முன்னுரை:
எஃப்ஸ் பால்ஸி(erb's palsy) என்பது குழந்தை பருவத்தில், பிறந்த குழந்தைகளுக்கு கைகளில் ஏற்படும் ஒருவித வாதம்(Paralysis). இந்த வகையான வாதம் பிரேக்கியல் ஃபிளக்சஸ்(Brachial plexus) எனப்படும் ஒரு நரம்பு முடிச்சு பகுதி, பாதிக்கப்படுவதால் ஏற்படுகிறது. குழந்தை பிறக்கும்பொழுது இந்த நரம்பு முடிச்சு பகுதியில் நரம்பு அழுத்தப்படுவது(compression), அடிபடுவது(injury) அல்லது நரம்புப்பகுதி(Nerve root) பாதிக்கப்படுவது அல்லது நரம்பு அழுத்தப்படுவதால் போன்ற காரணங்களால் ஏற்படுகிறது. மிக முக்கியமாக கழுத்து தண்டுவடப்(cervical spinal) பகுதியில் C5, C6 எனப்படும் நரம்புப்பகுதியில் பாதிப்பு ஏற்படுகிறது. இந்த நரம்பு முடிச்சு அடிபடும் பொழுது இந்த முடிச்சு பகுதியில் சேரும் அனைத்து நரம்புகளும் பாதிக்கப்படுகின்றன.
பாதிக்கப்படும் நரம்புகளுக்கு ஏற்றார்போல் தசை அசைவுகள், உணர்ச்சிகள், போன்றவை, பாதிக்கப்படும் நரம்புகளின் பாதிப்புகளைப் பொறுத்து பாதிப்பு ஏற்படுகிறது. சிலமாதங்கள் முதல் சில காலங்களில் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். இவற்றில் முக்கியமாக ரீஹபிடேஷன் தெரபி(Rehabilitation therapy) கொடுக்கப்பட வேண்டும்.
உடற்கூறியல்(Anatomy):
பொதுவாக பிரேக்கியல் ஃபிக்சஸ் நரம்பு தொகுப்பில் எஃப்ஸ் புள்ளி(Erb’s point) பகுதியில் , கழுத்து தண்டுவட நரம்பு C5 மற்றும் C6 நரம்புகள் பாதிக்கப்படும். இவற்றில் பிரேக்கியல் ஃபிக்சஸ் நரம்பு தொகுப்பில் சில நரம்புகள் பாதிக்கப்படுகின்றன அவை ஆக்சிலரி நரம்பு(Axillary), மஸ்குலோ குட்டேனியஸ்(Musculo cutaneous) நரம்பு, சுப்பராஸ்கேபுளர்(Suprascapular) நரம்பு ஆகியவை.
புள்ளியியல் விபரம்: எஃப்ஸ் பால்சி வாதம், சிலருக்கு 3 முதல் 25 சதவீதம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிரந்தர பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இவர்களில் குணமாகும் கால நேரங்கள்(Recovery duration), பாதிக்கப்பட்ட முதல் சில வாரங்களில் சரி செய்யப்படுகிறது. பூரண குணம்(complete recovery) என்பது சில சிலருக்கு முதல் இரண்டு வாரங்களிலேயே ஏற்படுகிறது.
நரம்பு பாதிக்கப்படும் விதம்(Mechanism of nerve injury): பொதுவாக வாதம் ஏற்படுவதற்கு காரணங்களாக நரம்பு பகுதி, வெளிப்புறமாக இழுக்கப்படும்(outward stretch) அல்லது அடிபடுவது(Injury) போன்றவை மூலம் ஏற்படுகிறது. இவற்றில் இந்த நரம்பு பாதிப்பு குழந்தை பிறக்கும்பொழுது தலைப்பகுதி மற்றும் கழுத்துப் பகுதி மாற்று பகுதியில்(Altered positions) இருப்பதனால் தோள்பட்டை பகுதியில் நரம்பு அழுத்தம் ஏற்படுகிறது. பொதுவாக குழந்தை பிறப்பின் பொழுது குழந்தையின் தலை ஒருபுறமாக சாய்ந்த நிலையில் இருந்திருந்தால், குழந்தை வெளிவரும் நேரத்தில் நரம்பு அழுத்தம் ஏற்படுகிறது. சில சமயங்களில், சில சிக்கலான குழந்தை பிறப்புகளில் தலைப்பகுதியை அதிக விசையோடு வெளிப்புறமாக இழுக்கும்பொழுது தோள்பட்டை பகுதி சிக்கிக்கொண்டு கழுத்துப்பகுதியில் உள்ள நரம்புகள், அதிக அழுத்தத்தையும் அல்லது நரம்பு அடிபடுவதை உண்டாக்குகிறது. இதனால் நரம்பு அழுத்தம் உண்டாகின்றன.
ஆபத்துக் காரணிகள்: அகலமான தோள்பட்டை, உடல் பருமன், சர்க்கரை நோய், எதிர்பாராமல் குழந்தை மாற்று நிலையில் இருப்பது(Altered position).
அறிகுறிகள்(Signs & symptoms): எஃப்ஸ் வாதத்தின் முக்கிய அறிகுறியாக வெயிட்டர்ஸ் டிப்ஸ் டீபார்மிட்டி(Waiter’s tips deformity) எனப்படும், அறிகுறி கூறப்படுகிறது. இதனால் தோள்பட்டை வெளிப்பகுதியில் திருப்ப இயலாமை(shoulder external rotation), முழங்கை மடக்குவதில் இயலாமை(elbow flexion). கை மற்றும் மணிக்கட்டுப் பகுதி நீட்டுவதில்(hand and wrist extension) பாதிப்பு, போன்றவை இருக்கலாம்.
பொதுவாக பாதிக்கப்பட்டவர்களின் கைகள் தூக்கிய நிலைகளில்(elevated shoulder), உள்பக்கமாக திரும்பிய நிலையில்(shoulder medial rotation), முன் முழங்கை பகுதி நீட்டியவாறு(elbow extension), மணிக்கட்டுப் பகுதி மடங்கிய நிலையில்(wrist flexion) இருக்கலாம். மேலும் சிலருக்கு முன் முழங்கை பகுதியில் உணர்ச்சிகள் குறைந்தும்(dimnished sensation) காணப்படலாம். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் புஜ பகுதியை தூக்க இயலாது, முழங்கைப் பகுதியை மடக்க இயலாது. இவைகள் டெல்டயட்(Deltoid), பைசெப்ஸ்(Biceps) மற்றும் சூபிரஸ்கேபுளர்(Suprascapular) தசைகள் பாதிக்கப்படுவதால், மேலே கூறிய அசைவுகள்(Movements) பாதிக்கப்படுகின்றன. இந்த நரம்பு பகுதிகள் மற்றும் நரம்பு சந்திப்புகள்(Nerve junction) பாதிப்புகள் மிக அதிகமாக இருக்கும் பொழுது, தோள்பட்டையில் ஸ்கேபுல(scapula) எனப்படும் தட்டை எலும்பு(flat bone) அசைவது குறையும்.
கண்டறியும் சோதனைகள்:
பொதுவாக பாதிப்புகள் கண்டறிய, நோய் பற்றிய வரலாறு(history of disease) மற்றும் இயன் முறை சோதனைகள்(Physical test) மற்றும் நரம்பு சோதனைகள்(Neural test) மூலம் கண்டறிய இயலும்.
நோய் வரலாறு அறிதல்:- பொதுவாக நோய் வரலாற்றில் பிரசவ காலங்களில் அம்மாவுக்கு ஏற்படும் சர்க்கரை நோய், உடல் பருமன் மற்றும் பிரசவ காலத்தில் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து அறியப்பட வேண்டும்.
இயன்முறை சோதனைகள்:- பொதுவாக இயக்கங்கள் பாதிக்கப்படுவது, மற்றும் மூட்டுகள், தசைகள் அசைவற்று இருப்பது போன்றவற்றை வைத்து கண்டறியப்படுகிறது.
நரம்பியல் சோதனைகள்:- இவற்றில் தசை வலிமை(muscle power), உணர்ச்சிகள்(sensations), தசைநார் அனிச்சைச் செயல்(deep tendon reflex) மற்றும் குழந்தைகளில் உள்ள அனிச்சைச்செயல்(Primitive reflexes) போன்றவை தீவிரமாக சோதிக்கப்படுகிறது.
நிழற்படங்கள் மற்றும் ஸ்கேன்கள்:- எக்ஸ்ரே நிழற்ப்படங்கள் நெஞ்சு பகுதிக்கு(chest X-ray) எடுக்கும்பொழுது, கழுத்துப் பட்டை எலும்பு(clavicle) அல்லது தோள்பட்டை எலும்பு(Humerus) உடைந்து இருந்தால் கண்டறிய முடியும். எம்ஆர்ஐ ஸ்கேன்கள் தோள்பட்டைக்கு எடுக்கும்பொழுது தோள்பட்டை பகுதியில் மூட்டு விலகல்(joint dislocation) அதன்மூலம் ஏற்படும் நரம்பு பாதிப்பு(nerve impingement) போன்றவற்றை கண்டறிய இயலும். சிடி ஸ்கேன்கள் எடுக்கும்பொழுது நரம்பு பாதிப்புகள் கண்டறிய இயலும். இ எம் சி(EMG), நரம்பு கடத்துதிறன் சோதனை(Nerve conduction test) போன்றவை செய்யும்பொழுது தசைகளில் மற்றும் நரம்புகளில் ஏற்படும் பாதிப்புகளை கண்டறிய முடியும்.
மருத்துவம் மற்றும் சிகிச்சைகள் :
பொதுவாக பிரேக்கியல் ஃபிளக்சஸ்(Brachial plexus) பிரச்சினைகள் மருத்துவம் செய்யாமலேயே சரியாவதாக கூறப்படுகிறது. சில குழந்தைகளுக்கு மூன்று முதல் நான்கு வாரங்களில் மாதங்களில் இவை சரி செய்யப்படுகின்றன. சில எதிர்பாராத காரணங்களால் 80 முதல் 90 சதவீத குழந்தைகளுக்கு நோய் பாதிப்புகள், சீரான நிலைக்கு வருவதாக கூறப்படுகிறது. இந்த மருத்துவ சிகிச்சையில் இயன்முறை மருத்துவம் முக்கிய பங்கு வகிக்கிறது.
இயன்முறை மருத்துவம் பாதிக்கப்பட்ட உடன் உடனடியாக கொடுக்கப்படும் சிகிச்சை நல்ல பலன்களை பெறுவதாக கூறப்படுகிறது.
இயன்முறை மருத்துவம்(Physiotherapy treatment): பொதுவாக முதல் ஆறு மாதங்களில் இயன்முறை மருத்துவம் அல்லது சிகிச்சை எடுத்துக்கொள்ளும்போது நிரந்தர பாதிக்கப்ப(permanent impairment) தடுக்க முடியும். மேலும் பயிற்சிகள் சரியாக கொடுக்கப்படும் பொழுது ஒவ்வொரு மூட்டுப் பகுதி, சிறப்பாக அசையவும், தசைகள் வலிமையுடன் இருக்குவும் உதவுகிறது.
பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள்(parents) மற்றும் பாதுகாவலர்களுக்கு(guardian or care taker), பயிற்சிகள்(Training) மற்றும் குழந்தைகளை கண்காணிப்பது(Handling & watching) போன்றவை கற்றுத் தரப்படுகிறது. இதனால் குழந்தைகளின் பாதிக்கப்பட்ட மூட்டுப் பகுதி தசைகள் வலிமையுடனும், அதிக அசைவுடன் இருப்பதற்கு உதவுகிறது.
பயிற்சிகள் மற்றும் செயல்வழி பயிற்சிகள் கொடுக்கப்படும் பொழுது இயக்கங்கள், தசைகளின் வலிமை போன்றவை முன்னேற்றம் அடைகிறது. பயிற்சிகள் கொடுக்கப்படும் பொழுது மூட்டுகள் அசைவின்மை, இறுகுவது மற்றும் வலி போன்றவை வராமல் தடுக்கப்படுகிறது.
ஸ்பிளின்ட் மற்றும் கேஸ்ட்(splint & cast): ஸ்பிரின்ட் மற்றும் கேஸ்ட் எனப்படும் உபகரணங்கள் பயன்படுத்தும் பொழுது இரண்டாம் நிலை எதிர்விளைவுகள்(secondary adverse effects) தடுக்கப்படுவது மற்றும் இயக்கங்களை அதிகப்படுத்தவும் முடியும். பெற்றோர்களுக்கு குழந்தைகளை எவ்வாறு பராமரிப்பது, கையாளுவது மற்றும் வீட்டிலேயே பயிற்சிகள் கொடுப்பது போன்றவை கற்றுத்தரப்படுகிறது. இதனால் குழந்தைகளுக்கு குணமடையும் வேகம்(Recovery rate) அதிகபடுத்தப்படுகிறது. இயன்முறை மருத்துவத்தில் கொடுக்கப்படும் மின்தூண்டல் சிகிச்சை(electrical stimulation) பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சிறப்பாக, நரம்பு மற்றும் தசைகளுக்கு வலிமையை கொடுக்கிறது. தொழில் முறை சிகிச்சை(occupational therapy) அல்லது மருத்துவத்தில் குழந்தைகளின் உடல்நிலை துள்ளியமாக கண்டறியப்பட்டு பாதிப்புகளுக்கு ஏற்றார்போல் பயிற்சிகள் மற்றும் ஒவ்வொரு நாளும் செய்யப்படும் வேலைகளுக்கு ஏற்றார்போல் பயிற்சிகளும் கொடுக்கப்படுகிறது. மருத்துவம் இவ்வாறு பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நல்ல முன்னேற்றத்தை கொடுக்கிறது.
இயன்முறை மருத்துவம்(Physiotherapy treatment): இயன்முறை மருத்துவம் ஒன்று முதல் இரண்டு வாரங்கள், பாதிக்கப்பட்ட குழந்தைகளின் அசைவுகள் அதிக அளவு இல்லாதவாறு மிக கவனமாக கண்காணிக்கப்படுகிறது. இதனால் மூட்டுகள் தசைகள் அடிபடுவது தவிர்க்கப்படுகிறது பாதிக்கப்பட்ட குழந்தைகளை, கம்பு கூட்டு(axilla) பகுதியில் பிடித்து தூக்குவது கூடாது. இதனால் கம்பு கூட்டுப் பகுதியில் ஆக்சில்லரி நரம்பு எனப்படும் நரம்பு பகுதி அடிபடுவது அல்லது அழுத்தம் ஏற்படுவது தவிர்க்கப்படுகிறது. இதனால் பிரேக்கியல் ஃபிளக்சஸ் நரம்பு முடிச்சு பாதிக்கப்படுவது தடுக்கப்படுகிறது. குழந்தைகளை தூக்கும் பொழுது அல்லது கையாளும்போது பின் பக்கமாக அல்லது ஒருபுறமாக கையாள வேண்டும். இதனால் பாதிக்கப்பட்ட பகுதியில் அழுத்தம் ஏற்படுவது தவிர்க்கப்படுகிறது. குழந்தைகளுக்கு அணிவிக்கப்படும் உடைகள், கைகள் இல்லாதவாறு (sleeveless) பார்த்துக் கொள்ள வேண்டும். இதனால் தோள்பட்டை பகுதியில், அதிக இயக்கத்தை தடுக்க முடியும். பொதுவாக உடைகள் அணிவிக்கப்படும் முறைகள் எளிதாக அணியுமாறு இருக்கவேண்டும்
பெற்றோர்களுக்கு பயிற்சிகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட வேண்டும். பொதுவாக குழந்தை பிறந்து இரண்டு முதல் மூன்று நாட்களில் வீடுகளுக்கு செல்லும் பொழுது அங்கு பயிற்சிகள் முறையாக கொடுக்கப்படவேண்டும். குழந்தைகள் வீட்டில் இருக்கும் பொழுது பயிற்சிகள் பயிற்சிகள் கொடுக்கப்படவேண்டும். அவை பின்வருமாறு மூட்டுகளின் அசைவுகள் குறையாதவாறு மூட்டுகளுக்கு இயக்கங்கள் கொடுக்கப்படவேண்டும். முக்கியமாக பந்து கிண்ண மூட்டு(shoulder joint), முழங்கை மூட்டு பகுதி(elbow joint), மணிக்கட்டுப் பகுதி(wrist joint) போன்றவை சரியாக இயக்கங்கள் கொடுக்கப்படவேண்டும். முடிந்த அளவு குழந்தைகள் தானாக செய்யும் அசைவுகளை(self active movements) சரியான முறையில் பயிற்சிகளாக கொடுக்கப்பட வேண்டும். பெற்றோர்கள் மற்றும் குழந்தை பாதுகாவலர்களுக்கு, குழந்தைகளை எவ்வாறு தூக்க , கையாள, குழந்தைகளின் அசைவுகள் , மூட்டுகளின் நிலைகள் சரியான நிலைகளில் இருக்குமாறு கற்பிக்க வேண்டும்.
அறுவைச் சிகிச்சை(surgery): பொதுவாக எஃப்ஸ் பால்ஸி(erb’s palsy) பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை கொடுக்கப்படுவதில்லை. இருந்தாலும் இயன்முறை மருத்துவம் பலனளிக்காத நிலையில், அறுவை சிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது. குழந்தை பிறந்து வேறுவழியின்றி எந்த ஒரு மருத்துவம் கொடுக்க முடியாத நிலையில், அறுவை சிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது. இவ்வாறு செய்யப்படும் அறுவை சிகிச்சையில் நரம்பு மாற்று அறுவை சிகிச்சை(Nerve transplantation), தசை நார் மாற்று அறுவை சிகிச்சை(Tendon transfer) போன்றவை செய்யப்படுகிறது. இதனால் குழந்தைகள் தங்களுக்கு தேவையான வேலைகளை தினந்தோறும் செய்வதற்கு(Activities of daily living) ஏற்றவாறு செய்யப்படுகிறது. மேலும் அறுவை சிகிச்சை முடிந்த பின்பும், இயன்முறை மருத்துவம்(Physiotherapy), மின்தூண்டல் சிகிச்சை(Electrical stimulation), பயிற்சிகள்(Exercise) கொடுக்கப்படுகிறது. இதனால் குழந்தைகள் வளரும் போது தங்களுடைய மூட்டுகளின் அசைவுகள் மற்றும் தசைகளின் வலிமையை அதிகப் படுத்தமுடியும்.
நன்றி….
மேலே உள்ளவை சில வலைத்தளங்களில் இருந்து சேகரிக்கப்பட்டவை.
SRIKUMARAN PHYSIOTERAPY CLINIC & FITNESS CENTER
Comments