முன்னுரை..
பி ஏ சோல்டர்(peri arthritis shoulder) எனப்படும் தோள்பட்டை இறுக்கம்(shoulder stifness) அல்லது தோள்பட்டை வலி(shoulder pain) எனப்படும் பிரச்சனை பலருக்கு காணப்படுகிறது.
இந்த தோள்பட்டை இறுக்கம் ஆரம்பத்தில் தோள்பட்டை வலி மற்றும் தோள்பட்டை அசைவின்மை தோள்பட்டை அசைவதில் பிரச்சனைகள் போன்றவை இருக்கலாம். இது போன்று ஏற்படுவதற்கு காரணங்கள் நிறைய இருந்தாலும் தோள்பட்டை மூட்டு அதைச் சுற்றி அமைந்துள்ள ஜவ்வு(ligaments and joint capsules) பகுதிகள் போன்றவை இயல்பாகவே பாதிக்கப்படுகிறது. மேலும் தோள்பட்டை மூட்டு பகுதியில் தொடர்ந்து அடிபடுதல்(recurrent shoulder joint injury) அல்லது வேறு ஏதாவது பிரச்சனைகள் இருந்தாலோ நாளடைவில் தோள்பட்டை மூட்டு ஜவ்வு மற்றும் அதைச் சுற்றி உள்ள தசைப் பகுதிகள் இறுக்கமாக்கப்படுகின்றது(fibrosis).
இதனால் தோள்பட்டை வலி அதிகரித்து நாளடைவில் தோள்பட்டை அசைவுகளில் சற்று குறைபாடு(shoulder movement defects) ஏற்படுகிறது. பொதுவாக பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்டை அணிவது, பனியன் அணிவது, கையை 90 டிகிரிக்கு மேலே(shoulder abduction >90 degree) அல்லது தலைக்கு மேலே தூக்கும்பொழுது வலி இருப்பது(pain in overhead abduction) போன்றவை காணப்படுகிறது.
காரணங்கள்:
பொதுவாக தோள்பட்டை இறுக்கம் ஏற்படுவது தோள்பட்டை மூட்டு பகுதியில் அமைந்துள்ள ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பகுதிகள் அல்லது அமைப்புகள் தொடர்ந்து பாதிப்பு ஏற்படுவதனால் ஏற்படுகிறது. இதற்கு ஜெனிடிக் அல்லது ஜீன்கள் சம்பந்தப்பட்ட மற்றும் சூழ்நிலை சம்பந்தப்பட்ட காரணிகளாக இருக்கலாம்.
தோள்பட்டை மூட்டு பகுதிகளை பாதிக்கப்பட்ட மூட்டு பகுதிகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது தோள்பட்டையை சுற்றி அமைந்துள்ள தசைப் பகுதிகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இந்த தசைப்பகுதிகள் பாதிக்கப்படும் பொழுது மூட்டின் உள்ளே அமைந்துள்ள சவுப்பகுதி மற்றும் மூட்டு பகுதிகள் குருத்து எலும்பு பகுதிகள்(cartilage) அசைவின்றி இறுகுவதற்கு அல்லது அசைவுகள் குறைவதற்கு வாய்ப்புகளாக அமைகின்றன.
இது போன்ற காரணங்கள் இரண்டு வகையாக பிரிக்கப்படுகின்றன
1.முதல் நிலை காரணங்கள்(primary causes)
2. இரண்டாம் நிலை காரணங்கள்(secondary causes).
முதல் நிலை காரணங்கள்:
பொதுவாக தோள்பட்டை இருக்கும் தோள்பட்டை வலி போன்றவைகள் ஏற்படுவதற்கு காரணங்கள் பல பேருக்கு கண்டறிய முடியவில்லை(idiopathic causes). ஏனென்றால் தோள்பட்டை பகுதியில் அமைந்துள்ள சிறு சிறு உள்பகுதிகள்(micro structures) அடிபடுவது தற்செயலாகவோ அல்லது பாதிக்கப்பட்டவர்கள் அறியாமலேயே நடைபெறுகிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தோள்பட்டை வலி அல்லது தோள்பட்டை இறுக்கம் எவ்வாறு ஏற்படுகிறது என்பது தெரியாமல் போகிறது.
இரண்டாம் நிலை காரணங்கள்:
இரண்டாம் நிலை காரணங்களாக தோள்பட்டை பகுதி பாதிக்கப்படுவதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. பொதுவாக ஏற்கனவே வேறு ஏதாவது பாதிப்புகள்(pre history injury) இருப்பின் அதனைத் தொடர்ந்து தோள்பட்டை அசைவுகள் அதைச் சுற்றி உள்ள தசைகள் மற்றும் எலும்பு பகுதிகள், செவ்வுகள் பாதிக்கப்படும். இவ்வாறு பாதிக்கப்படும் பொழுது தோள்பட்டை முற்றிலுமாக அசைவின்றி போவதற்கும் வலி ஏற்படுவதற்கும் காரணங்களாகிறது. எடுத்துக்காட்டாக தோள்பட்டை மூட்டு பகுதியில் அடிபடும் பொழுது அல்லது விபத்து ஏற்படும்பொழுது அல்லது விளையாட்டு காயங்கள்(sports injury) அல்லது தோள்பட்டையில் செய்யப்படும் அறுவை சிகிச்சைகள்(post operative stiffness), பக்கவாதம்(stroke) போன்றவைகளை கூறலாம். இவ்வாறு ஏற்கனவே முதன்மையாக காரணங்கள் இருந்தால் தோள்பட்டை மூட்டு பகுதி பாதிப்பதற்கு ஏதுவாக அமைகிறது. இது போன்ற காரணங்கள் இருப்பின் தோள்பட்டை அசைவுகள் நாள்பட குறைந்து, தோள்பட்டை அசைவுகள் இன்றி தோற்பட்டை அசைவு குறைந்து போவதற்கு வாய்ப்பாக அமைகிறது. இது மேலும் வலி மற்றும் அன்றாட வேலைகளில் பாதிப்புகளை ஏற்படுகிறது.
மூன்றாம் நிலை காரணங்கள்:
பொதுவாக நம் உடல் பகுதியில் எந்த ஒரு பாதிப்புகளும் ஏற்படும் நிலையில் அவைகளுக்கு முதன்மை மற்றும் இரண்டாம் நிலை காரணங்கள் இருக்கலாம். ஆனால் தற்போது தோள்பட்டை இருக்கும் தோள்பட்டை வலி போன்றவை போன்ற பாதிப்புகளுக்கு மூன்றாம் நிலை காரணங்களாக சிலவற்றை கூறலாம்.
1.உடல் உள்ளுறுப்புகளில் ஏற்படும் மாற்றங்களால் (metabolic changes) ஏற்படக்கூடிய நோய்கள்- சர்க்கரை நோய்
2. தோள்பட்டை மூட்டு பகுதிக்கு நேரடியாக சம்பந்தம் இல்லாமல் ஏற்படக்கூடிய சில-இதய நோய் உள்ளவர்கள், கழுத்து வலி, பக்கவாதம், பார்க்கின்சன் எனப்படும் வாதம் போன்றவை இருப்பின் தோள்பட்டை பாதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளது.
3. தோள்பட்டை மூட்டு பகுதியில் உள்பகுதியில் ஏற்படக்கூடிய சில பிரச்சனைகள் தோள்பட்டை வலி மற்றும் தோள்பட்டை இறுக்கம் வருவதற்கு காரணமாக அமைகிறது- தோள்பட்டை மூட்டு சுற்று தசைகள்(shoulde rotator cuff) மற்றும் அதன் பாதிப்புகள், இருதலை தசை(biceps muscle) அவற்றில் ஏற்படும் தசை கற்றைகளில்(tendinitis) ஏற்படும் பிரச்சனைகள், கால்சியம் போன்ற உப்புகள் படிவது(calcification) மற்றும் அதிகப்படியான அசைவுகளினால்(overuse disorders) ஏற்படக்கூடிய மூட்டு தேய்மானம்.
மேலே கூறப்பட்ட மூன்றாம் நிலை காரணங்கள் 3 காரணங்களும் இருப்பின் தோள்பட்டை வலி அல்லது தோள்பட்டை இறுக்கம் ஏற்படுவதற்கு வாய்ப்பாக அமைகிறது.
பாதிப்பு காரணிகள்:
1. சர்க்கரை நோய்- 20% சர்க்கரை நோயாளிகள் தசை தோள்பட்டை இறுக்கம் மற்றும் தோள்பட்டை வலியினால் பாதிக்கப்படுகின்றனர்
2. பக்கவாதம்
3. தைராய்டு பிரச்சனைகள் உள்ளவர்கள்
4. தொடர்ந்து தோள்பட்டை மூட்டு பகுதியில் அடிபடுவது
5. பார்க்கின்சன் எனப்படும் வாத நோய்
6. மொத்த தோள்பட்டை மூட்டு பகுதிகளின் பாதிப்பு
7. காசநோய்
8. மூச்சரைப்பு மூச்சிரைப்பு, இருமல் மற்றும் குறைவான மூச்சு விடுதல்(short breath)
9. புற்றுநோய்
10. ரொம்டைட் ஆர்த்தரைடீஸ்(Rheumatoid arthritis) எனப்படும் முடக்குவாதம்
11. ஒன்றுக்கும் மேற்பட்ட மூட்டு பகுதிகள் பாதிக்கப்படுவது
12. காய்ச்சல் குளிர் ஜுரம் மற்றும் அதிகளவு வலி
மிக அதிக அளவு பாதிக்கப்படக்கூடிய பதிக்கப்படக்கூடியவர்கள்(High-risk population):
சர்க்கரை நோய் உள்ளவர்கள்-பொதுவாக தோள்பட்டை இருக்கம் மற்றும் தோள்பட்டை வலி போன்ற பாதிப்புகள் சர்க்கரை நோய் உள்ளவர்களில் 10 முதல் 22 சதவீதம் பாதிக்கின்றது.
குறைந்த அளவு தைராய்டு உற்பத்தி- குறைந்த அளவு தைராய்டு(hypothyroidism) உற்பத்தி அல்லது தைராய்டு ஹார்மோன்களின் உற்பத்தி உள்ளவர்களுக்கு எளிதாக தசை வலி மற்றும் அதிகளவு வலி மற்றும் இறுக்கங்கள் எளிதாக ஏற்படுகிறது. இவை அனைத்தும் தோள்பட்டை இருக்கம் மற்றும் தோள்பட்டை வலி ஏற்படுவதற்கு வாய்ப்பாக அமைகிறது.
வளர்ச்சிதை மாற்றத்தில்(altered metabolism) ஏற்படும் குறைபாடு- பொதுவாக உடலில் ஏற்படும் வளர்சிதை மாற்றத்தில் பிரச்சனைகள் இருப்பின் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளுக்கும் தேவையான சத்துப் பொருட்கள் சென்றடைவதில் குறைபாடு ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. மேலும் வளர்சிதை மாற்றம் குறைபாடு இருப்பின் இரண்டாம் வகை சர்க்கரை நோய்(type II diabetic) ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன.
அறிகுறிகள்:
தோள்பட்டை வலி இதன் முக்கிய அறிகுறியாக காணப்படுகிறது. மற்றும் தோள்பட்டை அசைவு சிறிது சிறிதாக குறைந்து காணப்படும். மேலும் தோள்பட்டை அசைவு தானாகவோ(active movement ), ஏதாவது துணையுடன்(external support with movement) அசைக்க முயலும் பொழுது அசைவு குறைந்து காணப்படும்.
மிகவும் பொதுவாக தோள்பட்டை மூட்டு பகுதியின் வெளிப்புறமாக கையை சுற்றுவது(shoulder joint external rotation) மிகவும் குறைந்து அல்லது அசைவு இல்லாமலே இருக்கும்.
தோள்பட்டை இருக்கம் பாதிக்கப்பட்டவர்கள் கூறும் பாதிப்புகள் என்னவென்றால் தலை வாருவது, அல்லது தலைக்கு மேலே செய்யும் அசைவுகள் குறைந்து இருப்பது, ஆடை உடுத்தும் பொழுது ஏற்படும் அசவுகரியம்(difficulty in dressing), மற்றும் வேறு ஏதாவது உடைகள் அல்லது அணிகலன்களை பயன்படுத்துவதில் சிரமம் இருப்பதாக கூறுகின்றனர். இதில் மிகவும் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் பாதிக்கப்பட்டவர்கள் தானாகவே தோள்பட்டை அசைவுகளை குறைத்துக்(self limitin movement) கொள்கிறார்கள். மேலும் தோள்பட்டை அசைவு குறைவது 6 மாதங்கள் முதல் 11 வருடங்களில் மிகவும் சிக்கலாக முடிகிறது. அவ்வாறு மூட்டு அசைவின்றி தோள்பட்டை இறுக்கம் அதிகமாகும் பொழுது வழி குறைந்து காணப்படுகிறது.
தோள்பட்டை இறுக்கம் பல நிலைகளை கடந்து பல பிரச்சினைகளை மற்றும் அறிகுறிகளை தோற்றுவிக்கிறது.
ஆரம்ப நிலை மற்றும் வலி நிலை(initial and pain stage):
இந்த நிலை ஏற்படும் பொழுது ஆரம்பத்தில் வலி தோன்றுவது மற்றும் தானாக வலி குறைவது போன்றவை இருக்கும். அடுத்ததாக வலி குறையும் பொழுது அதனுடைய சேர்ந்து தோள்பட்டை மூட்டு பகுதி அசைவு சற்று குறையும். மேலும் சில சமயங்களில் இந்த அசைவுகளை நிவர்த்தி செய்ய அசைவு கொடுக்கும் பொழுது சில நேரங்களில் வலி மீண்டும் மீண்டும் தோன்றுகிறது. மற்றும் தூக்கம் தடைபடுவது போன்றவை இரண்டு முதல் 9 மாதங்கள் கழித்து காணப்படுகிறது.
தோள்பட்டை இறுக்கம் மற்றும் வலி நிலை(shoulder stiffne with painful stage):
ஆரம்ப நிலையை அடுத்து தோள்பட்டை ஜவ்வு பகுதி கொஞ்சம் கொஞ்சமாக இறுக ஆரம்பித்து, தோள்பட்டை அசைவு கொடுக்கும் பொழுது மிக அதிக அளவு வலி ஏற்படுகிறது. இந்த இரண்டாம் நிலை முதல் நிலை முடிந்ததிலிருந்து 12 மாதங்களில் ஏற்படுகிறது.
மூன்றாம் மற்றும் தோள்பட்டை இறுக்கம்:
பொதுவாக இந்த நிலையில் தோள்பட்டையில் அன்றாட வேலைகள் செய்யும் அளவுக்கு தேவைப்படக்கூடிய அசைவுகள் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து ஐந்து முதல் 25 மாதங்களில் மூட்டு அசைவு முற்றிலுமாக குறைந்து விடுகிறது. இவ்வாறு முற்றிலும் மூட்டு அசைவு தடைப்படும் பொழுது 15 சதவீத பாதிக்கப்பட்டவர்களுக்கு இது நீண்ட கால பாதிப்பாக(long term disorder) அல்லது நீண்ட கால குறைபாடு(long term disability) காணப்படுகிறது. இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் சரியான மருத்துவம் சரியான காலங்களில் எடுத்துக் கொள்ளும் பொழுது தோள்பட்டை இறுக்கத்தினால் ஏற்படக்கூடிய நீண்ட கால பாதிப்புகளை சரி செய்ய முடிகிறது. இந்த நீண்ட கால பாதிப்புகளை சரி செய்யும் பொழுது பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவைப்படும் அன்றாட வாழ்க்கையில் செய்யக்கூடிய தோள்பட்டை அசைவுகளை(acitivities of daily living) நிலை நிறுத்த முடியும்.
Comments