் மூளை வளர்ச்சி குறைபாடு மற்றும் இதுபோன்ற பிரச்சினைகளோடு பிறக்கும் குழந்தைகளை எளிதாக அடையாளம் கண்டு இந்த மாதிரியான பிரச்சினைகளை தடுத்து நிறுத்த(prevent) இயலும். இந்த மாதிரியான பிரச்சினைகளை வருமுன் தடுப்பது மற்றும் கர்ப்பத்தில் உள்ள குழந்தைகளுக்கோ அல்லது தாய்மார்களுக்கும் நோய் தடுப்பூசி(vaccination) போடுவது குழந்தைகளை செரிபரல் பால்சி பாதிப்பிலிருந்து தடுத்து நிறுத்த முடியும். இந்த செரிப்ரல் பால்ஸி பாதிப்புகளை, பாதிப்பு வந்த பிறகு தடுத்து நிறுத்துவது எளிதான காரியமில்லை. மேலும் செரிபரல் பால்ஸி பிரச்சினையை சமாளிக்க சில எளிதான உடற்பயிற்சிகள்(exercises), மருந்துகள், அறுவை சிகிச்சைகள் கையாளப்படுகின்றன. அவற்றில் சில பயிற்சிகள் இயன்முறை மருத்துவர்கள்(physiotherapist) மூலமோ, தொழில்கல்வி மருத்துவர்கள்(occupational therapist) மூலமோ, பேச்சு கற்கும் சிகிச்சை(speech therapy) மூலமோ, இவை சரி செய்யப்படுகின்றன. இதில் ஒவ்வொரு மூளை வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு தசைகள் இறுக்கமாக(spasticity) இருந்தால் அதை நீடிக்கவே(lengthening) அறுவைச் சிகிச்சை பயன்படுத்தப்படுகின்றன. மேலும் குழந்தைகளுக்கு தசைகள் இறுக்கமாக இருந்தால் splints, calipers எனப்படும் உடலின் வெளிப்புறம் பயன்படுத்தப்படும் உபகரணங்கள் உதவிகரமாக இருக்கும். சில பாதிக்கப்பட்ட வளர்ந்த மூளை வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு(adult cerebral palsy) மருத்துவ உதவி தேவைப்படுவதாக இருக்கும். பொதுவாக 1000 பேரில் 2.1 குழந்தைகளுக்கு பாதிப்பு வருவதாக கணக்கிடப்படுகிறது. மேலும் இந்த மூளை வளர்ச்சி குறைபாடு உள்ள குழந்தைகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து மருத்துவ உதவி, உடற்பயிற்சி செய்வதால் குழந்தைகளை செயல்பட(activities) எளிதாக இருக்குமாறு பார்த்துக் கொள்ள முடியும்.
அறிகுறிகள்:
செரிபரல் பால்சி என்பது ஒரு குழு போன்ற நிரந்தரமான உடல் உபாதைகளையும்(group of symptoms), உடல் வளர்ச்சியில் பிரச்சினைகளையும், இயக்கங்களில் பிரச்சினைகளையும்(lack of movement), உடல் சமநிலையில் பாதிப்பு(body balance difficulty) ஏற்படுவதும் ஒவ்வொரு அசைவிலும் பாதிப்பு இருப்பதுமாக கூறப்படுகிறது.
இது குழந்தைகளில் முன்னேற்றம் (developmental disorder)ஏற்படுவதை தடுத்து நிறுத்துவதாக கூறப்படுகிறது. குழந்தைகளுக்கு நினைவாற்றல்(memory), கற்கும் திறன்(learning), உணரும் திறன்(perception) மற்றவர்களை தொடர்பு(communication) கொள்வது, பழக்கவழக்கங்கள் போன்றவற்றைக் கற்றுக் கொள்வது கஷ்டமாக(learning difficult) இருக்கலாம். மேலும் சில குழந்தைகளுக்கு 28% வலிப்பு, 58 % தொடர்பு கொள்வதில் பிரச்சினை, 42% பார்வை குறைபாடு, மற்றும் 56% கற்றல் குறைபாடு உள்ளன. தசை இறுக்கங்கள் சில குழந்தைகளுக்கு பொதுவாக(common) காணப்படுகின்றன.
செரிப்ரல் பால்ஸி உள்ள குழந்தைகளுக்கு தசைநார்களில் குறைபாடுகள், அனிச்சைச் செயல்களில்(Reflex) குறைபாடுகள், இயக்கங்களில் குறைபாடுகள், மற்றும் உடல் சமநிலை போன்றவை பாதிக்கப்படலாம். நரம்பு மண்டலங்களில் உள்ள கோளாறுகள் முதன்மையாக (primary disorder) தென்படுகின்றன, எலும்பு மற்றும் தசைகளில் உள்ள குறைபாடுகள் இரண்டாம் பட்சமாக(secondary disorder) உள்ளன. செரிபரல் பால்சி உள்ள குழந்தைகளுக்கு வளர்ச்சி விகிதம் தசை நார்கள் அவற்றின் அளவுகள்(muscle size) மற்றும் எலும்புகள், எலும்புகளில் ஏற்படும் விலகல்கள்(deformities) தென்படுகின்றன.
மேலே சொன்ன அனைத்து அறிகுறிகளும் இருந்தாலும் குழந்தைகளுக்கு, நடை மற்றும் தசைகளில் ஏற்படும் இறுக்கங்களும் அதிக அளவில் தென்படுகின்றன. பொதுவாக தசை இறுக்கங்கள் தொடைப்பகுதியின் உள்பகுதியில்(medial side) மற்றும் கால் பகுதியின் பின்புற சதை(calf muscle) இறுக்கங்களும் காணப்படும். இதனால் குழந்தைகள் நடக்கும் பொழுது காலின் கட்டைவிரலில் நடப்பது(toe walking) அல்லது காலை பின்னிக் கொண்டு நடப்பது(scissor gait) போன்ற நடை பாவனைகள் அதிகமாக தென்படும். இந்த நடை இவர்களுக்கு செரிப்ரல் பால்ஸியின் முக்கியமான அறிகுறியாகும். மேலும் எலும்பு சம்பந்தப்பட்ட எலும்பு விலகல்கள்(deformity) காணப்படும். இதனுடைய விளைவுகள் ஒவ்வொரு மூட்டு இயக்கங்களிலும், அசைவுகளிலும், தசை இறுக்கங்கள் மிக அதிகமாக தென்படும்.
சில செரிப்ரல் பால்ஸி குழந்தைகளுக்கு உடலின் சமநிலையில் சரிவர இல்லாது இருந்தால், சில இடங்களில் சதைகள் இலகுவாக(flaccidity) இருக்கும் அல்லது மிகவும் இறுக்கமாக(spasticity) இருக்கும். மேலும் சில குழந்தைகளுக்கு முதுகு தண்டுவட வளைவு(spinal curvature) அதிகமாக இருக்கலாம், தாடை எலும்பு(mandiple) சிறிதாகவோ, தலை சிறிதாகவோ, காணப்படலாம், மற்றும் சில அறிகுறிகள் குழந்தைகள் வயதாக வயதாக தென்படும். செரிபரல் பால்சி குழந்தைகளுக்கான அறிகுறிகள் குழந்தைகள் வளரும் பொழுது 6-9 மாதங்களில் தெரிய ஆரம்பிக்கும். ஏனென்றால் குழந்தைகள் இந்தப் பருவத்தில் நகர(mobilization) அல்லது நடக்க(walk) ஆரம்பிக்கின்றனர். மேலும் நடக்கும் பொழுது, கை, கால்களை ஒரு சேர அல்லது ஏதாவது ஒரு பக்கத்தை மட்டும் அதிக அளவில்(unilateral usage) பயன்படுத்துகின்றனர். மேலும் இந்த குழந்தைகளுக்கு வாயிலிருந்து எச்சில் வடிதல்(drippling of saliva) மற்றும் சமூக ஒதுக்குதல்(communal rejection), பேச்சு குறைபாடு, துணிகள் பயன்படுத்துவதில் கோளாறுகள் ஏற்படலாம். பொதுவாக சுமார் 55.5 % குழந்தைகள் கீழ்ப்புற சிறுநீரக நோய் தொற்று(lower urinary tract infection) பாதிப்புகள் ஏற்படுகின்றன. காரணம் என்னவென்றால் குழந்தைகள் சிறுநீரகத்தை அடக்கமுடியாமல் போவது(urine urgency) இந்த குழந்தைகளுக்கு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சில நேரங்களில் மூளை வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு உணர்ச்சிகளில் பிரச்சினை(sensory disturbance) ஏற்படுவதால் மூச்சு திணறல் அல்லது மூச்சு நின்று போதல்(acute respiratory distress syndrome) ஏற்படலாம்.
செரிபரல் பால்சி உடல் பாதிப்புகள்:
பொதுவாக எலும்புகள் வளர்வதற்கு, வடிவம்(shape) மற்றும் அளவுகளை(size) அடைவதற்கு எலும்புகளில் சிறிதளவு அழுத்தம்(pressure) தேவை. ஆனால் மூளை வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு இந்த எலும்புகளில் அழுத்தமானது சரிவர இருப்பதில்லை. காரணம் எலும்புகளில் தாது உப்புக்கள்(minerals) சரியாக சேர்வது கிடையாது. இதனால் எலும்புகளில் சாஃப்ட்(bone shaft) எனப்படும் எலும்புகள் நடுப்பகுதியில் இதனுடைய அமைப்பு ஒல்லியாக(narrow) காணப்படும். பொதுவாக எலும்புகளில் மேல் பகுதி ஒல்லியாகவும் நடுப்பகுதி பலூன் போன்று அகன்றும் காணப்படும். இதனால் எலும்புகளில் தேவைப்படும் அழுத்தமானது சரியாக கிடைக்காமல் போகலாம். இதற்கு காரணங்களாக தசை வலுவாக இல்லாமல் இருத்தல், எலும்புகளின் சுருங்குதல்(narrowing), மூட்டுகளில் குறுகிய இடைவெளி(Reduced space) போன்றவையாக இருக்கலாம்.
தசை இறுக்கங்களின் நிலைமை(level of spasticity) ஒவ்வொருவருக்கும் மாறுபடலாம். தசை இறுக்கங்கள் இருப்பதைப் பொறுத்து இவர்களின் நடை மாறுபடலாம். தசை இறுக்கங்கள் இருப்பதைப் பொறுத்து செரிபரல் பால்சி குழந்தைகளின் நடை, எலும்பு மூட்டுகள் விலகல், போன்றவை தென்படலாம். செரிப்ரல் பால்ஸி உள்ள குழந்தைகளுக்கு எலும்புகளின் வளர்ச்சிகள் முழுமையாக நடைபெறுவது இல்லை. இதனால் கால்களில் எலும்புகள் வளர்ச்சிகள் உயரங்களில் வேறுபாடுகள்(limp length discripency) இருப்பதற்காக வாய்ப்புகள் உள்ளது. இந்த மாதிரியான குழந்தைகளுக்கு எலும்புகள் உடைந்து(pathological fracture) போவது மிக சாதாரணமாக நடைபெறுகிறது. மிக முக்கியமாக நடை மற்றும் இயக்கங்களில் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. மேலும் இந்த குழந்தைகளுக்கு நடை தசையில்(walking muscles) வலுவிழத்தல், வலி ஏற்படுதல் போன்றவை ஏற்படலாம். இதனால் குழந்தைகளுக்கு எலும்பு உடைதல் ஏற்படும். இதன் காரணமாக அவர்கள் தங்களுடைய பள்ளிப் பருவத்தையும் விளையாட்டு இயக்கங்களை இழக்க நேரிடலாம்.
செரிப்ரல் பால்ஸியில் குழந்தைகளுக்கு மூட்டு விலகுதல், இடுப்பு மூட்டு விலகுதல், கணுக்கால் அசைவில் பிரச்சனை இருத்தல் போன்றவை ஏற்படலாம். இதனுடன் கால்கள் மடங்கி முழங்காலில், எலும்பு மூட்டுகள் விலகல் ஏற்படலாம். இந்த மாதிரியான மூட்டு பிரச்சினைகள் நீளமான தொடை எலும்பு(femur), கால் எலும்பு(tibia) போன்றவற்றில் காணப்படுகின்றன. அடுத்ததாக இந்த எலும்பு மூட்டு பிரச்சனை முதுகுத்தண்டுவடத்தில் வளைதல்(spinal deformity) ஏற்படுகின்றன. இவை 10 வயதில் ஏற்படுவதாக கண்டறியப்படுகிறது. மேலும் இவை 21% - 64% வரை தென்படுகின்றன. இந்த முதுகு வளைவு பிரச்சினையை சரி செய்ய அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது. இதனால் குழந்தைகளின் இயக்கங்கள் சரி செய்யப்படுகின்றன. மேலும் தசை நார்களின் வேலைகள் சரியாக செய்வதற்கு இவை உதவி செய்கின்றன. இந்த அறுவை சிகிச்சையுடன் இடுப்பு மூட்டு, தொடை எலும்பு மற்றும் தசைகள் சரி செய்யப்படுகின்றன. இதனால் குழந்தைகளின் நடை மற்றும் மூட்டு இயக்கங்கள் சரி செய்யப்படலாம்.
இந்த அறுவைச் சிகிச்சை குழந்தை வளர்ச்சியில் நடையை மாற்றுகிறது.
சாப்பாடு விழுங்குதல் பிரச்சனைகள்(swallowing difficulty) :-
சாப்பிடுதல் இல் ஏற்படும் பிரச்சனைகள்:
செரிபரல் பால்சி குழந்தைகளுக்கு உணர்வு மற்றும் இயக்கங்கள் பிரச்சனை இருப்பதால் சாப்பாடு சாப்பிடும் பொழுது பிரச்சினைகள், பாத்திரங்களை கையில் பிடித்தல்(utensil holding), உணவுகளை விழுங்குதல் போன்றவற்றில் பிரச்சனை ஏற்படலாம். இதனால் சாப்பிட்ட உணவு மீண்டும் மேல்நோக்கி வருவது(oseophagal reflex), வாந்தி போன்ற உணர்வு(nausea) ஏற்படுவது மிகவும் பொதுவாக காணப்படுகிறது. மேலும் இவர்களுக்கு வாயைச் சுற்றிலும் உணர்வு குறைவாகவே இருக்கும். மேலும் இவர்களுக்கு உடல் சமநிலை பிரச்சினை உட்காரும் பொழுது, தலையை அசைக்கும்போது, உடல் மற்றும் கைகளை அசைக்கும் பொழுது, பிரச்சனை இருப்பதால் உணவுகளை அருந்தும்பொழுது அல்லது பாத்திரங்களை பிடிக்கும் பொழுது பிரச்சினைகள் ஏற்படலாம். இதனால் கை மற்றும் கண்களுக்கு இடையேயான சமநிலை பாதிக்கப்படுவதால் தானாக உணவு அருந்துவது மிகவும் கஷ்டமாக இருக்கும். மேலும் இவர்களுக்கு பற்களில் பிரச்சனை, நுரையீரல் தொற்று (நிமோனியா) பொதுவாக காணப்படலாம். இதனால் உணவு, உணவுக் குழாயில் இருந்து மூச்சுக் குழாய்க்கு செல்லும்பொழுது பிரச்சினை ஏற்படுகிறது. கைகளில் விரல்களில் எலும்பு விலகுதல் இருப்பதால், அவர்கள் உணவு அருந்தும் பொழுது சிறிய கரண்டி மற்றும் கைகளில் சிறிய உபகரணம் தேவைப்படுகின்றன.
பிரச்சினை அதிகமாக பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு வாய், தொண்டை பிரச்சனை, உணவு விழுங்குதல் பிரச்சினை இருப்பதால் குழந்தைகளுக்கு சத்துக் குறைபாடு(nutrition deficiency) இருக்கலாம். கைகளில் பின்புற தசை வலுவிழந்து இருப்பது முக்கியமான பிரச்சினையாகும்.
பேசுதல் மற்றும் மொழி பிரச்சினைகள்(speech and language disorder):
பேச்சு மற்றும் மொழியை பகுத்தறிதல் பிரச்சனை பொதுவாக காணப்படுகிறது. இதனால் 31% - 88% வரை அல்லது கால் பங்கு குழந்தைகளுக்கு பேசும்பொழுது வார்த்தைகளை கோர்வையாக பேசுவதில் பிரச்சனை(dysarthria) இருக்கலாம். மேலும் மூச்சு பிரச்சனை இருந்தால் இவர்களுக்கு பேசுவதில் பிரச்சினை இருக்கலாம். காரணம் மூச்சு பிரச்சனை இருக்கும்பொழுது காற்று குரல்நாண்கள்(vocal cord) வழியாக சப்தத்தை எழுப்ப மிகவும் சிரமமாக இருக்கலாம்.
வாய், முகத்தில் உள்ள தசை போன்றவை வலுவிழந்து காணப்படலாம். இதனால் இதுபோன்ற குழந்தைகளுக்கு மற்றவர்களை தொடர்பு கொள்ள மாற்று தொடர்பு அமைப்பு(alternate communication system) செய்து தரப்படுகிறது. இதனால் அவர்கள் பேச்சு குறைபாடு இன்றி எளிதாக மற்றவர்களை தொடர்பு கொள்ள முடியும். செரிபரல் பால்சி உள்ள குழந்தைகள் முன்கூட்டியே கண்டறிந்து தேவையான உடற்பயிற்சிகள் அளிப்பது உபகரணங்கள் பயன்படுத்துவது குழந்தைகளின் பாதிப்புகள் அதிகமாகுவதை தடுத்து நிறுத்த முடியும். இதனால் மூளையின் முக்கியமான சில இயக்கங்கள் பாதிப்பு அடையாமல் தடுக்க முடியும்.
வலி மற்றும் தூங்கும் பொழுது ஏற்படும் பிரச்சினைகள்(pain and sleeping disorder):
வலி என்பது செரிபரல் பால்சி உள்ள குழந்தைகளுக்கு பொதுவாக காணப்படுகிறது. காரணம் என்னவென்றால் தசை இறுக்கங்கள் மூர்க்கமாக இருத்தல்(severe spasticity), உடல் சமநிலை பிரச்சனை சரியில்லாமல் உபகரணங்கள் பயன்படுத்துதல்(using of walking aids, orthosis), இடுப்பு எலும்பு விலகுதல் அல்லது இடம் மாறுதல் (displacement) போன்ற காரணங்களால், 12 வயது கடந்த குழந்தைகளுக்கு வலி இருக்கலாம். மற்றும் வலி இவர்களுக்கு பலவகையான சிரமத்தை கொடுக்கின்றன.
தூங்கும் பொழுது செரிபரல் பால்சி உள்ள குழந்தைகளுக்கு இரண்டாம் வகையான பிரச்சினைகள் இயற்பியல்(physical) மற்றும் சுற்றுச்சூழல்(environmental) பிரச்சினைகள் காரணமாக தூங்குதலில் இடர்பாடுகள் இருக்கலாம். குழந்தைகளுக்கு தசை இருக்கம் இருந்தால் தூங்கும் பொழுது இருக்கமாக அல்லது வலியை உணர்வதால், பிரச்சினைகள் இருக்கும். இந்த தொடர்ந்த நீண்டநாள் வலி(chronic pain) நான்கு குழந்தைகளில் மூன்று பேருக்கு இருப்பதாக தெரிகிறது.
மேலும் சில அதிகப்படியான பிரச்சினைகள்:
சில மூளை வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு புத்தி கூர்மை குறைபாடுகள்(low IQ level), வலிப்பு, தசை இறுக்கம், நடை குறைபாடு இருத்தல், தொடர்பு கொள்வதில் பிரச்சினை, சத்து குறைபாடு, தூங்குவதில் பிரச்சனை, மற்றும் மன அழுத்தம், பயம், கவலை போன்றவை இருக்கலாம். மேலும் இவர்களுக்கு செரிமான மண்டல குறைபாடுகள், உணவு மற்றும் சத்துக்களை உறிஞ்சுதல் குறைபாடுகள், வாந்தி மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகள் இருக்கலாம். இன்னும் சில குழந்தைகளுக்கு இதய நோய், மூளை ரத்தக்குழாய் குறைபாடு, புற்றுநோய் காணப்படுகின்றது. உடல் பருமன், இயக்கங்களில் ஏற்படும் பிரச்சினைகள், இவற்றை கண்டறிவது குழந்தை இறப்பை தவிர்க்க முடியும். மேலும் சில குறைபாடுகளை சரியாக சிகிச்சை செய்தால் பிரச்சினைகளை தவிர்க்க இயலும். வலிப்பு நோய்க்கான சிகிச்சையை செய்வதில் தொடர்ந்து பிரச்சனை இல்லாமல் இருந்தால் இவர்கள் வாழ்நாளை நீட்டிக்க இயலும். மேலும் தசை நார்கள், தசை மூட்டு மற்றும் எலும்புகளில் பிரச்சினை இல்லாமல் பார்த்துக் கொண்டால் இவர்களின் இயக்கங்கள் மற்றும் தொடர்புகள் பாதிக்கப்படாமல் தவிர்க்க முடியும்.
செரிபரல் பால்சி மூளை வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான காரணங்கள்:-
பொதுவாக தாயின் கருக்குழாயில்(placenta) ஏற்படும் ரத்த கட்டி அடைப்பு செரிபரல் பால்சி பிரச்சினையை உருவாக்குகிறது. இது குழந்தையின் வளர்ச்சியில் மாற்றத்தை ஏற்படுத்தும், மற்றும் மூளையில் சிறு பிரச்சினைகளை ஏற்படுத்தி, இந்த குறைபாடுகளை உருவாக்குகின்றன. காரணங்கள் தாய்மார்களின் பிரசவ நேரத்தில் ஏற்படும் பிரச்சனைகள் அல்லது பிரசவ காலத்தில் ஏற்படும் பிரச்சினைகள், நோய்த்தொற்றுகள்(infection), அளவுக்கு அதிகமான மருந்து மாத்திரைகளை உட் கொள்ளுதல், போன்றவைகள் இருக்கலாம்.
இன்னும் சில குழந்தைகளுக்கு காரணங்களை சரியாக கூற இயல முடியாது. அப்படி கூறப்படும் காரணங்களில் சில கருப்பையில் வளர்ச்சியில் ஏற்படும் பிரச்சினைகள் (கதிர்வீச்சு-Radiation, நோய் தொற்று, கரு வளர்ச்சி தடைபடுதல்), ரத்தக் குழாய்களில் செல்லும் ரத்தத்தில் ஆக்சிசன் அளவு குறைவாக இருத்தல்(hypoxia),குழந்தை பிறக்கும்பொழுது ஏற்படும் சில பிரச்சினைகள் மற்றும் பக்கவிளைவுகள் செரிபரல் பால்ஸி உருவாக்குவதாக கூறப்படுகின்றன.
குறைமாதத்தில் பிறக்கும் குழந்தைகள்(Preterm baby):
பொதுவாக செரிபரல் பால்சி குழந்தைகளில் 40% - 50% வரை குழந்தைகள் குறைமாதத்தில் பிறக்கின்றன. இன்னும் அதிகமாக சொல்லும் பட்சத்தில் 75% - 90% குழந்தைகள் பிறக்கும் பொழுது அல்லது பிறந்த பின்பும் மூளைப் பகுதி பாதிக்கப்படுகின்றன. மேலும் ஒரே பிரசவத்தில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகள் பிறக்கும்பொழுது அவர்களுக்கும் மூளை பிரச்சனை ஏற்படலாம். மற்றும் அவற்றில் சில குழந்தைகள் எடை குறைவாக பிறக்கலாம் என்று கூறப்படுகின்றன.
எடை குறைவாக பிறக்கும் குழந்தைகளில் 1 - 1.5 கிலோ வரை 6% குழந்தைகள் இருக்கின்றனர். மேலும் 11% குழந்தைகள் 28 -வாரங்களுக்கு முன்னதாகவே பிறந்து விடுகின்றனர். மேலும் ஜீன்களின் குறைபாடு(Genetic disorder) இதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. 34 - 37 வாரங்கள் வரை பிறக்கும் குழந்தைகளுக்கு 0.4% பாதிப்பு இருப்பதாக தெரிவிக்கின்றன.
சரியான மாதத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு இருக்கும் செரிப்ரல் பால்ஸி:
சரியான மாதத்தில் அல்லது பத்து மாதத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கும் சில ஆபத்துக் காரணிகள் இருந்தால் வளர்ச்சி அல்லது மூளைப் பகுதி பாதிக்கப்படுகின்றன. காரணங்கள் தாய் சேய் கருக்குழாயில் பிரச்சனை, பிறக்கும் பொழுது கருப்பையிலுள்ள திரவம்(amniotic fluid), மூச்சு குழாயில் செல்வது(aspiration) குழந்தை பிறப்பை மேலும், அதிக பிரச்சினைகளை உருவாக்குகிறது. இதனால் குழந்தைகள் உபகரணங்கள் பயன்படுத்தி (breech delivery) அல்லது அறுவை சிகிச்சை (cesearian) செய்தோ எடுக்கப்படுகின்றன. சில குழந்தைகளுக்கு வலிப்பு, மூச்சு அடைபடுதல் அறிகுறிகள், குறைந்த இரத்த சர்க்கரை, அல்லது நுரையீரல் தொற்று போன்றவை ஏற்படுகின்றன. மேலும் சில காரணங்கள் சரிவர அறியப்படவில்லை. 2015ம் ஆண்டுகளில் வளர்ந்த நாடுகளில் கூட இந்த மாதிரியான குழந்தைகள் இன்னும் பாதிப்புக்குள்ளாகின்றனர்.
ஜீன்களின் பாதிப்பு அல்லது பரம்பரை பரம்பரையாக:
ஜீன்களின் பாதிப்பு மிகவும் குறைவான அளவாக 2% செரிபரல் பால்சி குழந்தைகளுக்கு இருப்பதாக கண்டறியப்படுகின்றன.
முன் குழந்தைப் பருவத்தில் ஏற்படும் பிரச்சினைகள்(early childhood problems):
குழந்தைகள் பிறந்தவுடன் சில காரணங்களினால் மூளைப் பகுதியில் பிரச்சனை ஏற்படலாம். இந்த காரணங்கள் மஞ்சள் காமாலை, காரீயம் விஷங்கள்(lead poisoning), stroke எனப்படும் வாதம், மோசமான தலைக் காயங்கள்(severe head injury), மூளைப் பகுதியில் ரத்த ஓட்டத்தை முக்கியமாக ஆக்சிசன் அளவு குறைதல்(Isheamia), மற்றும் மூளைக்காய்ச்சல் போன்றவையாக இருக்கலாம்.
மற்ற காரணங்கள்:
குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்த்தொற்று தவிர தாய்க்கு ஏற்படும் நோய் தொற்று(eg. Rubella) குழந்தையை மூன்று மடங்கு அதிக அளவு பாதிக்கின்றனர். குழந்தை கருவில் இருக்கும் போது தாய்க்கு ஏற்படும் நோய் தொற்று மிக அதிகமான ஆபத்து காரணியாக கூறப்படுகிறது.
தாய்க்கு பிரசவ காலத்தில் ஏற்படும் நோய் தொற்று, கருவில் இருக்கும் குழந்தையை இன்னும் அதிக ஆபத்துகளில் கொண்டு செல்கிறது. மேலும் சில செரிபரல் பால்சி பிரச்சனை அதிகமாக இருப்பின் பிரசவத்தில், பிரசவ நேரத்தில் குழந்தைகளுக்கு இறப்பும் ஏற்படலாம்.
சில குழந்தைகளுக்கு இருக்கும் ரத்த குறைபாடு தாயின் நோய் எதிர்ப்பு சக்தி இவற்றில் ஏற்படும் பிரச்சினைகள் ரத்த சிவப்பு செல்களில் பாதிப்பை ஏற்படுத்தி குழந்தையை கருவில் ரத்த உறைவை(thrombosis) ஏற்படுத்தி கருவை சிதைவடைய செய்கிறது.
செரிபரல் பால்சி நோய் கண்டறிதல்:
பொதுவாக சிறப்பு பயிற்சி, நோயை கண்டறிதல், குழந்தையின் பின்புலம்(back ground) மற்றும் பிரசவ காலத்தில் ஏற்படும் பிரச்சினைகளின் வரலாறு(birth history) மற்றும் இயன்முறை சோதனை(physical test) மூலம் கண்டறியலாம். பொதுவான சில இயன் முறை சோதனைகள், குழந்தைகள் இயக்கங்களை கண்டறிய உதவுகிறது. ஆனால் இவை நான்கு மாதங்களில் கண்டறிவது சற்று கடினமானது. மேலும் மோசமாக பாதிக்கப்பட்ட குழந்தைகளை குறைந்த மாதங்களில் கண்டறிய முடியும். தசைகளில் ஏற்படும் தசைநார் கோளாறுகள், இயக்கங்களில் ஏற்படும் குறைபாடுகள், குழந்தை அனிச்சைச் செயல்களில் ஏற்படும் பிரச்சனைகள், முதலியன குறைந்த மாதங்களில் கண்டறிய முடியும்.
பொதுவாக செரிப்ரல் பால்ஸி அறிகுறிகள் அவற்றை கண்டறிதல், குழந்தையின் முதல் இரண்டு வயதிலேயே கண்டறிய முடியும். இவை ஐந்து வயதை கடந்து விட்டால் மோசமாக இருக்கலாம். ஐந்து வயதில் குழந்தையின் பாதிப்பை கண்டிப்பாக அறிய முடியும். ஆரம்ப காலத்தில் செய்யப்படும் பரிசோதனைகள்(earlier diagnosis) மற்றும் கொடுக்கப்படும் சிகிச்சைகள்(earlier interventions) செரிபரல் பால்சி பிரச்சினையை ஓரளவுக்கு சரி செய்ய முடியும். முக்கியமாக குழந்தை நடப்பதில் ஏற்படும் பிரச்சினையை சரி செய்ய முடியும்.
மேலும் சில பரிசோதனைகள் நரம்பு மண்டலத்தை சிடி அல்லது எம் ஆர் ஐ படங்களாக(CT and MRI SCAN) போன்றவை பார்க்க முடியும். இந்த நிழல் படங்களில் குழந்தைகளின் பிரச்சினைகள் மிக எளிதாக கண்டறிய முடியும். மேலும் மூளைகளில் வேறு ஏதாவது பிரச்சினைகள் இருந்தால், அவற்றை எளிதாக சிகிச்சை செய்து சரி செய்ய முடியும். அவைகள் மூளை திரவம் நின்று கொள்ளுதல்(obstruction of CSF), மூளையில் சரியான வளர்ச்சியின்மை, ரத்த கட்டி ஏற்படுதல், புற்றுநோய் ஏற்படுதல், போன்றவற்றை கணிக்க முடியும் மற்றும் இதனுடன் ஏற்படும் அதிகமான ஆபத்துக்ககளை தடுக்க முடியும்.
செரிபரல் பால்சி பிரச்சினைகளை கண்டறிவதில் குறைபாடு இருக்கக் கூடாது. ஆரம்ப காலத்தில் அறியப்படுவது குழந்தையின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தை அதிகப்படுத்தும். இதனால் குழந்தையின் இயக்கங்கள் மற்றும் கல்வி போன்றவை பாதிக்கப்படாமல் தடுக்கலாம். சில குழந்தைகளுக்கு ஏற்படும் தற்காலிக தசை இறுக்கங்களை(temporary muscle spasm), தடுத்து நிறுத்த முடியும். மற்றும் சில குழந்தைகளுக்கு ஏற்படும் வளர்சிதை மாற்றங்கள் மற்றும் புற்றுநோயினால் ஏற்படும் மூளை பகுதி பிரச்சனை, போன்றவற்றை குறைக்க முடியும். மேலும் மூளை பாதிப்பு மிக அதிகம் ஆகாமல் தடுக்க முடியும்.
பொதுவாக மூளை பாதிப்பு சில குழந்தைகளை அதிகளவு பாதிப்பதாக கூறப்படுகிறது. இவை முப்பத்தி ஆறு மாதங்களில் கண்டறியப்படுவதாக கூறுகின்றனர்.
செரிப்ரல் பால்ஸி வகைப்பாடுகள்:
செரிபரல் பால்ஸி இயக்கங்களின் குறைபாடுகள் பொறுத்து அல்லது உள்ளுறுப்புகளின் பாதிப்புகளை பொறுத்து பிரிக்கப்படுகின்றன. முதலில் இயக்கங்களை பொறுத்து வகைப்படுத்துதல் சிலவற்றை கூறலாம். அவை தசை இறுக்கம்(spastic), இயக்கங்களின் போது கைகள் கால்கள் நடுங்குதல்(athetoid), இயக்கங்களின் குறைபாடு மற்றும் இவை கலந்து(mixed type) இருக்கும் குறைபாடுகள். மேலும் சில வகைப்பாடுகள் சாப்பிடுவதில் குறைபாடு, நீர் அருந்துதல் ஏற்படும் குறைபாடு.
செரிபரல் பால்ஸி வகைப்படுத்துவது தசை இறுக்கத்தை பயன்படுத்துகின்றனர். இதில் ஒரு புறம் கை கால்கள் தசைகள் இயக்கங்கள்(Hemipligic), இரண்டு கால்களிலும்(Paraplegic), அல்லது அல்லது இரண்டு கை இரண்டு கால்களிலும் பாதிப்புகள்(Quadriplegic) இருக்கலாம்.
தசை இறுக்கங்கள் (spasm):
தசை இறுக்கங்கள் கொண்ட செரிபரல் பால்சி மிக பொதுவாக 70% குழந்தைகளுக்கு காணப்படுகின்றன. இவை தசைகளில் மற்றும் நரம்பு தசை பகுதிகளில்(Neuromuscular junction), இயக்கங்களில் குறைபாடுகளை ஏற்படுத்துகின்றன. இந்த பாதிப்பு சில நரம்புகளில் உணர்ச்சி பகுதிகளை பாதிக்கப்படுவதாக அறியப்படுகிறது. இதனால் நரம்புகளில் ஏற்படும் சிக்னல்களை சரியாக அனுப்ப இயலாது.
மேலும் தசை இறுக்கம் இல்லாமல் இலகுவாக இருக்கும் பிரச்சினைகளும் அல்லது முழுமையான தசை வாதங்களும்(complete paralysis) இருக்கலாம். இவைகளுக்கு மருத்துவ சிகிச்சை அல்லது உபகரணங்கள்(orthotic appliances) கொண்டு சரிப்படுத்த முடியும். சில குழந்தைகளுக்கு கைகள் கால்கள் நடுக்கம் ஏற்படலாம் மேலும் இவர்களுக்கு உபகரணங்கள் பயன்படுத்தும்பொழுது எலும்புகளில் அழுத்தம்(pressure) ஏற்பட்டு வலியும் ஏற்படலாம். இதனால் இந்த நோயாளிகளுக்கு 20 அல்லது 30 வயதுகளில் மூட்டு தேய்மானம் தசைநார்களில் ஏற்படும் வீக்கம் வலியை உருவாக்குகிறது.
இவர்களுக்கு தொழில் ரீதியான சிகிச்சையை(occupational therapy) வழங்குவது, தசை நீட்சிகள்(muscle stretches), தசையை பலப்படுத்துவது(strengthening), இயக்கங்களை முறைப்படுத்துவது(coordinated activities), உடற்பயிற்சி கொடுப்பது போன்றவை முக்கியமாகும். ஒருவேளை தசை இறுக்கம் அதிகமாக இருந்தால், தசை இறுக்கத்தை குறைக்க மருந்துகள், தசைநார் அறுவை சிகிச்சைகள்(Tendon release, Z - plasty) மேற்கொள்வது பயன் தரும். இவை தசைகளில், மூட்டுகளில் இயக்கங்களை அதிகப்படுத்த உதவும். மேலும் இவர்களுக்கு தன் வேலைகளை தானாக செய்து கொள்ள இயலும்.
அட்டாக்சிக்(ataxic) அல்லது கால்கள் கைகள் இயக்கங்களில் நடுக்கம்:
பொதுவாக இந்த மாதிரியான நடுக்கங்கள் உள்ளவர்கள் 5% - 10% வரை காணப்படுகின்றனர். இவர்களுக்கு மூளை பாதிப்பு மூளை பகுதியில் உள்ள அமைப்பு மாறுபட்டு இருக்கலாம். இவர்களுக்கு சிறுமூளை பகுதி பாதிப்பு இருந்தால் சமநிலையில் வேறுபாடு, இயக்கங்களில் குறைபாடு, முக்கியமாக கைகள் கால்கள் உடம்பு பகுதியில் ஏற்படும் நடுக்கங்கள் இருக்கலாம். இந்த வகை பாதிப்புகளில் இடர்பாடுகள் அசையும் பொழுது அல்லது ஒவ்வொரு இயக்கங்களிலும் இருக்கலாம். எடுத்துக்காட்டாக கால்களில் காலனி அணியும் பொழுது அல்லது பென்சில் வைத்து எழுதும் பொழுது நடுக்கங்கள் இருக்கலாம். இந்த நடுக்கத்தை குறைக்க மருத்துவ சிகிச்சை மற்றும் இயன்முறை மருத்துவ சிகிச்சை பயன்படுத்தப்படுகின்றன.
கை கால்களில் உதறல் ஏற்படுதல்:
இந்த வகையான செரிபரல் பால்ஸி யில் மூளைப் பகுதியில் சிறு மூளையின் மேல்பகுதியில் அல்லது substantia nigra பகுதியில் ஏற்படும் பாதிப்புகள். இந்த பாதிப்புகள் மூளையில் ரத்த ஓட்டத்தில் ஏற்படும் பாதிப்புகளினால் ஏற்படுகின்றன. இவற்றில் தசைகளில் இறுக்கங்கள் அதிகமாகவோ மற்றும் குறைவாகவோ, இயக்கங்களில் அசைவுகள் குறைவாகவோ தசைநார்களில் கட்டுப்பாடு இல்லாமலோ இருக்கலாம். இதனால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் இயக்கங்கள் அல்லது வேலைகள் செய்வதில் குறைபாடுகள் இருக்கலாம். இவை இரண்டு வகையாக பிரிக்கப்படுகின்றன.
1.கோரியோ அத்திட்டாய்ட் (choreo athetoid), 2.டிஸ்டோனியா (dystonia), இவற்றில் தசைகளின் அசைவுகள் தானாக நடைபெறலாம். இரண்டாவது வகையில் தசைகளின் இயக்கங்கள் மிகவும் வேகம் குறைந்து காணப்படலாம்.
மற்ற வகைகள்:
மேலே கூறப்பட்ட அனைத்து வகைகளும் தனியாகவோ அல்லது சேர்ந்தோம் காணப்படலாம். இவற்றில் செரிபரல் பால்சி ஒரு குழுவாக பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இதனால் அவர்களின் அறிகுறிகள் வளர்ச்சியில் ஏற்படும் தடைகள், வாழ்நாள் குறைபாடு போன்றவை ஏற்படலாம்.
cerebral palsy முன்னெச்சரிக்கை பாதுகாப்புகள்:
சிறப்பு பயிற்சிகள் செரிபரல் பால்சி நோய்க்கான முன்னெச்சரிக்கை பாதுகாப்புகள் மிகவும் அதிக அளவில் மருத்துவ முறை உள்ளது. முதலில் கணினி மூலம் தாய் தன் தாய் சேய் கருவினை பாதுகாப்பது மற்றும் கருவினை கண்காணிப்பது முக்கியமானது. ஆனால் இது போன்ற முறைகளில் அதிக அளவு பாதுகாப்பு கிடைப்பதில்லை.
மேலும் கருவிற்கு முக்கியமான ஆபத்தாக மெக்னீசியம் சல்பேட் இருப்பது தெரியவருகிறது ஆனால் இந்த வேதிப்பொருள் கருவினை பாதிப்பது மிக அதிகப் படுத்துகிறது. மகப்பேறு மருத்துவ காலத்தில் இதை சரிவர கவனிக்காவிட்டால் செரிபரல் பால்ஸி வருவதற்கு வாய்ப்புள்ளது. இதனால் தாய்மார்கள் மெக்னீசியம் சல்பேட் எடுத்துக்கொண்டால் மூச்சு பிரச்சனை மற்றும் வாந்தி குமட்டல் போன்ற அறிகுறிகள் தென்படலாம். காபின் எனப்படும் வேதிப்பொருள் மூச்சு பிரச்சினைக்கு பயன்படுத்தப்படுகிறது. இதுவும் குறைமாதத்தில் குழந்தை பிறப்பதை அதிகப்படுத்துகிறது. அடுத்தபடியாக குழந்தைக்கு கர்ப்பத்தில் இருக்கும் பொழுது நீர்ச்சத்து குறைவாகவோ அல்லது அதிகமாகவோ இருக்கும்பொழுது, தாய்மார்கள் ஆன்டிபயாட்டிக் அல்லது நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் அதிகமாக உட்கொண்டால் உள்ளிருக்கும் கற்பப்பை உற்சுவர் மிக வேகமாக அடிபடும்(injury) அல்லது கிழிந்து விடும் நிலையை அதிகப்படுத்துகிறது. மேலும் குறைமாதத்தில் பிறந்த குழந்தைகள் cerebral palsy வருவதற்கு அதிக காரணமாக இவைகள் சொல்லப்படுகின்றன. அடுத்ததாக கார்ட்டிகோ ஸ்டீராய்டு மாத்திரைகள்(cortico steroid tablets) கர்ப்ப காலத்தில் எடுத்துக் கொண்டால் குழந்தையின் மூளைப் பகுதி அல்லது மூளை வளர்ச்சி பாதிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது.
செரிப்ரல் பால்ஸி மேலாண்மை:
செரிபரல் பால்ஸி அல்லது மூளை வளர்ச்சி குறைபாடு உள்ள குழந்தைகளை சிகிச்சை அளிப்பதற்கு பல்வேறு வகையான சிகிச்சைகள் கையாளப்படுகின்றன. அவற்றில் மிக முக்கியமானவை சில பின்வருமாறு. - குழந்தைகளை சரியாக கையாளுதல், ஆரம்ப காலத்திலேயே cerebral palsy குறைபாடுகளை கண்டறிதல், மற்றும் சிகிச்சை அளித்தல், பெற்றோர்களுக்கு இந்த குறைபாடுகளை பற்றி அறிவுரைகள் வழங்குதல் முதலியன.
சில ஆராய்ச்சியாளர்கள் மின்சார அல்லது மின் தூண்டல் கருவியின் மூலம் குழந்தைகளுக்கு வரும் குறைபாடுகளான Foot drop - பாதம் தொங்குதல் நடையில் பிரச்சினை போன்றவைகளை சரி செய்யலாம் என்று கூறுகின்றனர். மேலும் சில பிரச்சினைகளுக்கு இம்முறை மருத்துவம் மற்றும் உடற்பயிற்சிகள் உபகரணங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றில் முக்கிய நோக்கமாக குழந்தைகளை தன்னிச்சையாக செயல்பட வைப்பது இந்த மருத்துவத்தின் நோக்கமாகும். மேலும் குழந்தைகள் சமூகத்தில் தானாக தன்னம்பிக்கை மற்றும் இயக்கங்கள் கொண்டு பொதுவாக 60 சதவீத குழந்தைகள் தானாக நடக்கின்றன.
மேலும் குழந்தைகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை சரியான நேரத்தில் கொடுக்கப்பட்டால் குழந்தைகள் மிக மோசமான பாதிப்பிலிருந்து பாதுகாக்க முடியும்.
செரிபரல் பால்சி பாதிப்புகள் பல்வேறு வகையான பிரச்சினைகளையும் பல்வேறு வகையான மாற்றங்களையும் கொண்டிருக்கின்றன. இதனால் இவர்களுக்கு கொடுக்கப்படும் மருத்துவ முறை பன்முகம் கொண்ட மருத்துவ முறையாக உள்ளன. இவற்றில் குழந்தைகளுக்கு, தான் செய்யும் வேலைகள் தானாக செய்யவேண்டுமென்றும் அறிவுறுத்தப்படுகின்றனர். மேலும் சிகிச்சைகள் ஒரு குழுக்களாக அளிக்கப்படுகின்றன. இவற்றில் குழந்தைகள் நல மருத்துவர், உடல்நல பாதுகாப்பாளர் சமூக அக்கறை உள்ளவர், சமூக சேவகர்கள், இயன்முறை மருத்துவர்கள், கை கால்கள் உபகரணங்கள் செய்பவர்கள், பேச்சு மற்றும் மொழி கற்றுத் தருபவர்கள், சிறப்பு ஆசிரியர்கள் அனைவரும் மற்றும் பார்வை குறைபாடு இருந்தால், அவற்றை சரி செய்யும் கண் மருத்துவர்கள், மனநல மருத்துவர்கள், எலும்பு மற்றும் மூட்டு மருத்துவர்கள், அறுவை சிகிச்சை நிபுணர்கள், நரம்பு அறுவை சிகிச்சை நிபுணர்கள் போன்றவர்கள் இந்த குழுவில் முக்கியமானவர்கள்.
இந்த செரிபரல் பால்ஸி குழந்தைகளுக்கு பல்வேறு வகையான சிகிச்சைகள் அளிக்கப்பட்டாலும் குழந்தைகளுடன் இருக்கும் பாதுகாப்பாளர்கள் அல்லது பெற்றோர்கள் மிக முக்கியமான பங்கு வகிக்கின்றனர். பல்வேறு வகையான சிகிச்சைகள் பின் வருகின்றன. இயன்முறை மருத்துவம், தொழில்ரீதியான சிகிச்சை, பேச்சு பயிற்சி சிகிச்சை, தண்ணீரில் சிகிச்சை, மருந்து மாத்திரைகள், போன்றவை கொடுக்கப்படுகின்றன. இவற்றில் மிக முக்கியமாக உடல் இயக்கங்கள் சரி பண்ணுவதற்கு சரி செய்வதற்கு இயன்முறை மருத்துவம் முக்கியமாக கொடுக்கப்பட வேண்டும். ஒரு சில காரணங்களில் இயன்முறை மருத்துவம் கொடுப்பதற்கு பிரச்சினைகள் இருந்தால், அதாவது தசை இறுக்கங்கள் எலும்பு வளர்ச்சி குறைவாக இருப்பது எலும்பு அதிக வளர்ச்சி இருப்பது போன்ற காரணங்கள் இருந்தாலும் இவர்களுக்கு அறுவை சிகிச்சைகள் தேவைப்படுகின்றன.
செரிப்ரல் பால்ஸி மருத்துவத்தின் முன்னேற்றம்:
செரிபரல் பால்சி என்பது பிறக்கும் பொழுது மூளையில் ஏற்படும் சிறு பாதிப்பு மற்றும் இதைத்தொடர்ந்து கை கால்களில் ஏற்படும் பிரச்சினை இவைகள் தொடர்ந்து அதிகமாகுவது கிடையாது. ஆனால் இதன் பாதிப்புகள் அதாவது தசை இறுக்கங்கள் அதிகமாகலாம். சில குழந்தைகள் இந்த பிரச்சினை அதிகமாக இருந்தால் இவர்களுக்கு முன்னேற்றம் அடைவது சற்று காலதாமதம் ஆகிறது. மேலும் இவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்படும் நேரத்தில் எலும்புகள் தசைகள் மற்றும் எலும்பு சம்பந்தப்பட்ட அறுவை சிகிச்சைகள் சரியாக செய்யப்பட்டால் இவர்களது வாழ்க்கைத்தரம் சற்று நன்றாகவே இருக்கும்.
கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு அதாவது பேச்சு, கேட்கும் திறன், பார்க்கும் திறன், கற்றல் குறைபாடு போன்ற மூளையின் பிற பகுதிகள் பாதிக்கப்பட்டிருந்தால் இவர்களுக்கு மூளையில் சில பிரச்சினைகள் அல்லது புத்திசாலித்தனத்தில் பிரச்சினைகள் ஏற்படலாம். இவர்களை சிறப்பு ஆசிரியர்கள் மூலம் இவர்களை சரி செய்யும் முடியும்.
மேலும் ஒரு குழந்தையின் தன்னிச்சையான செயல்கள் ஒவ்வொருவருக்கும் மாறுபடலாம். காரணம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பாதிப்புகள் இருக்கும் பட்சத்தில் ஒவ்வொரு பாதிப்புகளுக்கும் ஏற்றவாறு குழந்தைகளுக்கு வாழ்க்கைத்தரம் அல்லது இயக்கங்கள் இருக்கும். சில குழந்தைகளுக்கு தனியாக பாதுகாப்பாளர்கள் தேவைப்படலாம். அல்லது சில உபகரணங்கள் தேவைப்படலாம். மிக முக்கியமாக முதன்மையாக பாதிக்கப்பட்ட குழந்தையின் தனித்துவம் மற்றும் இயக்கங்கள், அவர்களின் பிரச்சினைகளுக்கு, பிரச்சினைகளை பொருத்து சரி செய்யப்படுகின்றன. சில குழந்தைகளுக்கு cerebral palsy பாதிக்கப்பட்டவர்களுக்கு தன்னிச்சையாக வேலை செய்ய முடியாவிட்டால் அவர்களுக்கு ஒரு பாதுகாப்பாளர்கள் (care taker) அல்லது வேலையாட்கள் நியமிக்கப்பட வேண்டும். மேலும் இவர்களும் தங்களது தேவைகளை தன் வாழ்நாள் முழுவதும் இவர்கள் தேவைப்படுவார்கள். அதாவது 16 வயது கடந்த செரிபரல் பால்ஸி குழந்தைகளுக்கு சிகிச்சை அளிப்பது மிகவும் சிரமமாகும். இவர்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடுகள் தீர்ப்பதற்கும் வாய்ப்புகள் உள்ளது. மேலும் இவர்கள் பெண் குழந்தைகளாக இருப்பின் இரண்டாம் பாலின வளர்ச்சிகள் கண்காணிக்கப்பட வேண்டும். தசை இறுக்கங்கள், தசை வலுவின்மை இருந்தால் இவர்களுக்கு இயன்முறை சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். இந்த இயன்முறை சிகிச்சை பெண் இயன்முறை சிகிச்சை மருத்துவர்களைக்கொண்டு மருத்துவம், உடற் பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டும்.
பொதுவாக cerebral palsy பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு வாழ்நாள் சற்று குறைவாகவே கணக்கிடப்படுகின்றன. 5 முதல் 10 சதவீத குழந்தைகள் குழந்தை பருவத்திலேயே இறப்பதாக சொல்லப்படுகிறது. காரணங்கள் என்னவென்றால் குழந்தைகள் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு இடம்பெயர்வது, உருளுவது, தானாக உணவு உட்கொள்வது போன்ற பிரச்சினைகள் இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இவற்றில் மிக முக்கியமான இயக்கங்கள் பாதிக்கப்படுவது, தசை வலுவின்மை தசை இறுக்கங்கள், போன்றவை குழந்தைகளின் வாழ்நாளை குறைப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் இவர்கள் நடமாட முடியாமல் படுத்த படுக்கையாக ஆகிவிட்டால், இவர்களுக்கு இதயம் மற்றும் நுரையீரல் பலவீனம் அல்லது சுகவீனம் ஏற்படுகிறது. இதனால் அவர்களுக்கு மரணம் எளிதில் நடப்பதாக சொல்லப்படுகின்றது.
சுய வேலைகளையும் செய்வது(self care):
பல செரிபரல் பால்சி பாதிக்கப்பட்ட குழந்தைகள் தன் வேலைகளை தானாக செய்ய கற்றுக் கொள்கின்றனர் எடுத்துக்காட்டாக குளியல் உடை மாற்றிக் கொள்வது தலை சீவிக் கொள்வது மற்றும் தன் வேலைகளை தானாக வந்த செய்வது குழந்தைகளுக்கு கற்றுத் தரப்படுகிறது மேலும் இதுபோன்ற குழந்தைகள் கைகள் பாதிக்கப்படாமல் இருப்பின் தன் வேலைகளை செய்து கொள்கிறார்கள் இவற்றில் 50 சதவீத குழந்தைகள் இதுபோன்று தன் வேலைகளை தானே செய்து கொள்கிறார்கள் மேலும் சில குழந்தைகளுக்கு உணர்வுகள் இயக்கங்கள் பாதிக்கப்பட்டிருந்தால் தன் வேலைகளை செய்வதில் பிரச்சனைகள் ஏற்படுகின்றன இயக்கங்களின் பாதிப்புகள் மிக அதிக அளவில் பாதிப்பதாக சொல்லப்படுகின்றன மேலும் இவற்றில் கைகள் விரல்கள் அசைவின்மை இருந்தாள் இவர்களுக்கு பொருள் களை எடுப்பதில்லை உணவு உண்ணுவதில் ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடம் செல்வதற்கோ பிரச்சனைகள் ஏற்படுகின்றன இது போன்ற குழந்தைகளுக்கு ஒவ்வொரு நாளும் தன் வேலைகளை தானாக கவனித்துக் கொள்வது மிகவும் கடினமாக இருக்கும்.
உற்ப உற்பத்தித் திறன்
பொதுவாக மொழி வளர்ச்சி குன்றிய குழந்தைகள் அனைத்து விதமாகவும் பாதிக்கப்பட்டு இருந்தார் அவர்களுக்கு மருத்துவம் செய்வது உடற்பயிற்சிகள் செய்வது மிகவும் கடினம் ஆனால் பொதுவாக பல குழந்தைகளுக்கு எல்லாம் பிரச்சினைகளும் இருப்பதில்லை அதுபோன்ற தன் வேலைகளை தானாக செய்யக்கூடிய குழந்தைகளுக்கு தொழில்ரீதியான உடற்பயிற்சிகள் சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன இவர்கள் பள்ளி செல்வதில்லை வேலை செய்வதிலோ பள்ளி செல்வதில்லை வேலைக்குச் செல்வதிலும் வீட்டில் உள்ளவர்களோடு தொடர்பு கொள்வதிலும் எந்த பிரச்சனையும் இருப்பதில்லை முக்கியமாக இந்த தொழில் ரீதியான சிகிச்சை விளையாட்டாக கொடுக்கப்படுகின்றன இவர்களுக்கு இந்த விளையாட்டு போன்ற உடற்பயிற்சிகள் கடினமாக இருப்பின் குழந்தைகளுக்கு தன் உருவத்தை தன் ஆர்வத்தை துண்டு பயிற்சி அளிக்கப்படுகின்றன மேலும் உணர்ச்சிகள் இயக்கங்கள் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அவர்களுக்கு சூழ்நிலைக்கு ஏற்றவாறு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன மேலும் இந்த குழந்தைகளின் பாதுகாப்பு அவர்களுக்கு பாதுகாப்பாளர் களுக்கு பெற்றோர்களுக்கும் இந்த சிகிச்சை பற்றிய அறிவுரைகள் வழங்கப்படுகின்றன மேலும் சில குழந்தைகளினால் உடற்பயிற்சிகள் செய்ய முடியாவிட்டால் சில வேலைகளை செய்து முடிப்பது போன்ற பயிற்சிகள் அல்லது ஒரு தொழிலை கற்கும் படியான பயிற்சிகள் வழங்கப்படுகின்றன இதனால் இவர்கள் தன்னிச்சையாக அல்லது பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரச்சினைகளிலிருந்து பாதுகாக்கப்படுகின்றனர்.
பள்ளிகளில் இவர்கள் மாணவர்களோடு மாணவர்களாக உடற்பயிற்சிகள் மற்றும் விளையாட்டுகளில் பங்கேற்கின்றனர் பல குழந்தைகள் கற்றல் குறைபாடு இருந்தாலும் இவர்களுக்கு எழுத படிக்க கற்றுத் தரப்படுகின்றது மேலும் இவர்கள் செருப்பு ஆசிரியர்கள் மூலம் கல்வி கற்றுத்தரப்படுகின்றன சில குழந்தைகளுக்கு கைகள் கால்கள் பாதிப்பு இருந்தால் அவர்களுக்கு ஏற்றவாறு எழுதப்படிக்க பென்சில் பேனா போன்ற பொருள்களை பிடிப்பதற்கு கட்சிகளும் வழங்கப்படுகிறது.
பேச்சு குறைபாடு இருந்தால் இவர்களுக்கு பேச்சுப் பயிற்சியும் நாக்கு மற்றும் குரல் நாண்களை எவ்வாறு பயன்படுத்தி சப்தத்தை உருவாக்குவது என்பதையும் மற்றவர்களுடன் எவ்வாறு தொடர்பு கொள்வது என்பதையும் இவர்களுக்கு கற்பிக்கின்றனர் பள்ளிகளில் மற்றவர்களுடன் தொடர்பு கொள்வது மிக முக்கியமான விஷயமாக கருதப்படுகிறது மேலும் வழி கற்றலில் பேச்சு குறைபாடு இருந்தாள் அதாவது வார்த்தைகளை சரியாக போர்வையாக கோர்வையாக பேச முடியாத குழந்தைகளுக்கு உதடுகளுக்கு நாக்கு போன்றவைகளுக்கு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
ஓய்வு நேர செயல்பாடுகள் மற்றும் உடற்பயிற்சிகள்:
ஔபொதுவாக மூளை வளர்ச்சி குறைந்த குழந்தைகளுக்கு ஓய்வு நேரத்தில் கொடுக்கப்படும் செயல்பாடுகள் மற்றும் உடற்பயிற்சிகள் குழந்தைகளின் இயற்பியல் நலம் மனநலம் வாழ்க்கையில் விருத்தி உளவியல் வளர்ச்சி போன்றவை நன்றாக இருப்பதாக அறியப்படுகிறது பொதுவாக இதுபன்ற இதுபோன்ற செயல்களில் ஈடுபாடு அதிகமாக இருப்பதால் அவர்கள் மன அழுத்தத்திலிருந்து விடு படுவதாகவும் வாழ்க்கை தரத்தை அதிக படுத்துவதாகவும் கூட்டு நோக்கோடு விளையாடுவதும் குழந்தைகள் மகிழ்ச்சியாகவும் மனநிம்மதி ஆகவும் நேர்மறை விளைவுகள் வருவதாகவும் கண்டறியப்படுகின்றன மேலும் இவர்களது வாழ்க்கை தரம் சற்று உயர்வாக கண்டறியப்பட்டுள்ளது.
இந்த ஓய்வு நேர செயல்பாடுகள் அல்லது பயிற்சிகள் இரண்டு வகையாக பிரிக்கப்படுகின்றன அவை கட்டமைப்பு கூடிய மற்றும் கட்டமைப்பு அல்லாத செயல்பாடுகள் அல்லது பயிற்சிகள் குழந்தைகள் மற்றும் மற்றும் 15 வயது தாண்டிய குழந்தைகளுக்கு முதலாவதாக இயன்முறை மருத்துவ கட்சிகளும் முக்கியமாக குழுவான விளையாட்டுகள் இவர்களுக்கு வழங்கப்படுகின்றன மேலும் இதன்மூலம் இவர்களுக்கு பழக்கவழக்கங்கள் நடத்தைகள் போன்றவற்றில் மாற்றம் தெரிவதாக கண்டறியப்படுகின்றன சில குழந்தைகளுக்கு மூளையின் அதி திறன் பாதிக்கப்படும் மற்றும் வலிப்பு போன்றவை இருந்தால் இந்த ஓய்வு நேர செயல்பாடுகள் நல்ல பலன் தருவதாக அறியப்படுகின்றன இதுபோன்ற குழந்தைகளுக்கு ஓய்வு நேர செயல்பாடுகள் கொடுப்பதில் சில சமூகம் மற்றும் இயற்பியல் அல்லது செயற்கை தடைகள் இருப்பதாகவும் கூறப்படுகின்றன.
செரிப்ரல் பல்சி உள்ள குழந்தைகளுக்கு விளையாட்டு போன்றவற்றில் பங்கேற்பது சில இயற்கை இயன்முறை தடைகள் இருக்கலாம் இவற்றில் இம்முறை மருத்துவ சிகிச்சை முக்கிய பங்கு வகிக்கிறது.
பங்கேற்பு திருநெல் ஏற்படும் தடைகள் தீ ரணில்:
ஒரு குழந்தையின் பங்கேற்பு தீரன் என்பதை அந்த குழந்தையின் ஆர்வம் மற்றும் வாழ்க்கை சூழ்நிலைகள் தினந்தோறும் நடக்கும் செயல்பாடுகள் போன்றவற்றை பொருத்து அமைகிறது இவற்றில் குழந்தைகள் பங்கேற்கும் தீரன் சுய ஒழுக்கம் செய்யும் வேலைகளில் உற்பத்தி திறன் ஓய்வு நேரம் இவற்றைப் பொறுத்து அமைகிறது. உண்மையில் இவர்களுக்கு தொடர்பு கொள்வதில் பிரச்சினைகளோ நகர்வு பதில் இயக்கங்களில் பிரச்சினைகளோ கற்கும் திறன் பாதிப்புகளும் வீட்டில் உள்ள பிரச்சினைகளை சமூக தொடர்பு பிரச்சினைகளோ இவர்களுக்கு இருக்கலாம் என்று கண்டறியப்படுகிறது.
இந்த பங்கேற்கும் தீரன் தடைகள் மூன்று அழகிகளாக வகைகளாக பிரிக்கப்படுகின்றன சிறு நடு மற்றும் பெரிய அளவிலான தடவை தடைகள் முதலில் சிறு அல்லது மைக்ரோ தடைகள் இவைகள் என்னவென்றால் இயக்கங்கள் பாதிக்கப்படுதல் அதாவது இயக்கங்கள் உணர்ச்சிகள் மூளையின் அதீத பாதிப்புகள் போன்றவை கூறப்படுகின்றன எடுத்துக்காட்டாக சில குழந்தைகள் குழுவாக பங்கேற்பதில் சில பிரச்சனைகள் இருப்பதாக சொல்லப்படுகின்றன இதனால் அவர்களுக்கு தன்னம்பிக்கை இல்லாது இருப்பதை உணர்த்துகின்றன இரண்டாவதாக குடும்ப மற்றும் சமூகத்தில் உள்ள தடைகள் இவைகள் எதிர்மறையான பழக்கவழக்கங்கள் மற்றும் எண்ணங்கள் குடும்பத்தில் ஒத்துழைப்பு இல்லாமை மற்றும் இந்த குறைபாடுகளை பற்றிய அறியாமை இவர்களை பங்கேற்க முடியாமல் செய்கிறது.
மூன்றாவதாக பெரிய அளவில் நடப்படும் தடைகள் இவற்றில் அவர்களது அமைப்பு மற்றும் கொள்கைகள் சரிவர தெரியாத நிலையில் இந்த தடைகள் ஏற்படுகின்றன முக்கியமாக சூழ்நிலையின் காரணமாக ஏற்படும் தடைகள் அவற்றில் சில குழந்தைகளுக்கு தேவைப்படும் பக்க உபகரணங்கள் மற்றும் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு இடம்பெயர சிரமம் இருத்தல் சக்கர நாற்காலியில் நகர சிரமம் இருத்தல் மற்றும் பொது இடங்களில் இடம்பெயர சிரமம் இருக்கும் பட்சத்தில் இவர்களுக்கு இதுபோன்ற ஓய்வு நேர செயல்பாடுகள் மிக அதிக அளவில் பாதிக்கப்படுகின்றன.
ஊரு ஆராய்ச்சி முடிவு கூறுவது என்ன என்றால் 18 முதல் 34 வயது உடைய உடல்நலக் குறைபாடு உள்ள குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் அழுக்கு தேவையான உதவிகள் மற்றும் அமைப்பு சார்ந்த உதவிகள் சரியாக கிடைக்கின்றன இதனால் இவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் எந்த ஒரு பிரச்சனையையும் எளிதாக சும்மா அளிக்கின்றனர்
வயதினால் வரும் பிரச்சினைகள்:
பொதுவாக பருவம் அடைந்து மூளை வளர்ச்சி இன்றைய குழந்தைகளுக்கு சில அமைப்பு சார்ந்த உதவிகள் கிடைக்கப் பெறுவதில் சிக்கல்கள் உள்ளன ஏனென்றால் இவர்கள் சில பிரச்சனைகளை எதிர்கொள்ள தயாராக இருப்பதில் சிக்கல்கள் உள்ளன மேலும் இவர்கள் 18 வயதை கடந்தேன் 30 வயதை தொடும் பொழுது இதுபோன்ற அமைப்பு சார்ந்த உதவிகள் சரியாக ஒருசிலருக்கு கிடைப்பதில்லை மேலும் சில பெரியவர்களுக்கு 20 முதல் 30 வயதில் உள்ள அவர்களுக்கு இந்த உதவிகள் கிடைக்கப்பெறுகின்றன இவர்களில் 20 சதவீதம் அல்லது அதற்கு மேற்பட்ட செரிபரல் பால்சி உள்ள பெரியவர்களுக்கு முக்கியமாக ஓரளவுக்கு நடக்க முதியவர்களுக்கு நடக்கும் திறன் உள்ளவர்களுக்கு இந்த அமைப்பு சார்ந்த உதவிகள் கிடைக்கப் பெறுகின்றன இதனால் இவர்களுக்கு சில நீண்டகால வியாதிகள் சில ஆபத்து காரணிகள் எடுத்துக்காட்டாக உடல் பருமன் போன்றவைகள் தவிர்க்கப்படுகின்றன மேலும் சில பொதுவான பிரச்சினைகளான வழி உடலில் வழங்குதல் தசை இயக்கங்கள் போன்றவை வராமல் காக்கப்படுகின்றன இதனால் இவர்களுக்கு தன்னுடைய வாழ்நாளை அதிகமாக இருப்பதில் எந்த ஊரு சிக்கல்களையும் சந்திப்பதில்லை மேலும் இதுபோன்ற வயது முதிர்ந்த மூளை வளர்ச்சி குன்றியவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம் மற்றும் உளவியல் சார்ந்த பிரச்சினைகளை சந்திப்பது சீலன் சமூக பிரச்சினைகள் ஏற்படுகின்றன மேலும் இவர்களுக்கு மறுவாழ்வு மையம் அல்லது சில சமூக மேம்படுத்தப்பட பட்ட திட்டங்கள் உறுதுணையாக இருப்பதாக சொல்லப்படுகின்றன இவற்றில் முக்கியமாக சர்வ சிஷ்யா பியான் திட்டம் இந்தியாவில் கடைபிடிக்கப்படுகின்றது இந்த திட்டத்தில் மூளை குறைபாடு உள்ள குழந்தைகள் ஆரம்ப காலத்திலேயே கண்டறியப்பட்டு இயன்முறை மருத்துவ சிகிச்சை தொழில்முறை மருத்துவ சிகிச்சை பேச்சு சிகிச்சை கற்றல் குறைபாடு மற்றும் சிறப்பாசிரியர்களை கொண்டு சரி செய்யப்படுகின்றன.
நன்றி
ஸ்ரீ குமரன் பிசியோதெரபி கிளினிக் & உடற்பயிற்சி மையம்
Comments