முன்னுரை:
ஆஸ்துமா வியாதி பாதிக்கப்படும் பொழுது நுரையீரல் மற்றும் சுவாச பாதைகளில வீக்கம்(epithelial lining cell swelling) ஏற்படுவது மற்றும் மார்புக் கூட்டை சுற்றியுள்ள தசைகள் இறுக்கம்(bronchospasm) ஏற்படும் பொழுது சுவாசப் பாதையின் காற்று சென்று வருவதை தடை செய்யப்பட்டு மூச்சிரைப்பு(wheezing) ஏற்படுகிறது.
நோய் பற்றிய விளக்கம்:
ஆஸ்துமா என்பது பொதுவாக சுவாசப் பாதைகளல் நீண்ட நாட்கள் கழித்து பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. மேலும் பாதிக்கப்பட்ட சுவாசப்பாதை மற்றும் நுரையீரல் உட்புறமாக சுருங்கும். மேலும் சுவாசப்பாதை சுருங்குவதால் மூச்சுக்காற்று உள்ளே வெளியே சென்று வருவது சற்று கடினமாகிறது.
ஆஸ்துமா பாதிக்கப்பட்டவர்களின் அனுபவபூர்வமான சில அறிகுறிகள்:
மார்பு இறுக்கம்
மூச்சிரைப்புமூச்சு விடுவதில் சிரமம்
இருமல் முக்கியமாக வரட்டு இருமல்
அதிக அளவு சளி மற்றும் எச்சில்
சில நேரங்களில் ஆஸ்துமா பாதிப்பு மிகவும் அதிக அளவு வரும்பொழுது இது உயிர் கொள்ளும் பிரச்சனையாகிறது.
சில நோயாளிகளில் சுவாச பாதைகள வீக்கம் இருப்பதால் மூச்சுக்காற்று நுரையீரலை சென்றடவது குறைகிறது. இதனால் ஆக்சிஜன் ரத்தத்தில் கலக்கும் அளவு குறைந்து உடல் உறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் குறைகிறது. இதுவே பாதிப்பு அதிகமாகும் பொழுது உயிர் கொள்ளும் பிரச்சனை ஆகிறது.
ஆஸ்துமா வகைகள்:
ஆஸ்துமா பொதுவாக நாட்பட்ட வியாதியாக இருந்தாலும், இது சிறு வயது முதல் வயதானவர்கள் வரை எந்த வயதிலும் பாதிக்கிறது. பாதிப்பை கூறிய காரணங்கள் பல வகையாக இருந்தாலும் சிலவற்றை காரணங்களாகக் கூறலாம்.
அவைகள்
தூசு
சில வகை கிருமிகள்
விலங்குகளின் முடியில் இருந்து வரும் தூசுகள் மற்றும்
புகை பிடித்தல் போன்றவை.
குழந்தைப் பருவத்தில் ஏற்படும் ஆஸ்துமா:
பொதுவாக குழந்தைப் பருவத்தில் ஆஸ்துமா 5 முதல் 14 வயதில் வரை ஏற்படுகிறது. மேலும் இது 9.7% குழந்தைகளை பாதிக்கிறது ஆனால் பூஜ்யம் முதல் நான்கு வயது வரை உள்ள குழந்தைகளை மிகவும் குறைந்த அளவான 4.4 சதவீதம் மட்டுமே பாதிக்கிறது. இந்த ஆஸ்துமா பாதிப்புகள் குழந்தைகளுக்கு ஏற்படுவதற்கு சில காரணங்களாக கூறப்படுகின்றன.
அவைகள்
சுவாசப் பாதையில் ஏற்படும் நோய்த்தொற்று மற்றும்
அடிக்கடி ஏற்படும் ஜலதோஷம்
புகைப்பிடித்தல் மற்றும்
இரண்டாம் தர புகையிலை புகைத்தல்
ஒவ்வாமை
காற்றில் மாசு மற்றும் ஓசோன் பிரச்சனகள்
மாசு கொண்டே தூசுகள்
குளிர்ந்த காற்று
திடீரென ஏற்படும் காலநிலை சீதோசன மாற்றம்
அளவுக்கு அதிகமான மன இறுக்கம் அல்லது மன உளைச்சல்
தவறான மற்றும் வழிகாட்டுதல் இல்லாத உடற்பயிற்சி
பொதுவாக குழந்தைகள் ஆஸ்துமா போன்றவற்றால் பாதிக்கப்படும் பொழுது இது உயிர்காக்கும் பிரச்சனையாக மாறுகிறது. இவற்றில் மருத்துவர்கள் அவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகள் மற்றும் பரிந்துரைகள் போன்றவற்றை கடைபிடிப்பது மிகவும் முக்கியம்.
பருவத்தில் ஏற்படும் ஆஸ்துமா(Adulthood asthma):
பொதுவாக ஏற்கனவே மேலே குறிப்பிட்டபடி ஆஸ்துமா பாதிப்பு எந்த வயதிலும் ஏற்படுகின்றன. பொதுவாக விடலைப் பருவத்தில் ஆஸ்துமா பாதிப்பு தென்படுவதில்லை. இருந்தாலும் சில காரணிகளின் பாதிப்புகளால் இந்தப் பருவத்தில் ஆஸ்த்மா பாதிப்பு ஏற்படுகின்றன.
அவைகள்
சுவாசப் பிரச்சினைகள் ஒவ்வாமை மற்றும்
தூசு போன்ற பகுதிகளில் வாழும் பொழுது சில வகையான ஹார்மோன் பாதிப்புகள்
உடல் பருமன்
மன இறுக்கம் அல்லது மன அழுத்தம்புகைப்பிடித்தல்.
தொழில் ரீதியான ஆஸ்துமா(occupational related asthma);
பொதுவாக வேலை செய்யும் இடங்களில் ஏற்படும் ஒவ்வாமை பாதிப்புகள் மற்றும் மாசு பகுதியில் வேலை செய்வது போன்றவற்றால் இந்த தொழில் ரீதியான ஆஸ்துமா ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. வேலை செய்யும் இடங்களில் சில ஒவ்வாமை ஏற்படுத்தக்கூடிய காரணிகளால் மூச்சுக்குழாய் மற்றும் நுரையீரல் பாதிக்கப்பட்டு ஆஸ்த்துமா ஏற்படுகின்றது.
அவ்வாறு ஒவ்வாமை ஏற்படுத்தக்கூடிய சில காரணிகள்...
பேக்கரி
மாவு அரைக்கும் இயந்திரம் மற்றும் சமையலறைகளில் வேலை செய்பவர்களுக்கு
பொதுவாக பண்ணை மற்றும் விவசாய சார்ந்த தொழில்கள்
ஆஸ்துமாவை தூண்டும் சில தொழில் காரணிகள்-
வாகன பழுது நீக்கும் தொழிற்சாலைகள் மற்றும் வாகன உற்பத்திதொழிற்சாலைகள்பொறியியல் மற்றும் உலகம் சார்ந்த தொழிற்சாலைகள்
தச்சு வேலை மற்றும்
மரம், மரங்கள சார்ந்த தொழிற்சாலைகள்
மின்னணுவியல் மற்றும் மின்சார உபகரணங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை
முடி திருத்தும் நிலையங்கள்
நீச்சல் குளங்கள்
மிக அதிகப்படியாக பாதிப்பு ஏற்படக்கூடிய காரணங்கள்:
புகைப்பிடித்தல்
ஒவ்வாமையால் ஏற்படும் ஜலதோஷம்
ஆஸ்துமா மற்றும் சுற்றுச்சூழலை ஒவ்வாமை மற்றும் அதன் பின்புலம்
பொதுவாக ஆஸ்துமா சிறுவயதில் இருக்கும் பொழுது மேலே கூறிய சில காரணிகள் அடிக்கடி ஏற்படும்பொழுது அல்லது பாதிக்கப்படும் பொழுது பருவ காலத்தில் ஏற்படும் ஆஸ்துமாவாக மாறுகிறது.
பருவகால நிலைகளில் ஏற்படும் ஆஸ்துமா:
இதுபோன்ற சில பருவ கால நிலை மாற்றங்களில் ஏற்படும் ஆஸ்துமா பொதுவாக சுற்றுப்புறச் சூழ்நிலைகளில் மாற்றம் ஏற்படும் பொழுது ஏற்படுகிறது. எடுத்துக்காட்டாக குளிர்ந்த காற்று, வசந்த காலத்தில் ஏற்படும் காற்று போன்றவை சுவாசப் பாதைகளல் பாதிப்புகளை ஏற்படுத்தி ஆஸ்துமாவை அதிகப்படுத்துகின்றன.
மேலும் சில ஆஸ்துமா பாதிப்பு உள்ளவர்களுக்கு அறிகுறிகள் தென்படுவதில்லை. மற்றும் ஆஸ்துமா எப்பொழுதும் ஒவ்வாமை, மாசு போன்றவற்றால் ஏற்படுவதும் இல்லை. இதனடிப்படையில் ஒவ்வாமையால் ஏற்படும் ஆஸ்துமா, மற்றும் ஒவ்வாமையால் ஏற்படாத ஆஸ்துமா என்று பிரிக்கப்படுகிறது.
காரணங்கள் மற்றும் தூண்டல்கள்:
பொதுவாக மருத்துவ தொழில் துறையில் ஆஸ்துமா ஏற்படுவதற்கு உரிய சரியான காரணங்கள் கண்டறியப்படவில்லை. ஆனாலும் பரம்பரை மற்றும் சுற்றுப்புற சூழ்நிலைகள் ஆகிய காரணங்களால் ஆஸ்துமா ஏற்படுவதாக நம்பப்படுகிறது.
பேறு காலத்தின் பொழுது ஏற்படும் ஆஸ்துமா:
சில ஆராய்ச்சிகளின் அடிப்படையில் பேறு காலத்தின் பொழுது புகைப்பிடிப்பவர்களுக்கு ஆஸ்துமா ஏற்படும் விகிதத்தை அதிகப்படுத்துவதாக கூறப்படுகிறது. மற்றும் பேறுகாலத்தின் பிற்காலங்களில் கர்ப்பிணி பெண்கள் ஆஸ்துமா அறிகுறிகள் அதிகமாகவும் கூறப்படுகிறது.
நன்றி….
மேலே உள்ளவை சில வலைத்தளங்களில் இருந்து சேகரிக்கப்பட்டவை.
Comments