ரேடியல் நரம்பு வாதம் (RADIAL NERVE PALSY)
முன்னுரை:
ரேடியல் நரம்பு வாதம் என்பது நம் கைகளில் உள்ள ரேடியல் நரம்பு(Radial nerve) எனப்படும் நரம்பு பகுதியை பாதிப்பதாகும். இந்த நரம்பு கைகளில் புஜத்தின் மேல்பகுதியில்(upper arm) ஆரம்பித்து முழங்கை, மணிக்கட்டு மற்றும் விரல்களுக்கு சமிக்கைகளை (signals) அனுப்புகிறது. இந்த நரம்பு, விரல்கள் கைகள் உள்ள தசைகள் அசைவு, உணர்ச்சிகளை கட்டுப்படுத்தவும் செய்கிறது.
காரணங்கள்(causes):
உபகரணங்கள்(Devices) பயன்படுத்துவது :- பொதுவாக சிலவகை உபகரணங்கள் பயன்படுத்தும்பொழுது அவைகள் தோள்பட்டை பகுதியில், நரம்பு பகுதியை அழுத்தம் (pressure) கொடுக்கும் என்று நம்பப்படுகிறது. அவைகள் crutches எனப்படும் நடை உபகரணங்கள் பயன்படுத்தும்பொழுது கம்பு கூட்டுப் பகுதியில் (axilla) அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. மேலும் ஒரு சிலருக்கு கைக்கடிகாரம்(wrist watches) பயன்படுத்தும்பொழுது மணிக்கட்டு பகுதியில் நரம்பு பகுதியில் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.
தவறான உடல்நிலை(Awkward body position):- சில நேரங்களில் தவறான உடல்நிலை சில நேரங்களில் நரம்புகளில் அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன. எடுத்துக்காட்டாக தூங்கும் பொழுது அல்லது இருக்கைகளில் அமரும்பொழுது கைகளில் வெளிப்புறமாக தொங்க விடுவதால், கம்பு கூட்டுப் பகுதியில் ரேடியல் நரம்பு அழுத்தப்படுகிறது.
சிராய்ப்பு (Bruise):- சில சமயங்களில் உடல் பகுதியில் சிராய்ப்பு (Bruise) ஏற்படும்பொழுது ரேடியல் நரம்பு பகுதி பாதிக்கப்படலாம்.
Abnormal tissue growths:- பொதுவாக புற்றுநோய் கட்டி(Cancer) அல்லது சில வகைக் கட்டிகள் (cyst) மணிக்கட்டுப் பகுதியில் அல்லது முழங்கை மேல் பகுதியில் இருப்பதனால் நரம்புகளில் அழுத்தம் ஏற்படக் கூடிய வாய்ப்பு உள்ளது. இதனால் நரம்பு வாதம் ஏற்படலாம்.
எலும்பு உடைதல் அல்லது மூட்டு விலகுதல்:- சில சமயங்களில் தோள்பட்டை பகுதியில், முழங்கைப் பகுதியில் ஏற்படும் எலும்பு உடைதல் அல்லது மூட்டு விலகுதல் போன்றவற்றினால் நரம்பு அழுத்தமோ அல்லது நரம்பு அடிபடுதல்(nerve injury) போன்றவை ஏற்படலாம்.
நரம்பு துண்டிக்கப்படுதல்:- பொதுவாக கத்தி, கண்ணாடி போன்ற பொருள்களினால் முழங்கை பகுதி மணிக்கட்டுப் பகுதியில் அடிபடும் பொழுது நரம்பு துண்டாக்கப்படுகிறது.
அறிகுறிகள்(symptoms):
நரம்புகளில் அடிபடும் போது பொதுவாக தசைகளில் வலிமை இழப்பது(Muscle weakness), அல்லது உணர்ச்சிகள் குறைவது அல்லது மதமதவென உணர்ச்சிகள்(numbness) தோன்றுவது போன்றவை இருக்கலாம். மேலும் இதுபோன்ற அறிகுறிகள் புஜ பகுதியில் பின்புறம் ஆரம்பித்து முழங்கை பகுதி, மணிக்கட்டு, விரல்கள் வரை இருக்கலாம்.
பாதிக்கப்பட்டவர்கள் மணிக்கட்டுப் பகுதி, விரல்களை இருக்கமாக மூடுவது(tight fist) பாதிக்கப்படும். முழங்கை பகுதி நேராக நீட்டுவது(elbow extension) இயலாது. மணிக்கட்டு மற்றும் விரல்கள் நேராக விரிப்பது(finger extension) போன்ற இயக்கங்கள் பாதிக்கப்படும். சில சமயங்களில் மணிக்கட்டுப் பகுதி தொங்குவது(wrist drop) போன்ற ஏற்படலாம்.
மணிக்கட்டுப் பகுதியை தூக்குவது சிரமமாக இருக்கலாம். பொருள்களை பிடிப்பது(grasp), தூக்குவது போன்றவை செய்ய இயலாது. கட்டைவிரல் மற்றும் இதர விரல்களை சேர்ப்பது(Finger adduction) கடினமாக இருக்கலாம்.
பரிசோதனைகள் அல்லது கண்டறிதல்:- பொதுவாக மருத்துவர்கள் அல்லது இயன்முறை மருத்துவர்களை அணுகும் பொழுது புஜ பகுதி அல்லது மணிக்கட்டுப் பகுதி இயக்கங்கள் குறைவதை வைத்து ரேடியல் நரம்பு பாதிப்புகளை கண்டறியலாம். மேலும் இந்த நரம்பு பாதிப்புகளுக்கு உரிய காரணங்களை கண்டறிவது மிக முக்கியம்.
எக்ஸ் ரே நிழற்படங்கள் மூலம் எலும்பு உடைவது அல்லது வேற்று பொருள்கள் ஏதாவது இருப்பது(foregin objects) போன்றவற்றை கண்டறியலாம். எம் ஆர் ஐ ஸ்கேன்(MRI scan) மூலம் கைகளில் உள்ள மென் திசுக்கள்(soft tissues) அல்லது ரத்தக்குழாய்களில் ஏற்படும் பிரச்சினைகள், சிலவகை கட்டிகள் அல்லது தசை திரட்சிகள் (muscle masses) போன்றவற்றை கண்டறிய இயலும். எம் ஆர் ஐ ஸ்கேன் பார்க்கும் பொழுது கைகளில் உலோகப் பொருள்கள்(metal objects) அணிந்து இருந்தால் சில நேரங்களில் நரம்பு பாதிப்புகள் ஏற்படலாம்.
மின் தசை கிராபி(electromyography) அல்லது நரம்பு கடத்துதிறன்(nerve conduction study) சோதனைகள் செய்யும்பொழுது, நரம்புகள் தசைகளுக்கு சமிக்கைகளை எவ்வளவு வேகமாக கொண்டு செல்கிறது என்பது கண்டறியப்படுகிறது. இதனால் நரம்புகளில் பாதிப்புகள் துள்ளியமாக எளிதாக கண்டறியப்படுகின்றன.
சிகிச்சைகள்:
சிகிச்சைகள் பொதுவாக நரம்பு பாதிப்புகள் மற்றும் சீரான நிலைக்கு திரும்பும் காலம்(Recovery period) போன்றவை, நரம்பு எந்த அளவுக்கு பாதிப்பு அடைந்துள்ளது என்பதை பொறுத்து அமைகிறது. சில வகையான நரம்பு பாதிப்புகள், சில வாரங்கள் முதல் மாதங்கள் வரை ஆகலாம். மேலும் சில வகையான நரம்பு பாதிப்புகள் வருடக்கணக்கில் ஆகலாம்.
வலி சிகிச்சை(Pain treatment):
பொதுவாக நரம்பு பாதிப்பு உள்ளவர்களுக்கு ஒருசிலருக்கு வலி போன்ற உணர்ச்சிகள் தோன்றலாம். அதுபோன்ற பாதிக்கப்பட்டவர்களுக்கு வலி குறைவதற்கு சிகிச்சைகள் வழங்கப்படுகிறது.
ஸ்பிளின்ட் & கேஸ்ட்(Splint & cast) : சில நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஸ்பிளின்ட் அல்லது கேஸ்ட் எனப்படும் உபகரணங்கள் கொடுக்கப்பட்டு, மணிக்கட்டில் அல்லது விரல்கள் தொங்குவது போன்றவை தடுத்து நிறுத்தப்படுகிறது. இதனால் எதிர்காலத்தில் தசைகள் இறுக்கமாகுவது தடுத்து நிறுத்தப்படுகிறது.
மின் தூண்டல் சிகிச்சை(electical stimulation):
பொதுவாக இயன்முறை மருத்துவத்தில் மின் தூண்டல் சிகிச்சை மற்றும் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. பயிற்சிகளை தொடர்ந்து செய்யும் பொழுது எலும்பு மற்றும் தசைகள் வலுவடையும். மற்றும் தசைகளில் மீள்தன்மை(elasticity) தொடர்ந்து இயக்கங்களில் இருக்கும்.
அறுவைச் சிகிச்சை(surgical management):
பொதுவாக நரம்பு பாதிப்பு உள்ளவர்களுக்கு அல்லது நரம்பு துண்டாக்கப்பட்டவர்களுக்கு அறுவைச் சிகிச்சை தேவைப்படுகிறது. இவற்றில் பல வகையான நரம்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, மீண்டும் இயன்முறை மருத்துவம், மின்தூண்டல் சிகிச்சை மற்றும் பயிற்சிகள் வழங்கப்படுகிறது.
இயன்முறை சிகிச்சை மற்றும் பயிற்சிகள்பொதுவாக இதுபோன்ற கை கால்களில் பாதிக்கப்படும் வெளிப்புற நரம்பு பிரச்சினைகளுக்கு இயன்முறை மருத்துவம் மற்றும் பயிற்சிகள் மிகவும் முக்கியமானவை. மேலும் இந்த நரம்பு பாதிப்புகளில் வேலை செய்ய இயலாமல் போவது மற்றும் சமூக இயக்கங்களில் பாதிப்பு போன்றவை இதில் அதிகமாக தென்படுகின்றது. நரம்பு அடிபடும் பொழுது அல்லது பாதிக்கப்படும் பொழுது நரம்பை சுற்றி உள்ள ஆக்சான்(Axon) எனப்படும் உரைகள் பாதிக்கப்படுவதால் சில அறிகுறிகள் தென்படுகின்றன. அவை உணர்ச்சிகள் அதிகமாகவோ அல்லது குறைந்தோ உணரப்படுவது, வலி மற்றும் தசை சுருங்குவது போன்றவை இருக்கலாம் . சில சமயங்களில் அறுவை சிகிச்சை செய்யப்படும் பொழுது நரம்பு பாதிப்புகள் மற்றும் அதற்குரிய சிகிச்சைகள் முறையாக திட்டமிடப்பட்டு(treatment protocol) கொடுக்கப்பட வேண்டும். இந்த திட்டத்தில் ரீஹேபிலிடேஷன்(Rehabilitation) மற்றும் இயன்முறை மருத்துவம்(Physiotherapy) மிகவும் இன்றியமையாதது. இயன்முறை மருத்துவம் மற்றும் பயிற்சிகள் கொடுக்கப்படும் பொழுது, உணர்ச்சிகளுக்கான பயிற்சிகள், தசைகளுக்கான பயிற்சிகள் போன்றவை கொடுக்கப்படுகிறது. இயன்முறை மருத்துவம் மற்றும் பயிற்சிகள் முறையாக கொடுக்கப்பட வேண்டும். இவை சரிவர கொடுக்கப்பட்டால் பாதிக்கப்பட்ட நரம்பு பகுதி மீண்டும் சரியாக மாறுவதற்கு, சமிக்கைகளை சரியாக அனுப்புவதற்கு, சரி செய்து கொள்ளும். மேலும் பாதிக்கப்பட்ட நரம்பு முழுமையாக மீண்டும் பழைய நிலைக்கு மாறுவதற்கு, சில காலம் எடுத்துக் கொள்ளும். அந்த காலம் வரை இயன்முறை மருத்துவம் மற்றும் பயிற்சிகள் கொடுக்கப்பட வேண்டும். மேலும் பயிற்சிகளை சரியாக செய்யும் பொழுது தசைகளுக்கு தேவையான ரத்த ஓட்டம் மற்றும் ஊட்டச்சத்துக்கள் எளிதாக கிடைக்கப் பெறும்.
மின் தூண்டல் சிகிச்சை(Electrical stimulation): இயன்முறை மருத்துவத்தின் இந்த மின் தூண்டல் சிகிச்சை மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. பொதுவாக மின் தூண்டல் சிகிச்சை மற்றும் கட்சிகள் இணைந்து வழங்கும் பொழுது தசைகளும் நரம்புகளும் வலுவடையும் மற்றும் பாதிக்கப்பட்ட நரம்புகளின் கடத்துதிறன் நிலைநிறுத்தப்படும்.
இயன்முறை சிகிச்சைகள் :
பொதுவாக ரேடியல் நரம்பு வாதம் உள்ளவர்களுக்கு இயன்முறை மருத்துவம், மின் தூண்டல் சிகிச்சை மற்றும் தசைப் பயிற்சிகள் சரியான நேரத்தில் கொடுக்கப்படவேண்டும். மற்றும் ஸ்பிளின்ட்(splint) எனப்படும் உபகரணங்கள் கைகளில் மாட்டப்பட வேண்டும்.
மேலே சொன்ன அனைத்தையும் சரியாக செய்யும் பொழுது நரம்புகள், தசைகள், மூட்டுகள் அனைத்தும் சரியாக தனது இயக்கங்களை செய்யும்.
பயிற்சிகள்- மின் தூண்டல் சிகிச்சை கொடுத்து முடித்தபின்பு இயன்முறை மருத்துவர்கள் விரல்கள், மணிக்கட்டு பகுதி, முழங்கை பகுதி, போன்ற மூட்டுகளை அசைவு(Relaxed passive movements) கொடுப்பர். அதன் பிறகு நோயாளிகளுக்கு தானாக செய்யவேண்டிய பயிற்சிகளை(self exercise) சொல்லிக் கொடுப்பார்கள். பின்பு அவர்கள் வீட்டில் பின்பற்றவேண்டிய நெறிமுறைகளையும்(Home programme) சொல்லிக் கொடுப்பார்கள். இவை அனைத்தையும் தவறாமல் கடைப்பிடிக்கும் பட்சத்தில், இயக்கங்கள் மிக வேகமாக ஆரம்பிக்கும். அதன்பிறகு தசைகளுக்கு தேவையான பயிற்சிகளை நாள்பட மாற்றி செய்ய(exercise updation) அறிவுரை வழங்குவார்கள். இவ்வாறு வழங்கப்படும் பயிற்சிகளில் ஸ்பிரிங்(spring), தெராபேண்ட்(Theraband), எடை(Weights) போன்றவை பயன்படுத்தப்படுகின்றன. ஸ்பிளின்ட் பயன்படுத்தும்பொழுது தசைகள் மீள்தன்மையை(Elasticity) இழக்காமல் மற்றும் மூட்டுகளில் அசைவு(joint movements) போன்றவற்றை பாதுகாக்க முடியும். இந்த ஸ்பிளின்ட், அசைவு வரும்வரை பயன்படுத்தப்பட வேண்டும். மேலும் இம்முறை மருத்துவர்கள் அறிவுரைப்படி ஸ்பிளின்ட் பயன்படுத்த(Splint application) வேண்டும். அவ்வாறு பயன்படுத்தும் பொழுது தசை இறுக்கங்கள்(Muscle contractures), அசைவின்மை(stiffnes) போன்றவற்றை தவிர்க்க இயலும்.
நரம்பு துண்டாக்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலில் அறுவை சிகிச்சை(neural reconstruction surgery) செய்யப்பட வேண்டும். அதன் பிறகு நரம்பு அறுவை சிகிச்சை மருத்துவர்களின் அறிவுரைப்படி, மற்றும் இயன்முறை மருத்துவர்கள் அறிவுரைப்படி பயிற்சிகள் வழங்கப்படும். நரம்பு நன்றாக இணையும்(Reunion) பட்சத்தில் மேலே கூறப்பட்ட அனைத்து இயன்முறை மருத்துவம், மின் தூண்டல் சிகிச்சை, பயிற்சிகள் போன்றவை வழங்கப்படும். இறுதியாக, பாதிக்கப்பட்டவர்களுக்கு தனது வேலைகளை(Activities of daily living) செய்யுமளவுக்கு, மூட்டு பயிற்சிகள் தசைப் பயிற்சிகள் போன்றவை அன்றாட தேவைகளுக்கு ஏற்ப வழங்கப்படும். ஒருவேளை நரம்பு நிரந்தரமாக பாதிக்கப்படும் பட்சத்தில், அவர்களுக்கு மாற்று உபகரணங்கள் கொடுக்கப்பட்டு அன்றாட வேலைகள் செய்யுமளவுக்கு பயிற்சிகளும் வழங்கப்படும்.
நன்றி….
மேலே உள்ளவை சில வலைத்தளங்களில் இருந்து சேகரிக்கப்பட்டவை.
SRIKUMARAN PHYSIOTERAPY CLINIC & FITNESS CENTER
Comments