Skip to main content

முழங்கால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை(TOTAL KNEE JOINT REPLACEMENT SURGERY)

 முன்னுரை:

முழங்கால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை என்பது இன்று மருத்துவத்துறையில் மிக அதிகமாக செய்யப்படும் அறுவை சிகிச்சைகளில் ஒன்றாகும். இதுபோன்ற மூட்டு மாற்று அறுவை சிகிச்சை உடல்களில் பல மூட்டுகளில் செய்தாலும் முழங்காலில் செய்யப்படும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மிகவும் பொதுவாக காணப்படுகிறது. இந்த முழங்கால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சையானது தொடை எலும்பின் கீழ்பகுதி(lower end of femoral condyle) மற்றும் கால் எலும்பின் மேல் பகுதி(upper end of tibia) உள்ள குருத்தெலும்புகள்(cartilage) பகுதியில் செய்யப்படும். இந்த பகுதியில் அவற்றை முழுவதுமாக நீக்கிவிட்டு அதற்குப் பதிலாக செயற்கையாக ஒரு உலோகத்திலான(metal) மூட்டுப் பகுதியை அறுவை சிகிச்சை மூலம் மாற்றப்படுகிறது மேலும் இந்த மூட்டுப்பகுதியில் தொடை எலும்பு மற்றும் கால் எலும்புக்கு இடைப்பகுதியில் இருக்கும் அதிர்வு தாங்கியாக(shock absorbtion) செயல்படும் குருத்தெலும்பு செய்யும் வேலையை இந்த செயற்கை மூட்டு செய்வதில்லை. இவற்றில் முக்கியமான விஷயம் என்னவென்றால் முழங்காலின் முன் பகுதியில் அமைந்துள்ள சிப்பி போன்ற எலும்பு(patella) இதில் மாற்றப் படுவதில்லை.

இந்த முழங்கால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கு முக்கிய காரணங்களாக மூட்டு தேய்ந்து போதல்(osteoarthritis), அதிக அளவு வலியுடன் கூடிய மூடு அசைவின்மை(severe pain with stiffness) மற்றும் எலும்புகள் வளைந்து போதல்(deformity), எலும்பு உடைந்து போதல்(communited fracture) போன்றவை.

முழங்கால் உடற் கூறியல்

முழங்கால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கு முன், முழங்கால் மூட்டு பற்றிய உடல் கூறியல் தெரிந்து கொள்ளவேண்டியது அவசியம்.



முழங்கால் மூட்டு என்பது ஒரு தாழ (Hinge) போன்ற அமைப்பினைக் கொண்ட மூட்டு (எடுத்துக்காட்டாக கதவு இயங்குவதைப் போன்றது). இவற்றில் இந்த முழங்கால் மூட்டு மடக்குதல்(flexion) மற்றும் நீட்டுதல்(extension) போன்ற அசைவுகளை கொண்டுள்ளன. இந்த மூட்டுகளில் மூன்று எலும்புகள் சேர்ந்ததை முழங்கால் மூட்டு என்று சொல்கிறோம். அவை மேல்பகுதியில் உள்ள தொடை எலும்பு கீழ்பகுதியில் கால் எலும்பு மற்றும் மேல்பகுதியில் அல்லது முன் பகுதியில் அமைந்துள்ள சிட்டி போன்ற எலும்பு இந்த எலும்புகளில் குருத்தெலும்பு பகுதி ஆசையும் இடங்களில் அல்லது அசைவை உருவாக்க கூடிய பகுதிகளில் அமைந்துள்ளது வயதாகும்போது இந்த குருத்தெலும்பு நீர்ச்சத்து குறைந்து அல்லது தேய்ந்து போவது நாலு மூட்டு அசைவு குறைகிறது இந்த குருத்தெலும்பு போன்ற பகுதியில் இடைப்பட்ட பகுதியில் மெனிஸ்கஸ் எனப்படும் ஒரு தட்டு போன்ற குருத்தெலும்பு அமைந்துள்ளது இவற்றை சூழ்ந்து மெதுவாக பஞ்சு போன்ற அமைப்பினை கொண்ட கேப்சூல் எனப்படும் உரையும் மற்றும் எலும்புகளை இணைக்கும் ஜவ்வு பகுதியும் கொண்டுள்ளன.

 

 

மூட்டு மாற்று அறுவை சிகிச்சைக்கான முக்கிய காரணங்கள்

முழங்கால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சையானது மிகவும் பொதுவாக செய்யப்படும் ஒரு அறுவை சிகிச்சையாகும் இதுபோன்ற அறுவைச் சில முக்கிய தகுந்த காரணங்கள் இருந்தால் மட்டுமே செய்யப்படும். அவற்றில் முக்கிய சில காரணங்கள் முழங்கால் மூட்டில் ஏற்படும் எலும்புகளின் சிதைவு, அல்லது தேய்மானம், போன்றவை இருந்தால் எறும்புகள் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. மேலும் மூட்டு தேய்ந்து போதல் மற்றும் எலும்பு வளைதல் போன்றவை முக்கிய காரணங்களாக எடுத்துக் கொள்ளப்படுகின்றன. காரணம் என்னவென்றால் இவற்றில் அதிகமாக செயல்படும் குருத்தெலும்பு(cartilage) மற்றும் மெனிஸ்கஸ் போன்றவை முழுவதும் தேய்ந்து போவது முக்கிய காரணமாகும். சில இரண்டாம் பட்சமாக இருக்கும் காரணங்களில் உடலின் பருமன் அதிகமாக இருப்பது, ஏற்கனவே மூடு அடிபட்டிருந்தால், அல்லது குருத்தெலும்பு தனியாக பிரிக்கப்பட்டு இருந்தால், முடக்குவாதம் இருந்தால், எலும்பு உடைந்து போதல் மற்றும் பிறவிகளில் ஏற்படும் எலும்பு மூட்டு பிரச்சனைகள்(congenital bone anamalies) இவைகள் அனைத்தும் இரண்டாம் பட்ச காரணங்களாக எடுத்துக்கொள்ளப் படுகின்றன. முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை வயது முதிர்ந்த ஆண்கள், பெண்களுக்கு பொதுவாக செய்யப்படுகின்றது.

 

 

மருத்துவ ரீதியான காரணங்கள்

பொதுவாக முழங்கால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கு தாங்கமுடியாத வலி, மற்றும் முழங்கால் தேய்ந்து போதல், அசைவின்மை, போன்றவை முக்கிய காரணங்களாகும். முதலில் வலி என்பது அசைவில்லாமல் இருக்கும் பொழுதும் அல்லது ஓய்வு நேரத்திலும்(resting pain) தெரிந்தால் மூட்டு தேய்மானம் அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது. வலி என்பது இரவில் தூங்கும்போதும் தூக்கத்தை கெடுக்கும் விதமாக(sleeping distrubance) இருந்தால் அறுவை சிகிச்சை செய்ய முக்கிய காரணமாகிறது. இதற்கு அடுத்தபடியாக நோயாளிகள் முழங்கால் இறுக்கமாக இருப்பது அல்லது சடசடவென சத்தங்கள் கேட்பது போன்றவைகளும் காரணங்களாக எடுத்துக்கொள்ளப்படுகின்றன. கடைசியாக அறுவை சிகிச்சைகள் செய்வதற்கு மூட்டுகளின் பகுதிகள் அனைத்தும் செயலிழந்த நிலையில் அல்லது நடப்பதற்கு கடினமான நிலையிலேயே இருப்பின் இவர்கள் அடிக்கடி விழுவதற்கு காரணமாக அமைகிறது. இதன் முக்கிய காரணமாக மூட்டு மாற்று அறுவை சிகிசை வயதானவர்களுக்கு செய்யப்படுகிறது.

 

பின் விளைவுகள்:

பொதுவாக முழங்கால் அறுவை சிகிச்சை செய்த பின்பு ஒரு சிலருக்கு சில பின் விளைவுகள் ஏற்படுகின்றன. அவற்றில் முக்கியமானதாக மூட்டு அசைவின்மை(joint stiffness) முக்கிய காரணமாக சொல்லப்படுகின்றன. 6 முதல் 7 சதவீத நோயாளிகள் அறுவை சிகிச்சை செய்தபின் இந்த மூட்டு அசைவின்மை பிரச்சனைகளை சந்திக்கின்றனர். இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுவது என்னவென்றால் அறுவை சிகிச்சை செய்த பின்பு தொடர்ந்து இவர்கள் உடற்பயிற்சிகளை மருத்துவரை(physiotherapist)  அணுகி சிகிச்சை பெறுவதில்லை. மற்றும் சில காரணங்கள் பின்வருவன கூறப்படுகின்றன.

 

  1. மூட்டு பகுதியில் மாற்றப்படும் செயற்கை மூட்டு சரியாக பொறுத்தமுடியாமல் போவது
  2. மூட்டு விலகுதல் அல்லது நிலைத்தன்மை இல்லாதிருத்தல்

மூட்டு பகுதியில் நோய்தொற்று ஏற்படுதல்

  1. மூட்டுப்பகுதியில் பொருத்தப்படும் உலோகத்திலான செயற்கை மூட்டு சரியான கோணத்தில் பொறுத்தப்படாமல் இருப்பது அல்லது உடைந்து போவது
  2. நரம்பியல் கோளாறுகள்
  3. எலும்புகள் உடைந்து போவது அறுவை சிகிச்சை செய்த பின்பு எலும்புகள் உடைந்து
  4. அறுவை சிகிச்சை செய்த பின்பு மிக அதிகமான வலி மற்றும் வீக்கம் இருப்பது

மேலே கூறப்பட்ட அனைத்து பின்விளைவுகளும் மிகவும் குறைவாக ஏற்படுகிறது 6% முதல் 7% நோயாளிகளுக்கு மட்டுமே ஏற்படுகிறது. இது போன்றவர்களுக்கு இந்த மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மறுபடியும் செய்யப்படுகின்றன.

மூட்டு மாற்று அறுவை சிகிச்சைகளுக்கான பரிசோதனைகள்

பொதுவாக முழங்கால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கு முன் சில பரிசோதனைகள் செய்யப்படுகின்றன.

அதுபோன்ற அறுவைச்சிகிச்சை செய்வதற்கு முன் செய்யப்படும் பரிசோதனைகள் எலும்பு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்களை கொண்டு மிகவும் சரியாக பரிசோதனை செய்யப்பட்ட பின்பு நோயாளிகளுக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படுகின்றன. அவற்றில் உடல் பருமன் ஒரு காரணியாக எடுத்துக் கொள்ளப்படுகிறது உடல் பருமனை அளவீடு செய்ய பாடி மாஸ் இன்டெக்ஸ்(body mass index) எனப்படும் பரிசோதனை அறுவைச் சிகிச்சைக்கு முன்பும், பின்பும் செய்யப்படுகின்றன.

மேலும் எக்ஸ்ரே படங்கள் ஒரு முக்கிய சோதனையாக எடுத்துக்கொள்ளப்படுகிறது எக்ஸ்ரே, சிடி, எம்ஆர்ஐ ஸ்கேன்கள் போன்ற பரிசோதனைகளுக்கு பின்பே மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படுகின்றன.



 

மூட்டு மாற்று அறுவை சிகிச்சைக்கான இயன் முறை பயிற்சிகள்(physiotherapy exercises for TKR):

பொதுவாக மூட்டு மாற்று அறுவை சிகிச்சை தகுந்த எலும்பு மூட்டு மாற்று அறுவைச் சிகிச்சை நிபுணர்களைக் கொண்டு செய்து முடித்த பின் இயன்முறை மருத்துவர்கள்(Physiotherapist) கொடுக்கும் பயிற்சிகள் மிக முக்கியமாக கருதப்படுகிறது. அவற்றில் சில பயிற்சிகள் தொடர்ந்து செய்யப்படுவதாகவும் இருக்கின்றன.

முதலில் இயன்முறை மருத்துவர் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நோயாளிகளை இயற்பியல் பரிசோதனை(physical assesment) செய்த பின்பே தனது பயிற்சிகளை தொடங்குவார்கள்.

அவைகள் சில :-

பரிசோதனை செய்யவேண்டிய நோயாளிகளை பற்றிய மற்றும் நோய்கள் பற்றிய வரலாற்றினை முழுவதுமாக தெரிந்து

மேலும் நோயாளிகளின் உடல் அசைவுகள்(joint range) மற்றும் தசைகளின் வலிமையை(MRC muscle power grading) தெரிந்துகொள்ள செய்யப்படும்.

சில பரிசோதனைகள்

  1. நோயாளி தானாக மூட்டினாய் அசைப்பது,
  2. இயன்முறை மருத்துவர் நோயாளியின் மூட்டினாய் அசைப்பது, 3. நோயாளியின் மூட்டுப் பகுதியை சுற்றியுள்ள தசைகளின் வலிமையை அறிவது,
  3. நோயாளியின் மூட்டு எந்த அளவுக்கு வேலைகளை தினசரி வேலைகளை (Activities of daily living )செய்ய முடியும் என்பதை சோதனை செய்வது.

மேலே கூறப்பட்ட அனைத்து சோதனைகளையும் இயன்முறை மருத்துவர் சரியாக செய்த பின்பு தனது பயிற்சிகளை தொடங்குவார்கள்.

 

அறுவைச் சிகிச்சை முடிந்தபின்பு செய்யப்படும் பயிற்சிகள் மற்றும் சிகிச்சைகள்:

 

தினந்தோறும் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட இடத்தில் தோலில் தழும்பு, புண்கள், சிவந்துபோதல் போன்றவை இருப்பதை கண்காணிக்க வேண்டும். புண்கள் இருந்தால் அவை நோய்த்தொற்று இல்லாது இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

நோயாளின் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பகுதியில் வீக்கம்(swelling) இருப்பது அல்லது தொடையின் உள் பகுதியில்(medial side), பின்பகுதியில்(posterior side) தசை இயக்கங்கள் இருப்பது, வலி மற்றும் தோல் பகுதியில் இருக்கும் வெப்பத்தன்மை போன்றவற்றை சோதனை மூலம் அறிய வேண்டும்.

 

இயன் முறை மருத்துவ சிகிச்சை:

மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்த பின்பு உடற்பயிற்சிகள் போன்றவை சரியாக செய்யப்படவேண்டும். இந்த பயிற்சிகள் அறுவை சிகிச்சை செய்த பின்பு ஓரிரு நாட்களில் தொடங்கப்படுகின்றன. இவற்றில் முக்கியமாக நோயாளிகள் தனது அறுவைச் சிகிச்சை செய்த பகுதி மற்றும் மற்ற பகுதிகளையும் உடற்பயிற்சி கொடுப்பார்கள். பொதுவாக அறுவைச் சிகிச்சை செய்யப்பட்ட நோயாளிகள் நடப்பதற்கு சில நாட்கள் ஆகும் என்பதால், அதுவரை உடலின் மற்ற பாகங்கள்(unaffected limbs) தசை இயக்கங்கள் அல்லது வலுவின்மை ஏற்படாதவாறு பயிற்சிகள் கொடுக்கப்படும். இது போன்ற ஆரம்ப கால இயன் முறை பயிற்சிகள் இயன்முறை பயிற்சிகள் கொடுப்பதனால் நோயாளிகள் நீண்ட நாள் மருத்துவமனையில் தங்குவது தவிர்க்கப்படுகிறது. பொதுவாக பயிற்சிகள் 20 முதல் 30 நிமிடங்கள் இயன்முறை மருத்துவர்களைக் கொண்டு ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று வேளைகள் செய்யப்படவேண்டும். நோயாளிகள் எந்த ஒரு பிரச்சினைகளும் இல்லாதிருப்பின் ஓரிரு நாட்களில் நோயாளிகளுக்கு பயிற்சிகள் சற்று அதிகமாக வழங்கப்படலாம்.

 

இந்த முழங்கால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சையில் இயன்முறை மருத்துவர்கள் இன் பங்கு மிக முக்கியமானதாக அறியப்படுகிறது. அறுவை சிகிச்சை செய்த 48 மணி நேரத்தில் இயன்முறை பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இந்த பயிற்சிகள் இயன்முறை மருத்துவர்கள் மூலம் முழங்கால் பகுதியை அசைப்பது, அல்லது இயக்கங்கள் கொடுக்கும் இயந்திரம் மூலம்(CPM – continuous passive movement), மூட்டை அசைப்பது செய்யப்படுகின்றன.

மிக முக்கியமாக நோயாளியின் முழங்கால் மூட்டு பகுதி வலி இல்லாமல் வீக்கங்கள் இல்லாமல் தசைப் பகுதியை இயன்முறை மருத்துவர்கள் மூலம் அசைவு கொடுப்பது மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. மேலே கூறப்பட்டது போல் மூட்டுகள் அசைவின்மை ஏற்படாதவாறு வலி இல்லாதவாறு பார்த்துக் கொள்வது மிகவும் முக்கியமாகும். பொதுவாக இயன்முறை மருத்துவ சிகிச்சை தனக்கென்று ஒரு நெறிமுறை அல்லது பழக்கவழக்கங்களை கொண்டுள்ளது. இதனால் நோயாளிகள் அறுவை சிகிச்சை செய்த பின்பு எந்த ஒரு பின்விளைவுகள்(complications) ஏற்படாமல், அறுவை சிகிச்சை செய்த பின்பு நல்ல முன்னேற்றம் கொண்டுவரமுடியும். இவற்றில் இயன்முறை மருத்துவர்களின் சிகிச்சை நல்லதொரு வரவேற்பை கொண்டுள்ளன. நோயாளிகள் சிறிது நாட்களில் தானாக பயிற்சிகளை மேற்கொள்ளவும் மற்றும் நடை பயிற்சிகளை கற்றுக் கொடுப்பதும் இயன்முறை மருத்துவர்கள் முக்கிய பங்காக உள்ளது.

நோயாளிகளுக்கு மூட்டு அசையும் பொழுது அல்லது நடக்கும் பொழுது வலி இருந்தால் குறுகியகால தீர்வாக(short term treatment) பனிக்கட்டி மூலம் கொடுக்கப்படும் கிரையோதேரபி அல்லது மெழுகு ஒத்தடம்(wax therapy) போன்றவை கொடுக்கப்படுகின்றன. மேலும் இவை நிரந்தரமான வலி நிவாரணங்கள் கிடையாது. அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நோயாளிகள் சரியான தசை பயிற்சி அசைவு மூட்டு அசைவு நடைப்பயிற்சி கொடுப்பதன் மூலம் வலி ஏற்படுவதை தவிர்க்கமுடியும்.

 

நாளொன்று பொதுவாக மருத்துவமனையில் நோயாளிகள் இருக்கும் பொழுது படுக்கையிலே தனது பயிற்சிகளை செய்ய அறிவுறுத்தப்படுகின்றனர். இயன்முறை மருத்துவர்களை கொண்டு படுக்கையில் தொடை தசைகளுக்கு(Quadriceps) செய்யப்படும் பயிற்சி, தொடை பின்புற தசை(Hamstring) மற்றும் கால் பின்புற தசை(calf) பயிற்சி போன்றவை முக்கியமாக செய்யப்படுகின்றன. இதனால் தொடை பின்புற பகுதியில் தசை இறுக்கங்கள் காலின் பின்புற தசை இறுக்கங்கள்(contractures) ஏற்படாமல் தவிர்க்க இயலும்.

மேலே கூறப்பட்ட பயிற்சிகளையும் சேர்த்து இரண்டாவது நாளிலும் தசை வலுவேற்றும்(muscle strengthening) பயிற்சிகளும் கொடுக்கப்படுகின்றன. இவற்றில் தொடைப்பகுதியில் உள்ள தசைகளுக்கு காலை மடக்கி நீட்டும்(flexion, extension) பயிற்சிகளும் கொடுக்கப்படுகின்றன. இவர்களுக்கு நடப்பதற்கு நடை உபகரணங்கள்(walking aids- walking frame, crutch, walking stics) பயன்படுத்தப்படுகின்றன

 

3 – 5ம் நாள் நோயாளி மருத்துவமனையில் இருந்தால் அல்லது இல்லாவிட்டால் செய்யவேண்டிய பயிற்சிகள், இயன்முறை மருத்துவர்களின் அறிவுரைப்படி செய்யப்படவேண்டும். மேலும் இவர்கள் பாதைகளில் சரியாக நடப்பதற்கு பயிற்சிகளும்(walking training), படிகளில் நடப்பதற்கு பயிற்சிகளும் கொடுப்பார்கள்.

5 நாள்  முதல் 4 வாரங்கள்: நோயாளிகள் சரியாக செய்யப்படும் பயிற்சிகளை தொடர்ந்து செய்வதால், மேலும் கால் பகுதியில் உள்ள தசைகள் வலுப்பெறும். இதனால் நடப்பதற்கு நோயாளிகளால் பயன்படுத்தப்படும் உபகரணங்கள், சற்று மாற்றப்பட்டு கைத்தடிகள்(canes or stics) அல்லது ஒரு கால் உள்ள கைத்தடிகள்(single pod stic) பயன்படுத்தப்படுகின்றன. இவர்கள் நன்றாக பத்து நிமிடங்களுக்கு மேல் நிற்க முடியும். ஆனால் இவர்களுக்கு முழங்காலை மடக்கி, நீட்டும் சில பயிற்சிகள் கொடுக்கப்படுகின்றன. சைக்கிள் போன்ற பயிற்சி உபகரணங்கள் அல்லது குவாடிருசெப்ஸ் டேபிள்(quadriceps) எனப்படும் உபகரணங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

நான்கு வாரங்கள் கழித்து இயன்முறை மருத்துவர் பரிந்துரைப்படி நடை உபகரணங்கள் மாற்றப்பட்டு, தசை பயிற்சிகளும்(muscle training) கொடுக்கப்படும். இதனால் ஒரு சில மாதங்களாக அல்லது ஆறு வாரங்களில் நோயாளிகள் தனது தினசரி வாழ்க்கையில் எந்த ஒரு சிரமமும் இன்றி பங்கேற்க முடியும். ஒரு சிலருக்கு வயது போன்ற காரணங்களால், இவர்கள் தங்கள் தினசரி வாழ்க்கையை பயிற்சிகளோடு செய்ய வேண்டியது இருகலாம். இதனால் நோயாளிகள் தங்களது தினசரி வேலைகளை செய்ய முடியும். பொதுவாக இயன் முறை சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட காரணங்கள் என்னவென்றால், நோயாளிகள் எந்த ஒரு வலியும் இல்லாமல் பிரச்சினைகளும் இல்லாமல் தனது தினசரி வாழ்க்கையை தொடர்வது என்பதுதான் முக்கிய கொள்கையாக இருக்கும்.

மேலே உள்ளவை சில வலைத்தளங்களில் இருந்து சேகரிக்கப்பட்டவை.

நன்றி,

SRIKUMARAN PHYSIOTHERAPY CLINIC & FITNESS CENTER

Comments

Popular posts from this blog

முதுகு வலி மற்றும் முதுகு தண்டுவட வலி உள்ளவர்களுக்கு கடைபிடிக்க வேண்டிய சில வழிமுறைகள்....

  முதுகு வலி மற்றும் முதுகு தண்டுவட வலி உள்ளவர்களுக்கு கடைபிடிக்க வேண்டிய சில வழிமுறைகள் ....     பொதுவாக முதுகு வலி என்பது இன்றைய காலகட்டத்தில் பல பேருக்கு மிக அதிகமாகவே காணப்படுகிறது. இவ்வாறு வலி இருக்கும் பொழுது என்ன மாதிரியான வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்பதை கீழே விரிவாக பார்க்கலாம்.   பொதுவாக முதுகு வலி ஆரம்பிக்கும் பொழுது அவற்றை உதாசீனப்படுத்தாமல் அருகில் உள்ள மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது மிகவும் முக்கியம். மேலும் முதுகு வலி ஏற்படும் பொழுது அவற்றுக்கு தேவையான மருத்துவம்(medical management), இயன்முறை மருத்துவம்(physiotherapy treatment), பயிற்சிகள்(exercises) அல்லது அறுவை சிகிச்சை(surgery) மற்றும் புனர்வாழ்வு சிகிச்சைகள்(Rehabilitation) போன்றவை தேவைப்படலாம். மேலே கண்ட மருத்துவத்தில் ஏதாவது ஒன்றை எடுத்துக் கொள்ளும் பட்சத்தில் மேலும் முதுகு வலி வராமல் பாதுகாத்துக் கொள்ளவும், நமது அன்றாட வேலைகளை தொடர்ந்து செய்யவும், மருத்துவ உபகரணங்களை பயன்படுத்திக் கொள்ளவும்...

MOTOR NEURON DISEASE (MND)

INTRODUCTION:   Motor neuron diseases are a group of conditions that cause the nerves in the spine and brain to progressively lose function. They are a rare but serious and incurable form of progressive neuro-degeneration. Motor neurons are nerve cells that send electrical output signals to the muscles, affecting the muscles’ ability to function. Motor neuron diseases (MND) are a group of conditions that affect the nerve cells that send muscles to the brain. There is a progressive weakening of all the muscles in the body, which eventually affects ability to breathe. Genetic, viral, and environmental issues may play a role in causing MND. There is no cure, but supportive treatment can improve the quality of life. Life expectancy after diagnosis ranges from 3 years to longer than 10 years. Classification: Amyotrophic lateral sclerosis (ALS)                              Hereditary spastic paraplegia (HSP) ...

பாலிமையோசைட்டிஸ் - Polymyositis

  பாலிமையோசைட்டிஸ் (Polymyositis) என்பது ஒரு அரிய, நாள்பட்ட தன்னுடல் தாக்க நோய் (autoimmune disease) ஆகும். இந்த நோய் உடலில் உள்ள தசைகளை பாதிக்கிறது, குறிப்பாக தோள்பட்டை, இடுப்பு, தொடை மற்றும் கழுத்து போன்ற உடலின் மையப்பகுதியில் உள்ள தசைகளை பலவீனப்படுத்துகிறது. "பாலி" என்றால் "பல", "மையோ" என்றால் "தசை", மற்றும் "சைட்டிஸ்" என்றால் "வீக்கம்"(inflammation)  என்று பொருள். ஆகையால், பாலிமையோசைட்டிஸ் என்றால் "பல தசை வீக்கம்" என்று பொருள் கொள்ளலாம். நோய் அறிகுறிகள்: பாலிமையோசைட்டிஸின் முக்கிய அறிகுறி படிப்படியாக தசை பலவீனம் அடைவதுதான். மற்ற அறிகுறிகள் பின்வருமாறு இருக்கலாம்: தசை பலவீனம்: இது வாரங்கள் அல்லது மாதங்களில் படிப்படியாக மோசமடையும். குறிப்பாக, நாற்காலியில் இருந்து எழுவது, படிக்கட்டுகளில் ஏறுவது, கைகளை தலைக்கு மேலே உயர்த்துவது போன்ற செயல்கள் கடினமாக இருக்கும். தசை வலி மற்றும் மென்மை: சிலருக்கு தசை வலியும், தொடும்போது மென்மையும் இருக்கலாம், ஆனால் இது தசை பலவீனத்தைப் போல் பொதுவானது அல்ல. சோர்வு: காரணமின்றி தொடர்ந்து சோ...