முன்னுரை :
கீழ்வாதம் என்பது முதுகுத் தண்டின்(spinal cord) கீழ் பகுதி அல்லது இடுப்பு பகுதியின் கீழ் பகுதியிலிருந்து கால் வரை உள்ள தசைகள் செயலிழந்து போவது அல்லது வாதம்(paralysis) உள்ளதை கீழ்வாதம் என்று கூறுகிறோம். பொதுவாக கீழ்வாதம் என்பது இடுப்புக்கு கீழ் உள்ள பகுதி செயலிழந்து போவதற்கு காரணங்களாக, மூளை பகுதியோ அல்லது முதுகு தண்டுவடப் பகுதியும் பிரச்சினைகளும், குறைபாடுகளும் இருக்கலாம். மேலும் இவ்வாறு பிரச்சினைகள் அல்லது குறைபாடுகள் இருந்தால் மூளைப் பகுதியிலிருந்து வரும் சமிக்கைகளை(impulses) முதுகு தண்டுவட நரம்பு மண்டலம் மூளைப் பகுதியிலிருந்து கால் பகுதிக்கு கொண்டு செல்வதில் சிக்கல்கள் ஏற்படுகின்றன. இதன் காரணமாக இடுப்புக்கு கீழ் பகுதியில் உள்ள தசைகள் அனைத்தும் செயலிழந்து காணப்படுகின்றன.
இந்த கீழ்வாதம் ஒவ்வொரு மனிதர்களுக்கும் ஒவ்வொரு விதமான பிரச்சினைகளைக் கொண்டும் அறிகுறிகளைக் கொண்டும் காணப்படுகின்றன. கீழ்வாதம் உள்ளவர்களுக்கு நடக்கமுடியாமல் நடமாட முடியாமல் சக்கர நாற்காலியில் இருக்கலாம். மேலும் சில கீழ்வாதம் உள்ள நோயாளிகளுக்கு நடை உபகரணங்களை(orthotics) பயன்படுத்தி நடக்க இயலும். சிலர் படுத்த படுக்கையாக(bed ridden) இருக்கிறார்கள். மேலே சொன்ன அனைத்து பிரச்சினைகளும் தனித்தனியாகவும் அல்லது ஒன்றாகவோ இருக்கலாம்.
முதுகு தண்டுவடம் உடற்கூறியல்(spinal cord anatomy):
முதுகு தண்டுவடம் என்பது மூளை மற்றும் உடலின் மற்ற பாகங்களை தொடர்பில் வைத்திருக்கும் ஒரு நரம்பு மண்டல பகுதியாகும். இந்த முதுகு தண்டுவடம்(spinal cord), முதுகு தண்டுவட எலும்புகளின்(spinal vertebrae) நடுப்பகுதியில் துளை(spinal canal) போன்ற பகுதியில் அமைந்துள்ளது. இந்த முதுகு தண்டுவடம் அவற்றைச் சுற்றி மூன்று உறைகள் அமைந்துள்ளன. அந்த உறைகளின் நடுவில் முதுகு தண்டுவட திரவம்(cerebro spinal fluid) அமைந்துள்ளது. இது முதுகு தண்டுவட எலும்புகள் மற்றும் முதுகு தண்டுவடத்தில் உள்ள நரம்பு மண்டலத்தில் உள்ள நரம்புகளில் ஏற்படும் உராய்வு மற்றும் அதிர்வை தாங்கும்(shock absorbtion) காரணியாக செயல்படுகின்றன. பொதுவாக முதுகு தண்டுவட நரம்பு மண்டலத்தில் கோடிக்கணக்கான நரம்பு செல்கள் மற்றும் நரம்பு செய்திகள்(neural messages), கைகள், கால்கள், உடம்பு மற்றும் பல உறுப்புகளுக்கு மூளைப் பகுதியிலிருந்து சமிக்கைகளை(efferent impulses) எடுத்துச் செல்கின்றன. மத்திய நரம்பு மண்டலத்தில்(central nervous system), மூளை மற்றும் முதுகு தண்டுவடம் உள்ளது. இந்த முதுகு தண்டுவடம் உடலின் மற்ற பாகங்களில் உள்ள வெளிப்புற நரம்பு மண்டலத்தை(peripheral nervous system) தொடர்பில் கொண்டுள்ளன. இந்த வெளிப்புற நரம்பு மண்டலமானது கைகள் கால்கள் உடம்பு மற்றும் உடல் உள்ளுறுப்புகள்(visceral organs) போன்றவைகளுக்கு நரம்புகளை தொடர்பில் கொண்டுள்ளன. இவை உடலின் வெளிப்புற பகுதியிலிருந்து வரும் உணர்வு சமிக்கைகளை(sensory impulses) மூளைக்கு கொண்டு செல்வது மற்றும் மூளையிலிருந்து வரும் சமிக்கைகளை வெளிப்புற நரம்பு மண்டல உறுப்புகளுக்கு கொண்டு செல்வது போன்றவற்றை செய்கின்றன.
கீழ்வாதம்:
பொதுவாக கீழ்வாதம் பின்வரும் சில காரணங்களால் ஏற்படுகின்றன.
- மூளைப் பகுதியில் ஏற்படும் பிரச்சனை
- முதுகு தண்டுவடத்தில் முக்கியமாக முதுகு பகுதியில் ஏற்படும் பிரச்சனைகள்
- முதுகுத் தண்டுவடத்தின் கீழ் பகுதி மற்றும் சக்ரல்(sacral region) சேர்க்கை எனப்படும் தண்டுவடப் பகுதியில் ஏற்படும் பிரச்சினைகள் மற்றும் குறைபாடுகள்
பொதுவாக முதுகுத்தண்டுவடத்தில் மேலே சொன்ன அனைத்து பகுதியிலும் அடிபடும். இதனால் இந்த முதுகுத் தண்டுவட பகுதியில் பயணம் செய்யும் சமிக்கைகள் தடுத்து நிறுத்தப்படுகின்றன. இந்த சமிக்கைகள் மூளையில் இருந்து மற்ற பகுதிகளுக்கும் மற்ற பகுதியிலிருந்து மூளைக்கும் செல்வது தடுத்து நிறுத்தப்படுகிறது. இதனால் எந்த பகுதியில் முதுகு தண்டுவடப் பகுதியில் அடிப்படடதோ அப்பகுதியிலிருந்து அதற்கு கீழே உள்ள பகுதியில், உடம்புகளில் இயக்கங்களும்(movements), உணர்வுகளும்(sensation) மற்றும் சில தானியங்கி இயக்கங்களும்(reflexes) பாதிக்கப்படுகின்றன. முக்கியமாக இந்த உணர்வு பிரச்சனைகள் குறைவாகவோ(hyposensitivity) அல்லது அதிகமாகவோ(hypersensitivity) உணரப்படுகின்றன. இவை முற்றிலுமாக உணர்வு இல்லாமலும் இருந்தால் மதமதப்ப(numbness) உணர்வுகள் இருக்கும். உணர்வுகள் அதிகமாகும் பொழுது எரிச்சல்(burning) போன்ற உணர்வுகளும் அல்லது அளவுக்கு அதிகமான வலி(untolerable pain) நோயாளிகள் உணரலாம்.
சில நேரங்களில் இந்த கீழ்வாதம் மிகவும் தற்காலிகமாகவோ(paraparesis), ஒன்று அல்லது இரண்டு கால்களில் ஏற்படுகின்றன. மேலும் சில நேரங்களில் கீழ்வாதம் வந்தவர்களுக்கு எலும்புகள் உடையும் பொழுது சில காரணங்களால் வாதம், வலிப்பு(fits) அல்லது சில ஒவ்வாமை(alergy) மற்றும் அறுவை சிகிச்சையின் பின்விளைவுகள் ஏற்படலாம்.
கீழ்வாதம் என்பது விபத்துக்களினால்(Road Traffic Accident) ஏற்பட்டிருந்தால், பொதுவாக இடுப்புக்கு கீழ் பகுதியில் தசை இறுக்கங்கள்(spasticity), தசை வலுவின்மை(weakness), சிறுநீரக குறைபாடு(urinary bladder disturbances) மற்றும் சில பிரச்சினைகள் ஏற்படலாம். மேலே கூறப்பட்ட அனைத்து அறிகுறிகளும், விபத்துக்கள் அல்லது முதுகு தண்டுவட நரம்பு மண்டலத்தின் பாதிப்பைப் பொறுத்து அமைகின்றன.
கீழ்வாதம் பிரச்சினையை உடனே கண்டறிய முடியாது. சில மணி நேரங்கள் முதல் சில நாட்களில் இந்த பிரச்சினைகளை கண்டறியும் முடியும். இந்த கீழ்வாதம் போன்ற பிரச்சினைகளை கண்டறிய, மூளை மற்றும் முதுகு தண்டுவட பகுதியில் நரம்புகளின் பாதிப்புகளை கண்டறிய சில பரிசோதனைகள் செய்யப்படுகின்றன.
- ரத்த பரிசோதனை: ரத்தப் பரிசோதனையில் நோய்தொற்று, புற்றுநோய் மற்றும் சில பரவக்கூடிய நோய்கள் இருப்பதை அறியமுடியும்.
- முதுகு தண்டுவட கீழ்ப்பகுதியில் முதுகு தண்டுவட திரவம் எடுத்து பரிசோதனை செய்யும்பொழுது, அவற்றில் உள்ள வேதியல் மாற்றங்கள் மூலம் பிரச்சினைகளை அறியமுடியும்.
3 சிடி ஸ்கேன் அல்லது எம் ஆர் ஐ ஸ்கேன், மூளை மற்றும் முதுகு தண்டுவட பகுதிக்கு பரிசோதனை செய்யும் பொழுது அவற்றின் பிரச்சினைகளை எளிதாக கண்டறிய முடியும்.
4 மைக்ரோ கிராபி எனப்படும் பரிசோதனையின் மூலம் முதுகுத்தண்டுவடத்தில் ஏதேனும் பிரச்சினைகள் இருக்கிறதா என்பதைக் கண்டறிய இயலும்.
கீழ்வாதம் காரணங்கள்:
பொதுவாக கீழ்வாதம் நோயாளிகளுக்கு கால்கள் மிகவும் நன்றாக உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் மூளை மற்றும் முதுகு தண்டுவடப் பகுதியில் ஏற்படும் சமிக்கைகளை அனுப்பதில் ஏதாவது பிரச்சினைகள் இருந்தால் மட்டுமே, தசைகளின் இயக்கங்கள் மற்றும் வலிமை பாதிக்கப்படும். மேலும் இந்த பாதிக்கப்பட்ட கால்களில் தசை மற்றும் தோல் பகுதியில் ஏற்படும் உணர்வின்மை பிரச்சினைகளை மேலும் அதிகமாக்குகிறது.
மூளை மற்றும் முதுகு தண்டுவடப் பகுதி சரியாக சமிக்கைகளை அனுப்பவும் அல்லது பெறவில்லை என்றால் பாதிக்கப்பட்ட பகுதி வலுவிழந்து காணப்படும். கீல்வாதம் ஏற்படுவதற்கான சில முக்கிய காரணங்கள்:
- சாலையோர விபத்துக்கள்(Road traffic accidents) 38% கீழ்வாதம், கார் மற்றும் இருசக்கர வாகன விபத்துக்களில் ஏற்படுகின்றன.
- 30% கீழ்வாதம் பிரச்சினைகள், உயரமான இடத்திலிருந்து கீழே விழும் பொழுதும் ஏற்படுகின்றன.
- 14% கீழ்வாதம் தாக்குதல்களின்போது, முக்கியமாக துப்பாக்கி குண்டு பாயும்போது ஏற்படுகின்றன
- 9% கீழ்வாதம் விளையாட்டுகளின் போதும் மற்றும் பொழுது போக்குகளின் போதும், ஸ்கியூபா டைவிங் எனப்படும் பொழுது போக்குகளின் போதும் ஏற்படுகின்றன
- 5% கீழ்வாதம் மருத்துவங்கள் மற்றும் அறுவை சிகிச்சையின் போது ஏற்படுகின்றன.
பொதுவான அதிகமான முதுகு தண்டுவட மற்றும் மூளை பகுதியில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு, விபத்துக்கள்(accidents) மற்றும் மூளைப் பகுதியில் திடீரென ஏற்படும் பிரச்சினைகள்(cerebrovascular accidents) முக்கிய காரணமாக சொல்லப்படுகின்றன. மேலும் விபத்துக்கள் அல்லாத கீழ்வாதம் உள்ள நோயாளிகளுக்கு முதுகு தண்டுவடத்தில் ஏற்படும் நோய்களும்(spinal diseases) அல்லது பிறவி குறைபாடுகள்(congenital spinal disorders) கலாம் என்று கூறப்படுகிறது.
அவற்றில் சில:
- பக்கவாதம்(stroke), விபத்துக்கள் அல்லாத காரணங்களாக சொல்லப்படுகின்றது.
- ஜெனிடிக்(genetic disorders) காரணங்கள், சில பரம்பரையாக(hereditary) ஏற்படும் கீழ்வாதம் நோய்களுக்கு அல்லது குறைபாடுகளுக்கு, ஜெனிடிக் காரணங்கள் இருக்கலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது.
- ஆக்சிசன் அளவு குறைதல், குழந்தை பிறக்கும் பொழுது அல்லது பிறந்த பின்பு ஏற்படும் ஆக்சிசன் அளவு குறைபாடு மூளை மற்றும் தண்டுவட பகுதியை பாதிக்கின்றன.
- auto immune disorder – உடலிலுள்ள நோயெதிர்ப்பு சக்திகளை கொண்ட செல்கள் தன் உடம்பில் உள்ள செல்களை அளிக்கும் குறைபாடு.
- மூளை மற்றும் நரம்பு பகுதியில் ஏற்படும் நோய் தொற்று(infection), புற்றுநோய்(tumor) அல்லது புற்றுநோயினால் ஏற்படக்கூடிய பிரச்சனைகள், மூளை மற்றும் தண்டுவட பகுதியில் ஏற்படக்கூடிய புற்றுநோய் கட்டிகள், நரம்பு மண்டலத்தை பாதிக்கின்றன.
- முதுகு தண்டுவட குறைபாடுகள், இவற்றில் எலும்புகள் அமைப்பில் அல்லது நரம்பு மண்டலத்தில் அல்லது முதுகு தண்டுவட திரவதில் ஏற்படும் குறைபாடுகள்.
மருத்துவ அறிகுறிகள்:
கீழ்வாதம் என்பது பல மாறுபட்ட அறிகுறிகளை உள்ளடக்கியது. இது ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு நேரத்திலும், ஒவ்வொரு நாட்களிலும் வித்தியாசமான அறிகுறிகளை உணர்கின்றனர். மேலும் கீழ்வாதம் முதுகு தண்டுவட பகுதியில் ஏற்படும் பிரச்சினைகள் மற்றும் நோய் போன்றவை அடிப்படையாகக் கொண்டு இவற்றின் அறிகுறிகள் காணப்படுகின்றன.
சில நோய்களில் அறிகுறிகள் வீக்கம் மற்றும் வலி போன்றவை ஏற்படுகின்றன. நோய்த்தொற்று இருக்கும்பொழுது தகுந்த மருத்துவம் செய்யப்படும் பொழுது, இதனுடைய அறிகுறிகள் அல்லது முற்றிலுமாக மறைகின்றன(complete disappear).
கீழ்வாதம் மற்றும் அதனுடைய தசை இயக்கங்களின் பிரச்சினைகளை கொண்டு அதனுடைய பாதிப்புகள் மற்றும் முதுகுத் தண்டுவடத்தின் ஏற்படும் பாதிப்புகள் வேறுவேறாக இருப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன. கீழ்வாதத்தில் ஏற்படும் பிரச்சினைகளை சரி செய்வது சற்று கடினமாகவே உள்ளது. இதனுடைய விளைவுகளை கண்டறிவதிலும் சில சிக்கல்களும் இருப்பதாக கூறப்படுகின்றன
- உணர்வு குறைவு அல்லது மறைவு. பொதுவாக அடிப்பட்ட அல்லது பாதிக்கப்பட்ட முதுகு தண்டுவட பகுதியில் அல்லது இடுப்புக்கு கீழ் பகுதியிலிருந்து உணர்வுகள் பாதிக்கப்படுகின்றன.
- மாய உணர்வு பிரச்சினைகள்(phantom sensory problem ), பொதுவாக இதுபோன்ற பிரச்சினைகள் அனைவருக்கும் வருவதில்லை. இருந்தாலும் ஒருசிலருக்கு காரணமின்றி வலி, மின்சாரம் போன்ற ஒருவிதமான உணர்ச்சி(shock like sensation) அல்லது அடிபட்ட பகுதியின் கீழ் பகுதியில் உணர்வுகள் இருப்பது மற்றும் இல்லாமலிருப்பது போன்ற உணர்வுகள் ஏற்படலாம்.
- பாலியல் உணர்வுகள்(sexual sensation) குறைவு. ஒரு சில கீழ்வாதம், அதிக அளவு உள்ள நோயாளிகளுக்கு பாலியல் உணர்வுகள், விந்து வராமல் இருப்பது அல்லது குறைவாக இருப்பது போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம்.
- சிறுநீர் மற்றும் மலம் போன்றவை, உணர்ச்சிகளில் குறைபாடு அல்லது இழப்புகள் ஏற்படலாம்.
- அடிபட்ட அல்லது பாதிக்கப்பட்ட இடத்திலிருந்து கீழ்ப்பகுதியில் இயக்கங்கள் இல்லாதிருத்தல்
- கீழ்வாதம் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மன அழுத்தம், போன்றவைகளும் வரலாம் என்று கருதப்படுகின்றன.
- கீழ்வாதம் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிக இறுக்கமான வலி மற்றும் இயக்கங்கள் குறைந்து போதல் போன்றவை இருக்கலாம்.
- கீழ்வாதம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடல் இயக்கங்கள் அசைவின்மை காரணமாக, உடல் பருமன் போடுவது இயற்கையாக உள்ளது.
- இரண்டாம் பட்ச நோய்த்தொற்றுகள்(secondary infection), உடலில் அசைவில்லாத பகுதியில் தோல் பகுதியில் ஏற்படலாம். முக்கியமாக படுக்கை புண்கள்(bed sores) இருந்தால், அவற்றில் நோய் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது.
- இரண்டாம் நிலை பிரச்சினைகளாக, காயங்கள் மற்றும் நோய்த்தொற்றுகள் ஏற்படுதல்.
- தொடர்ந்து நீண்ட நாட்களாக இருக்கும் வலி(chronic pain)
கீழ்வாதம் மேலாண்மை(management):
ஒவ்வொரு நோயாளிகளும் அவர்களுக்கு உள்ள பிரச்சினைகளும், அவர்கள் எடுத்துக்கொள்ளும் மருத்துவ சிகிச்சைகளும், வேறுபாடு இருக்கலாம். பொதுவாக இவற்றில் உடனடி சிகிச்சை மிக முக்கியமாக கொடுக்கப்பட்டால், உடனடியாக நோய் பாதிப்பிலிருந்து தடுக்கப்படலாம். மேலும் முதுகுத்தண்டுவடத்தில் ஏற்படும் பிரச்சினைகளை ஆரம்ப காலத்திலேயே கண்டறிவது, பிரச்சினைகளை அதிகமாக்குவது குறைக்கப்படுகிறது.
சில வேறுபட்ட சிகிச்சைகள்:
- அறுவைச் சிகிச்சை மூலம் காயம்பட்ட இடத்தில் அல்லது பாதிக்கப்பட்ட இடத்தில் உள்ள எலும்பு பகுதியில் அறுவை சிகிச்சை செய்வது
- முதுகு தண்டுவட பகுதியை சரியாக வரிசைப்படுத்தும்(alignment) அல்லது முறைப்படுத்தும் அறுவை சிகிச்சை
- இரண்டாம் நிலை அறுவைச் சிகிச்சைக்கான தசை மற்றும் எலும்புகளில் ஏற்படும் நோய்களுக்கு சிகிச்சை
- மருந்துகள் கொண்டு சிகிச்சை அளிப்பது. முக்கியமாக நோய்தொற்று, ரத்த உறைதல் போன்றவற்றிற்கு மற்றும் இரண்டாம் நிலை பாதிப்புகளை மருந்துகள் கொண்டு சரி செய்தல் அல்லது சிகிச்சை அளித்தல்
- இயன்முறை மருத்துவ சிகிச்சை(physiotherapy treatment) உடல் இயக்கங்கள் பாதிக்கப்பட்டிருந்தால், அவர்களுக்கு இயன்முறை பயிற்சிகள் கொடுக்கப்பட வேண்டும். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் தசைகள் மீண்டும் வலுப்பெற்று அவர்கள் நடப்பதற்கு உறுதுணையாக இருக்கின்றனர்.
6 உடற்பயிற்சிகள் தொடர்ந்து செய்வதால் உடலின் தசை இயக்கங்கள் வலுப்பெற உதவுகின்றன. மேலும் தொடர்ந்து நாள்பட்ட வலிகளும் குறைகின்றன.
- உளவியல் மருத்துவம், இதன்மூலம் பாதிக்கப்பட்டவர்களின் மன அழுத்தம் குறைந்து புதிய சில வேலைகளையும், ஏற்பட்ட காயங்களின் பிரச்சினைகளையும் சரி செய்ய முடியும்.
8 தொழில் முறை பயிற்சிகள்(occupational therapy) மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு, புதிய வேலையோ அல்லது ஏற்கனவே செய்து கொண்டிருந்த வேலைகளையும் அவர்களுக்கு பயிற்சிகள் மூலம் பலப்படுத்த முடியும்.
இயன்முறை மருத்துவ சிகிச்சை(Physiotherapy treatment):
இயன்முறை மருத்துவ சிகிச்சை, கீழ்வாதம் ஏற்பட்ட அல்லது அறுவை சிகிச்சை முடிந்து ஓரிரு நாட்கள் பயிற்சிகள் ஆரம்பிக்கப்படும், அல்லது பாதிக்கப்பட்ட நோயாளிகள் மறுவாழ்வு மையத்தில்(Rehabilitation center) இயன்முறை மருத்துவ பயிற்சிகளை எடுத்துக்கொள்கின்றனர். இவ்வாறு ஆரம்ப காலத்தில் எடுத்துக் கொள்ளும் அல்லது மேற்கொள்ளப்படும் பயிற்சிகள் நோயாளிகளின் முன்னேற்றத்தை மற்றும் தன்னம்பிக்கை அதிகப்படுத்துகின்றன.
தொடர்ந்து இவர்கள் இயன்முறை பயிற்சிகளை மேற்கொள்ளும் பொழுது முன்னேற்றம் அடைவது மட்டுமல்லாமல், சில பின்விளைவுகளையும்(complications) இவர்களால் தடுத்து நிறுத்த முடியும்.
- படுக்கை புண்களை(Bed sores) வர விடாமல் செய்ய முடியும்.
- சிறுநீர்ப்பாதையில் ஏற்படும் நோய்தொற்று மற்றும் சிறுநீர் உணர்ச்சிகளை போன்றவற்றை கட்டுப்படுத்துவது.
- தசை மற்றும் தசை நார்களில் ஏற்படும் இறுக்கங்களை குறைப்பது, முக்கியமாக தொடையின் உள்புற சதை(adductor muscles), இடுப்பு மற்றும் முழங்கால் பகுதியில் மடக்கும் சதை(hamstrings), பாதங்களில் கட்டைவிரலில் ஏற்படும் மாற்றங்கள், போன்றவற்றை தடுத்து நிறுத்த இயலும். முக்கியமாக சில தவறான உடம்பு அசைவுகள் மற்றும் அதனால் ஏற்படும் பிரச்சினைகளை தடுத்து நிறுத்த இயலும். தொடர்ந்து தசை வலுவேற்றும் பயிற்சிகள்(muscle strengthening) மற்றும் தசை நீட்சி பயிற்சிகள்(muscle stretching), தொடர்ந்து கை கால்கள் மற்றும் உடம்பு பகுதிகளுக்கு, செய்வதால் மேற்சொன்ன அனைத்து நன்மைகளும் கிடைக்கப்பெறும்.
பொதுவாக இயன் முறை பயிற்சி மேற்கொள்ளும் நோயாளிகளுக்கு பக்கவிளைவு இல்லாமல் கொடுக்கப்படும், தசை வலுவேற்றும் பயிற்சிகள் மற்றும் முன்னேற்றம் குறைவாக உள்ளவர்களுக்கு நடை உப கரணங்களை(orthotics) பயன்படுத்தி நடக்கச் செய்தல் போன்ற பயிற்சிகள் கொடுக்கப்படுகின்றன. மேலும் படுத்த படுக்கையாக இருக்கும் கீழ்வாதம் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு படுக்கையில் உடம்புகளை கைகளை கொண்டு திருப்புதல்(turning), குப்புற படுத்தல்(supine to prone lying), போன்ற பயிற்சிகளும், படுக்கையிலிருந்து சக்கர நாற்காலி, சக்கர நாற்காலியில் இருந்து படுக்கைக்கு மாறுவது, போன்றவைகளுக்கும் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. மேலும் இவர்களுக்கு தொழில் முறை பயிற்சிகளும், ஓய்வு நேர பயிற்சிகளும்(recreation therapy) மற்றும் சில தினசரி வேலைகளை(Activities of daily living) செய்வதற்கு பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன. இந்த பயிற்சிகள், நோயாளிகள் அசைவின்றி இருப்பதால் ஏற்படும் பின்விளைவுகளை, தடுத்து நிறுத்த பயன்படுகிறது. உடனடியாக கொடுக்கப்படும் இயன்முறை பயிற்சிகள் 10 – 15 வாரங்களுக்கு தொடர்ந்து கொடுக்கப்படும். இதனால் பொதுவாக கீழ்வாதம் பாதிக்கப்பட்ட நோயாளிகள் 100 மீட்டர் நடப்பது, அல்லது 20 படிகள் ஏறுவது என்பது சாத்தியமாகிறது. மேலும் ஒரு சில நோயாளிகளுக்கு நடை உபகரணங்களைக் கொண்டு நடப்பதற்கும் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. ஒரு சில நடக்க இயலாத அல்லது அதிகமாக முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சக்கர நாற்காலி(wheel chair) பரிந்துரைக்கப்படும். மற்றும் மேலே கூறிய சக்கர நாற்காலி பயிற்சிகளும் இவர்களுக்கு தரப்படுகின்றன. இந்த தொடர்ந்த சரியான தினசரி இயன்முறை பயிற்சிகள் செய்யும்பொழுது தசை இறுக்கங்கள் வராமல், தசை வழுவேற்றுதல் மற்றும் தனது தினசரி வேலைகளை செய்துகொண்டும், பின் விளைவுகள் ஏதும் இல்லாமல் தங்களது வாழ்க்கையை தினசரி வேலைகளை தொடர்ந்து செய்ய இயலும். கீழ்வாதம் பாதிக்கப்பட்டவர்களில் அறுவை சிகிச்சை செய்த பின்பு கொடுக்கப்படும் பயிற்சிகள் முக்கியமாக இயன்முறை பயிற்சிகள் இன்றியமையாததாக உள்ளது.
நன்றி
ஸ்ரீ குமரன் பிசியோதெரபி கிளினிக் & உடற்பயிற்சி
Comments