கோடைகாலங்களில் உடலில் ஏற்படும் நீர்ச்சத்து குறைபாடுகளை குறைப்பது அல்லது காப்பது எவ்வாறு....
முன்னுரை:
பொதுவாக கோடை காலங்களில் உடலில் உஷ்ணம் அதிகமாகும் பொழுது உடலில் உள்ள நீர் சத்துக்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்குகிறது. அதனால் அந்த நீர்ச்சத்து இழப்பு மற்றும் அதனால் ஏற்படும் பிரச்சனை தவிர்ப்பதற்கு, உடலில் நீர்ச்சத்து இழப்பு ஏற்படாமல் காப்பது மிகவும் அவசியம்.
அதற்கான சில குறிப்புகள் கீழே தரப்பட்டுள்ளன.....
தேவையான அளவு நீர் அருந்துவது...
அதாவது உடலுக்கு தண்ணீர் மிகவும் இன்றியமையாதது. இது உடலுக்கு அவ்வப்போது தாகம் எடுக்கும் பொழுது நீர் அருந்துவது உடலில் நீர்ச்சத்து இழப்பை தடுக்கிறது. மேலும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவருக்கும் உடலில் நீர் சத்து இழப்பு சீராக இருப்பது கிடையாது. ஏனென்றால் ஒவ்வொருவருக்கும் உடல் உழைப்பை பொறுத்து, உடலில் ஏற்படும் வியர்வை மற்றும் உடல் வெப்பம் போன்றவை மாறுபடுகின்றது. அதனால் உடலுக்கு தேவையான அளவு நீர் அருவது அருந்துவது மிகவும் இன்றியமைதாக உள்ளது.
உடற்பயிற்சி செய்வதற்கு முன்னும் பின்னும் நீர் அருந்துவது...
உடற்பயிற்சி செய்யும் பொழுது உடலில் ஏற்படும் நீர்ச்சத்து இழப்பை தவிப்பதற்காகவே உடற்பயிற்சிக்கு முன்பே தேவையான அளவு நீர்ச்சத்து உள்ள பானங்கள் அல்லது நீர் அருந்துவது, நீர்சசத்து இழப்பை தவிர்க்கலாம். மேலும் வியர்வை மற்றும் உடல் வெப்பம் போன்றவற்றை, நீர் சத்து உடலில் உள்ள நீர்ச்சத்து சமன் செய்து திடீரென்று ஏற்படும் நீர் சத்து(instant dehydraion) இழப்பை குறைக்கிறது.
கார்பனேட்டட் மற்றும் செயற்கை சர்க்கரை கொண்ட பானங்களை தவிர்ப்பது...
அதாவது வெயில் காலங்களில் இயற்கையான பழச்சாறுகளை அருந்துவது மற்றும் தண்ணீர் அருந்துவது மிகவும் முக்கியம். பாட்டிலில் அடைக்கப்பட்ட கார்பனேட்டட் நீர் கொண்ட குளிர்பானங்கள் அல்லது செயற்கை சுவை, செயற்கை நிறமூட்டிகள் கொண்ட பானங்களை அருந்துவது கூடாது.
அதிக நீர்ச்சத்துக் கொண்ட உணவுப் பொருள்களை உண்பது....
அதிக நீர்ச்சத்து உணவு கொண்ட உணவுப் பொருள்கள் வெயில் காலங்களில் மிக அதிகமாகவே கிடைக்கிறது. எடுத்துக்காட்டாக தர்பூசணி, ஸ்ட்ராபெரி, எலுமிச்சை, ஆரஞ்சு, வெள்ளரி போன்றவற்றை கூறலாம்.
ஆல்கஹால் உணவுப் பொருட்களை குறைப்பது....
வெயில் காலங்களில் ஆல்கஹால் கொண்ட உணவுப் பொருள்களை எடுத்துக் கொள்ளும் பொழுது நீர்ச்சத்து இழப்பு மிக அதிகமாகிறது. அதனால் ஆல்கஹால் கொண்ட உணவுப் பொருட்களை தவிர்ப்பது மிகவும் நன்று.
மிகவும் லேசான மற்றும் காற்றோட்டமான ஆடைகளை அணிவது....
ஆடைகள் அணியும்பொழுது சற்று தளர்ந்த(loose-fitting) ஆடைகளை லேசான எடை(light weight) கொண்ட ஆடைகளை அணிவது மற்றும் காற்றோட்டமான(ventilated) ஆடைகளை அணிவது மிகவும் நன்மை பயக்கும். எடுத்துக்காட்டாக சொல்ல வேண்டும் என்றால் பருத்தியினால் நெய்த ஆடைகளை அணிவது உடல் வெப்பத்தை அதிகமாகாமல் மற்றும் வியர்வை அதிகமாகாமல் பார்த்துக் கொள்ளலாம்.
நேரடியான வெப்பத்தில் இருப்பதை தவிர்ப்பது....
வெயில் காலங்களில் அதிக நேரம் நின்று வேலை செய்வதை சற்று குறைத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் வெயில் நம் உடலில் நேரிடையாக படும்பொழுது உடலில் வெப்பம் அதிகமாகவதோடு மட்டுமல்லாமல் உடலின் வியர்வையையும் அதிகப்படுத்தும். ஆகையால் வேலை நேரங்களில் இடையிடையே சற்று நிழலில் ஓய்வில் எடுத்துவிட்டு வேலை செய்வது உடலுக்கு வெப்பத்தை அதிகமாகாமல் தவிர்த்துக் கொள்ள முடியும்.
சன் ஸ்கிரீன் பயன்படுத்துவது....
பொதுவாக இந்தியா போன்ற நாடுகளில் வெப்பத்தை தணிப்பதற்காக சன் ஸ்கிரீன் லோஷன்கள் மிக பரவலாக பயன்படுத்தப்படுவது கிடையாது இருந்தாலும் மிக அதிகமாக வெயில் காலங்களில் சன் ஸ்கிரீன் லோஷன்கள் பயன்படுத்துவதனால் தோளில் ஏற்படும் sun burns எனப்படும் வெப்பத்தினால் ஏற்படும் சிறு சிறு புண்களை தவிர்க்க முடியும். அவ்வாறு சன் ஸ்கிரீன் லோசன்கள் பயன்படுத்த முடியாத பட்சத்தில் தமிழ்நாடு போன்ற அதிக வெப்பம் கொண்ட மாநிலங்களில் தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் போன்றவற்றை பயன்படுத்துவது நன்று.
எலக்ட்ரோலைட் எனப்படும் தாது உப்புக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வது......
உடலில் வியர்வை அதிகமாக ஏற்படுவது சில காரணங்களால் இருக்கலாம். எடுத்துக்காட்டாக மிக அதிக நேரம் வேலை செய்வது, வெப்பமான சூழ்நிலையில் இருப்பது. அவ்வாறு வியர்வை அதிகமாகும் பொழுது உடலில் உள்ள தாது உப்பு சத்துக்கள் நீர்ச்சத்து இழப்போடு சேர்ந்து காணப்படுகிறது. இவ்வாறு தாது உப்புக்கள் இழப்பு ஏற்படும் பொழுது, எலக்ட்ரோலைட் அதிகம் கொண்ட பானங்களை அருந்தலாம்.
மேலே கூறப்பட்ட அனைத்து குறிப்புகளும் நீர்ச்சத்து இழப்பு குறைபாடுகளுக்காக பரிந்துரை செய்யப்பட்டவை. இவை அனைத்தும் கடைபிடிக்கும் பொழுது நீர்ச்சத்து இழப்புகளை தவிர்க்க முடியும். மேலும் இவை அனைத்தும் மருத்துவ குறிப்புகள் அல்ல. மற்றும் இந்த குறிப்புகளை கடைப்பிடிக்கும் பொழுது ஒரு சிலருக்கு சில உணவுப் பொருள்களால் ஒவ்வாமை ஏற்பட்டால் அவற்றை தவிர்த்து விட்டு உங்கள் உடலுக்கு ஏற்ற நீர்ச்சத்து அதிகம் கொண்ட உணவுப் பொருள்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.
நன்றி....
Comments