அவைகள்:
நிலைப்படுத்துதல்(positioning):தீப்புண்கள் ஏற்பட்டவர்களுக்கு பாதிக்கப்பட்ட பகுதிகள் சரியான நிலையாக(proper postioning) வைக்கப்படவண்டும். அவ்வாறு நிலைபடுத்துவதற்கு தலையணை, மண் மூட்டைகள்(sand bags), பஞ்சு போன்ற முக்கோண தலையணைகள்(foam wedge pillows) மற்றும் ஸ்பிளின்ட்(splint) எனப்படும் உபகரணங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவை அனைத்தும் நோயாளிகளுக்கு பயன்படுத்தப்படும் பொழுது சற்று வலி அதிகமாக(severe pain) அல்லது அசௌகரியமாக(discomfort)ஏற்படலாம். இவ்வாறு எலும்பு மற்றும் மூட்டு பகுதிகள் நிலைப்படுத்தி வைக்கும் பொழுது, கை, கால்கள் அனைத்து உறுப்புகள் மடங்கிய(flexed) நிலையில் இல்லாமல் தசை இறுக்கங்கள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள முடியும். மேலும் தொடர்ந்து உடல் பாகங்கள் நிலைப்படுத்தப்படும் பொழுது, வலி, அசைவுகள் போன்றவை அதிகம் பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்ள முடியும்.
மேலும் உடல் பகுதிகள் மடங்கிய நிலையில் இல்லாமல் அதற்கு எதிர் நிலையில்(antiflexed) வைக்கப்படவேண்டும். அவ்வாறு வைக்கப்படும் பொழுது தசை மற்றும் மூட்டு பகுதிகள் இறுக்கங்கள் ஏற்படாமல் மீட்சி(exension) பெறும். இவ்வாறு செய்யப்படும்போது எதிர் காலங்களில் ஏற்படும் உடல் மற்றும் தசை, மூட்டு பகுதியில் ஏற்படும் பிரச்சனைகளை தவிர்க்க முடியும். இது மிக முக்கியமாக செய்யப்பட வேண்டும்.
ஸ்பிளின்ட்(Splint):
பொதுவாக ஸ்பிளின்ட் எனப்படும் உபகரணங்கள் ஆரம்ப காலகட்டத்திலேயே பயன்படுத்தப்படுகின்றன. ஸ்பிளின்ட் பயன்படுத்தப்படும் பொழுது உடற்பயிற்சிகள்(excersise) செய்யப்பட்டு அத்தோடு உடல் மூட்டுப் பகுதிகள் இயற்கையான நீட்டப்பட்ட(natural extended) நிலையிலேயே வைக்கப்படுகின்றன. இவை அனைத்தும் ஒரு நாளைக்கு 4 முதல் 5 தடவை இயன்முறை பயிற்சிகளாக கொடுக்கப்படுகின்றன.
மின்னணு மற்றும் இயன்முறை சிகிச்சை(electrotherapy and physical therapy):
பொதுவாக இயன்முறை சிகிச்சை வழங்கப்படும் பொழுது மின்னனு சிகிச்சையும் சேர்ந்து கொடுக்கப்படுகின்றன. அவ்வாறு கொடுக்கப்படும் மின் சிகிச்சைகள் தீப்புண்களில் ஏற்படும் தசை இறுக்கங்கள், தழும்புகள் மற்றும் வலி குறைய பயன்படுத்தப்படுகின்றன.
டேன்ஸ்(TENS) எனப்படும் மின்னனு சிகிச்சை, தப்பான மூட்டு நிலையிலிருந்து(malposition) அல்லது வலியிலிருந்து பாதுகாக்க பயன்படுத்தப்படுகின்றது.
அல்ட்ரா சவுண்ட்(Ultrasound) எனப்படும் மீஒலி சிகிச்சை அதிகமான வலி கொண்ட மூட்டு பகுதியில்,கை, மற்றும் விரல்களில் உள்ள மூட்டு பகுதியில் வலி குறைவதற்கு பயன்படுத்தப்படுகின்றது.
கிரையோதேரபி(cryotherapy) எனப்படும் பனிக்கட்டி மூலமாக கொடுக்கப்படும் சிகிச்சை, தழும்புகள் மற்றும் கீலாய்டு எனப்படும் திசுக்களுக்கு கொடுக்கப்படுகிறது.
உடற்பயிற்சிகள் மற்றும் நடைப் பயிற்சிகள்(exercise and locomotion training):
தீப்புண்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆரம்பகாலங்களில் வலி மற்றும் வீக்கங்கள் இருப்பதால் நடப்பது, மூட்டுகளை அசைப்பது, போன்றவை மிக கடினமாக இருக்கலாம். ஆகவே மறுவாழ்வு சிகிச்சையில் முதற்கட்டமாக மூட்டுப்பகுதியில் அசைவுகள்(joint movements) மற்றும் தசைகளின் வலிமை(muscles strength) போன்றவை நிலைநிறுத்தபடுகின்றன. அவைகள் நிலைநிறுத்த இயன்முறை மருத்துவர்கள்(Physiotherapist) மூலம் கொடுக்கப்படும் மூட்டு அசைவு சிகிச்சை(passive joint movements) அல்லது பயிற்சிகள்(excersise) ஒரு நாளைக்கு 2 முதல் 3 தடவை கொடுக்கப்பட வேண்டும். இதுபோன்ற சிகிச்சைகள் அவசர சிகிச்சை அறைகளில்(ICU- intensive cae unit) இருக்கும் நோயாளிகள், படுத்த படுக்கையாக(bed ridden) இருக்கும் நோயாளிகள், மயக்க நிலையில்(coma stage) உள்ள நோயாளிகள் போன்ற அனைவருக்கும் கொடுக்கப்பட வேண்டும். ஆனால் அதிகம் பாதிக்கப்படாமல் இருக்கும் நோயாளிகள் தானாக கைகால்களை அசைக்க கூடிய நோயாளிகள் போன்றவர்களுக்கு தானாக செய்யக்கூடிய பயிற்சிகள்(active exercise) கொடுக்கப்படுகின்றன.
ஒருவேளை பாதிக்கப்பட்டவர்களுக்கு மூட்டுப் பகுதிகள் முழுமையாக இயக்க முடியாமல் அல்லது அசைவுகள் இல்லாமல் இருக்கும் பட்சத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூட்டுப் பகுதியை அசைப்பதற்கு பயிற்சிகளும்(joint mobilization) மற்றும் தசை நீட்சி(stretching) பயிற்சிகளும் கொடுக்கப்படுகின்றன. மேலும் இவ்வாறு கொடுக்கப்படும் பயிற்சிகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிக அதிக அளவு வலி இருந்தாலும் கொடுக்கப்பட வேண்டும். இதுபோன்று கொடுக்கப்படுவதால் தசை இறுக்கங்கள் மற்றும் தப்பான மூட்டு நிலையிலிருந்து பாதுகாக்கப்படுகிறது. மேலும் தசை நீட்சி பயிற்ச்சிகள் அடிக்கடி கொடுக்கப்படும் பொழுது, மூட்டு பகுதி பாதுகாக்கப்படுகிறது. தீப்புண்கள் ஏற்பட்டவர்களுக்கு தழும்புகள் மற்றும் தசை இறுக்கங்கள் ஏற்படுவது தடுக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் எவ்வளவு சீக்கிரமாக வேகமாக நடக்க வைக்க முடியுமோ அவ்வளவு விரைவாக அவர்களை நடக்க வைப்பது மிகவும் நல்லது. ஏனென்றால் பாதிக்கப்பட்டவர்கள் நீண்ட நாட்கள் படுத்த படுக்கையாக இருக்கும் பொழுது உடல் உள்ளுறுப்புகளின் செயல்பாடுகள் மாறுவது அல்லது குறைவது மற்றும் வலியை தாங்கக்கூடிய சக்தியை(pain toleration) இழப்பது போன்றவை ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. பொதுவாக இடுப்புக்கு கீழ் பகுதியில் அல்லது கால்கள் பாதிக்கப்பட்ட இருக்கும்பொழுது பாதிக்கப்பட்டவர்களுக்கு காலணிகள்(foot wears) அணிவது நல்லது. காலணிகள் அதற்கு ஏற்றார்போல் மாறுபாடு செய்து அணிவிப்பது போன்றவை செய்யப்பட வேண்டும். மேலும் கால்களில் அல்லது பாதங்களில் தீப்புண்கள் இருந்தால் அணிவிக்கப்படும் காலணிகளில் உள்பறமாக ஜிங்க் ஆக்சைடு(zinc oxide) எனப்படும் மருந்து கொண்ட மருத்துவ பட்டைகள்(bandage) உள்ளே கொடுக்கப்பட்டு காலணிகள் அணிவிக்கப்பட வேண்டும். அவ்வாறு அணிவிக்கப்படும் பொழுது தீப்புண்கள் விரைவாக குணமடைகின்றன.
தீப்புண்கள் பாதிக்கப்பட்டவர்களை சற்று அதிகமாக கண்காணித்து குணப்படுத்த வேண்டும். ஏனென்றால் இவர்களுக்கு முந்தைய நாட்களில் ஏற்பட்டிருக்கும் உடல் நோய்கள் அவற்றைப் பற்றிய வரலாற்றுப்(past medical history) பகுதிகளை கருத்தில் கொள்ள வேண்டும். பொதுவாக
- இதய மற்றும் நுரையீரல் நோய்கள்(cardio pulmonary disease) உள்ளவர்கள்
- தசை அல்லது எலும்பு பகுதிகள் வெளியில் தெரியும்படியான(open muscle and bone burns) தீப்புண்கள் உள்ளவர்கள்
- செயற்கை சுவாசம் (ventilators)bமற்றும் ரத்த நாளங்களில் குழாய்கள்( intravenous line) செலுத்தப்பட்டு உள்ள நோயாளிகள்
மேலே கூறப்பட்ட மற்ற பாதிப்புகள் கொண்ட தீப்புண்கள் உள்ளவர்களை மிகவும் சற்று அதிகமாக கண்காணிக்கப்பட வேண்டும்.
கைகளுக்கான சிகிச்சைகள் அல்லது பயிற்சிகள்(Hand management and exercise):
கைகளில் தீப்புண்கள் ஏற்படும் பட்சத்தில் கைகளில் உள்ள சிறுசிறு மூட்டுப் பகுதிகள், தசை, மற்றும் தசை நார்கள்(tendons) போன்றவை மிக எளிதாக பாதிக்கப்படுகின்றன. அவ்வாறு தசை இறுக்கங்கள் அல்லது மூட்டு இறுக்கங்கள் போன்றவை ஏற்படாமல் தடுப்பதற்கு ஸ்பிளின்ட் எனப்படும் உபகரணங்கள் மற்றும் விரல் தசை நீட்சி பயிற்சிகள் போன்றவை சரியாக கொடுக்கப்படுகின்றன.
பயிற்சிகளின் முரண்பாடுகள்(contraindication for exercises):
தீப்புண்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைவருக்கும் பயிற்சிகள் சரியாக கொடுக்கப்பட வேண்டும். சில எதிர்பாராத நேரங்களில் பயிற்சிகள் கொடுக்க முடியாத சூழ்நிலைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன.
அவைகள்:
ரத்த நாளங்கள் மற்றும் ரத்தக் குழாய்களில் ஏற்படக்கூடிய நோய்கள்(vascular disease e.g varicose vein, deep venin thrombosis) அல்லது பிரச்சினைகள்
புதியதாக எடுத்து வைக்கப்பட்ட (fresh skin graft)அல்லது குணமாகாத தோல் கிராஃப்ட்(unhealed skin graft)
மிக அதிக நீர்ச்சத்து குறைபாடு(severe dehydration)
செப்டிசீமியா(septicemia) எனப்படும் மிக மிக அதிக பாதிப்பு கொண்ட நோய்த்தொற்று(infection)
திறந்த நிலையில் உள்ள மூட்டு பகுதி மற்றும் எலும்புகள்(open bone and joints).
இடை நிலை மற்றும் நீண்ட கால மறுவாழ்வு சிகிச்சைகள்(subacute and longterm Rehabilitation):தீப்புண்கள் குணப்படுத்த பட்டு மூன்று அல்லது ஆறு மாத காலங்களுக்கு இந்த சிகிச்சை கொடுக்கப்படுகின்றன. பயிற்சிகள் மற்றும் பயிற்சிகள் சார்ந்த போன்ற உபகரணங்கள் கொடுக்கப்பட்டு தீப்புண்கள் பாதிக்கப்பட்டவர்கள் குணமடைந்து வீடு திரும்பும் தருவாயில் அவர்களுக்கு சமூகம்(social problems) மற்றும் பொருளாதாரம்(economic problems) சார்ந்த பிரச்சினைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. அவ்வாறு மேலே கூறிய பிரச்சனைகளை சரி செய்வதற்கு, தீப்புண்ணால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவைப்படும் அல்லது தங்களால் செய்யக்கூடிய இயன்ற வேலைகளை ஏற்படுத்தி கொடுக்கும் அளவுக்கு அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும்.
இயன் முறை சிகிச்சை மற்றும் மறுவாழ்வு சிகிச்சை நேர்த்தியாக கொடுக்கப்பட்ட பின்பும் பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்களுக்கு தேவையான அன்றாட வேலைகளை(ADL -activities of daily living) செய்வதற்கு மற்றும் பொழுதுபோக்கு போன்ற அம்சங்களை(recreational activites) செய்வதற்கு, மறுவாழ்வு சிகிச்சையில் தொழில்முறை சார்ந்த பயிற்சியாளர்கள்(occupational therapist) மூலம் பயிற்சிகள் மற்றும் ஸ்பிளின்ட் போன்ற உபகரணங்கள் கொடுக்கப்படுகின்றன.
நோக்கங்கள்(goals):
தங்களுக்கு தேவையான அன்றாட தினசரி வேலைகளை தாங்களாக செய்து கொள்வது
- முழுமையான மூட்டு அசைவு(complete joint range), முழுமையான தசை வலிமை(maximum muscle power) மற்றும் உடல் உறுப்புகளின் வடிவம்(limb figure) மற்றும் கை கால்களின் ஒருங்கிணைந்த அசைவுகள்(co-ordinated movements)
- தீப்புண்கள் முழுமையான குணமடைதல்(complete healing) மற்றும் குறைந்த அளவு தழும்புகள்(less scarring)
- குடும்பம் பொருளாதாரம் தன்னுடைய பாதிப்புகள் போன்றவைகளை நினைத்து ஏற்படும் மன அழுத்தங்களை(mental stress) குறைப்பதற்கு உளவியல் ஆலோசனைகள்(psychological counselling) தொடர்ந்து வழங்கப்படுவது.
- பாதிக்கப்பட்டவர்கள் பள்ளி(school), கல்லூரி(college) அல்லது அலுவலகங்கள்(office) மற்றும் தங்களுடைய பணிகளை(job) தொடர்வது
- பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய உடல் பிம்பத்தை(body imaging) சரியாக மாற்றுவது மற்றும் உடல் சார்ந்த பிரச்சனைகளை சரி செய்வது போன்றவை (முக்கியமாக இளைய வயது பருவத்தினருக்கு)
மேலாண்மை மற்றும் இயன்முறை சிகிச்சைகள்(Management and physical therapy treatment):
இடைக்கால மற்றும் நீண்டகால மறுவாழ்வு சிகிச்சைகள் மிகவும் முக்கியமாக அனைத்து தீப்புண்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்கப்படுகின்றன. அவற்றில் புதியதாக எடுத்து வைக்கப்பட்ட கிராப்ட்ஸ்(fresh grafts) மற்றும் அவற்றுக்கு தேவையான பயிற்சிகள், உடற்பயிற்சிகள, தசை நீட்சி பயிற்சிகள், ஸ்பிளின்ட் போன்ற உபகரணங்கள் போன்றவைகள் கொடுக்கப்படுகின்றன.
பொதுவாக தீப்புண்கள் பாதிக்கப்பட்டு வேற்று இடத்திலிருந்து தோல் எடுத்து(skin graft) வைக்க பட்டவர்களுக்கு சாதாரண தோல் போல் அல்லாமல் சற்று வித்தியாசமாக உணரப்படுகின்றன. மேலும் தோல் பகுதி சற்று கடினமாக(thickended), மீள்வினை தன்மை வேறுபாடு(altered elasticity) அல்லது நிறம் தோற்றத்தில் வேறுபாடு(altered colouration) போன்றவை ஏற்படுகின்றன. இதுபோன்ற பிரச்சனைகளை சரி செய்வதற்கு தசை மற்றும் தோல் பகுதிகளுக்கு மாசாஜ்(massage) பயிற்சிகள், களிம்புகள்(creams) மற்றும் சோற்றுக்கற்றாழை(aloe vera) மற்றும் பிற எண்ணெய் வித்துக்கள்(oil substances)
மூட்டுப்பகுதியில் முழுமையான மூட்டு அசைவுகளை கட்டுக்குள் வைத்திருப்பது, மிக முக்கியமானதாக இருக்கிறது. ஏனென்றால் இந்த இடை கால மற்றும் நீண்ட கால மருத்துவ சிகிச்சையில் தசை இறுக்கங்கள், திசுக்களின் இறுக்கங்கள் ஏற்படும்பட்சத்தில் இயன்முறை பயிற்சிகள் மிக அழுத்தமாக(vigorous physioatheapy) கொடுக்கப்படுகின்றன. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மூட்டு மற்றும் தசை பகுதிகள் அதனுடைய இயக்கங்கள் முன்னேற்றம் அடைகின்றன. அவ்வாறு செய்யப்படும் பொழுது தோல் மாற்று அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டிருந்தால் சற்று கவனமாக இயன்முறை சிகிச்சைகள் கொடுக்கப்படுகின்றன.
கடைசியாக தசை வலிமையை(muscle strengthening) முன்னேற்றம் அடைய கூடிய பயிற்சிகள் மற்றும் இதய சுவாச பயிற்சிகள்(cardio respiratory exercise eg aerobic exercise) கொடுக்கப்படுகின்றன. இவற்றுடன் உளவியல் சார்ந்த பிரச்சனைகளுக்கு ஆலோசனைகள்(psychological counselling) மூலம் நிவாரணம் அளிக்கப்படுகிறது. சில நேரங்களில் தற்கொலை(sucide) எண்ணத்தினால் பாதிக்கப்பட்டு தீப்புண்கள் ஏற்பட்டவர்களுக்கு உளவியல் ஆலோசனைகள் மிக அதிக அளவு வழங்கப்படுகின்றன. மேலும் மனது இயக்கம் சார்ந்த பிரச்சினைகளுக்கும் உடல் மற்றும் மனம் சார்ந்த தளர்வடையச் (Relaxation techniques)கூடிய பயிற்சிகளும் இவர்களுக்கு கொடுக்கப்படுகின்றன. இவ்வாறு தற்கொலை எண்ணங்கள் தீப்புண்கள் ஏற்பட்டவர்களுக்கு தனிப்பட்ட(individual) மற்றும் குழு(group counselling) சார்ந்த உளவியல் ஆலோசனைகள் வழங்கப்படுவதோடு உடல் ஆரோக்கியம்(health education) தொடர்பான ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.
தொழில் சார்ந்த மறுவாழ்வு(vocational rehabilitation):
பின்வரும் அனைத்து விஷயங்களும் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய பணி மற்றும் பணி சார்ந்த வேலைகளை செய்வதற்கும் அல்லது புதிதாக தொழில்களை கற்றுக் கொள்வதற்கும் பயிற்சிகள் (new job learnng)எடுத்துக் கொள்வதற்கும், மறுவாழ்வு சிகிச்சைகள் கொடுக்கப்படுகின்றன.
அவைகளில் மிக முக்கியமாக பின்வருவனவற்றை கவனமாக கடைப்பிடிக்க வேண்டும் வேண்டும்.
கை மற்றும் விரல்களின் அசைவுகள், வலிமைகள் மற்றும் ஒருங்கிணைந்த அசைவுகளை மதிப்பீடு செய்து கொளவது(asssesment of hand and fingers)
அறுவை சிகிச்சை(surgery) மற்றும் ஸ்பிளின்ட்(splint) போன்ற உபகரணங்களை பயன்படுத்துவதற்கு தயார் செய்வது
தனக்கு தேவையான தற்காப்பு விஷயங்களை செய்துகொள்வது(self activity)
ஓரிடத்திலிருந்து மற்றொரு இடங்களுக்கு நகர்வது(transfer) அல்லது நகர்வதற்கு தேவையான பயிற்சிகளை திறம்பட செய்துகொள்வது.
வேலை வாய்ப்புகள்(job opportunities) மற்றும் சுய தொழில்(self employing) சார்ந்த வாய்ப்புகளை உருவாக்குவது மற்றும் பயன்படுத்திக்கொள்வது.
முடிவுரை(conclusion):
மேலே கூறிய அனைத்து மருத்துவ சிகிச்சைகள், இயன்முறை சிகிச்சைகள் மற்றும் மறுவாழ்வு சிகிச்சை கொடுக்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் வேலைகளை செய்யும் அளவிற்கு பயிற்றுவிக்கப்படும். தீப்புண்கள் பாதிக்கப்பட்ட பிறகு, சிறுசிறு பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு ஆளாக்கப்படுகிறார்கள். மிக முக்கியமாக உணர்ச்சிகள் பாதிப்பு(abnormal sensation), வெப்பம்(heat), குளிர்(cold) போன்றவற்றை தாங்க இயலாமை(untolerable) மற்றும் பாதத்தில் ஏற்படும் பிரச்சினைகள், மன அழுத்தம் போன்ற உளவியல் பிரச்சினைகள், மற்றும் சமூகம், பொருளாதாரத்தினால் ஏற்படும் பிரச்சினைகள்.
பாதிக்கப்பட்டவர்கள் தீப்புண் களினால் தாங்கள் பாதிக்கப்பட்ட பின்பு சமூகம் மற்றும் குடும்பத்தின் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சினைகள், மிக முக்கியமாக இருக்கின்றன. இவ்வாறு ஏற்படும் பிரச்சினைகளுக்கு உளவியல் ஆலோசனைகள், பொருளாதார ஆலோசனைகள், அன்றாட தேவைகளை நிவர்த்தி செய்ய தேவைப்படும் பயிற்சிகள், மற்றும் வேலை வாய்ப்புகள் அல்லது சுயதொழில் சார்ந்த வேலைவாய்ப்புகளை சரியாக செய்யும் பொழுது மறுவாழ்வு சிகிச்சை(completion of Rehabilitation) முழுமையடகிறது. தீப்புண் களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்கப்படும் தொழில் சார்ந்த தொழில் முறைப் பயிற்சிகள்(occupational therapy), இயன்முறை பயிற்சிகள்(physiotherapy), மருத்துவ சிகிச்சைகள்(medical management) மற்றும் மறுவாழ்வு சிகிச்சைகள்(rehabilitation programme) மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.
THOSE ABOVE ARE COLLECTED FROM SOME WEBSITES AND TRANSLATED.
THANK YOU,
SRIKUMARAN PHYSIOTHERAPY CLINIC & FITNESS CENTER
Comments