Dr. M. RAJESH, PT, B.P.T, M.P.T(cardio-pulmonary)
SRIKUMARAN PHYSIOTHERAPY CLINIC & FITNESS CENTER
சயாட்டிகா :
சயாட்டிகா:
சயாட்டிகா என்பது கீழ்முதுகுப்பகுதியில்(lower back) வலி ஆரம்பித்து புட்டம்(gluteal), தொடையின் பின்பகுதி அல்லது முன்பகுதியில் மற்றும் முழங்கால் கீழ்ப்பகுதியில் உள்ள சதை(calf) வரை பரவும் ஒரு பிரச்சனையாகும். இவற்றுக்கு முக்கிய காரணம் என்னவென்றால் சயாட்டிக்(sciatic) எனப்படும் நரம்பு, முதுகுத் தண்டுவடத்தில் இருந்து வெளியில் வரும் உள்ளது பகுதியில் ஏற்படும் அழுத்தம் காரணமாக வலி ஏற்படுகின்றது.
காரணங்கள்: பொதுவாக இந்த சயாட்டிகா பிரச்சினைகளுக்கு பல காரணங்கள் உள்ளன முதலில் முதுகு தண்டுவடப் கீழ் பகுதியில் ஏற்படும் எலும்பு தேய்மானம், ஜவ்வு பிதுங்குதல் ( disc prolapse), நரம்பு அழுத்தம்( nerve compression ), மற்றும் முதுகு வளைவு அதிகமாக இருத்தல்(lumbar lordosis) மற்றும் முதுகு எலும்பு நகர்ந்திருப்பது (spodylolysthesis) போன்ற பிரச்சினைகளாக இருக்கலாம். அவற்றில் சில பிரச்சினைகளுக்கு மூல காரணங்களாக கூறப்படுவது, மிக அதிக பளு தூக்குவது, மிக நேரம் மோட்டார் வாகனங்கள் இயக்குவது, நீண்ட நேரம் நின்று வேலை செய்வது அல்லது நீண்ட நேரம் சரிவர இல்லாத நிலையில் அமர்ந்து வேலை செய்வது போன்ற பல காரணங்கள் உள்ளன.

பிசியோதெரபி சிகிச்சை:
சயாட்டிகாவிற்கு பிசியோதெரபி சிகிச்சை மிகவும் முக்கியமானது. இதில் முக்கியமாக சயாட்டிகா பற்றிய அறிவுரைகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கற்றுத் தரப்படும். மேலும் வலி வராமல், உடற்பயிற்சி செய்து கொண்டு இருந்தால் சயாட்டிகா பிரச்சினை அதிகமாகமல் பார்த்து கொள்ள முடியும்.
பிசியோதெரபி சிகிச்சையில் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் சயாட்டிகா பற்றிய அறிவுரைகள் வலியை வராமல் தடுக்கும்.
லம்பார் டிராக்ஷன்(lumbar traction) எனப்படும் முதுகு தண்டுவடத்தை இழுத்து விடும் பிசியோதெரபி சிகிச்சை சயாட்டிகா வலியை குறைக்க பயன்படுகிறது. மேலும் இதனுடன் ஐ.எஃப்.டி (IFT- interferencial therapy)எனப்படும் மின்சிகிச்சை சேர்த்து பயன்படுத்தும் போது விரைவான வலி நிவாரணம் கிடைக்கிறது.
மசாஜ் தெரபி(massage therapy) முதுகு வலியை குறைக்க பயன்படுகிறது. மசாஜ் தெரபி உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரித்தல், தசை நார்களை தளர்வடைய(relax) செய்தல், மற்றும் என்டார்பின் எனப்படும் வேதிப் பொருளை சுரக்க செய்தல் போன்ற நன்மைகளை செய்கிறது.
வலியைக் குறைக்க உடற்பயிற்சிகள் ஒரு திறமிக்க அணுகுமுறையாக இருக்கலாம், ஆனால் அது அங்கீகரிக்கப்பட்ட உடற்பயிற்சி நிபுணரின் (physiotherapist) கண்காணிப்பின் கீழ் செய்யப்பட வேண்டும்.
THOSE ABOVE ARE COLLECTED FROM SOME WEBSITES.
THANK YOU,
SRIKUMARAN PHYSIOTHERAPY CLINIC & FITNESS CENTER
- Get link
- X
- Other Apps
Labels
Tamil
Labels:
Tamil
- Get link
- X
- Other Apps
Comments